5961.
நின்றுமே தூதுரைத்து ஆள்காணாமல் நேர்மையுடன் ஓர்பக்கம் மறைவாய்நின்று
சென்றதொரு மாண்பருக்கு குறியுஞ்சொல்ல செம்மலுடன் ஜங்கமெனும் வேடம்பூண்டு
நன்னயமாய் கிருஷ்ணமுடி தானும்பூண்டு நலமான வுடுக்கைதனை கையிலேந்தி
பன்னவே பலபேர்கள் கூட்டத்தோடும் பாரினிலே பலகுறிகள் சொல்வான்பாரே
5962.
சொல்வானே யவரவர்கள் வார்த்தைகொண்டும் துப்புரவாய் முன்சொன்ன தூதைக்கொண்டும்
புல்லவே குறிமேடை தனிலிருந்து புகழான யாவேசம் வந்தாற்போல
மெல்லவே வாய்திறந்து பொன்னாங்காயை மேன்மையுடன் மென்றுதின்று உமிநீர்தன்னை
நல்லதொரு மதுவுண்ட நாற்றம்போல நயமுடனே வமனமது செய்வான்பாரே
5963.
செய்யவே மதுபானங் கொண்டுமல்லோ செயலான தன்னினைவு தனக்குமாறி
பையவே மயன்மீதில் வாடைகொண்டு பதறுதே தேகமது நிலைகொள்ளாது
உய்யவே யார்வந்து எதுகேட்டாலும் உத்தமனே சித்தடியேன் சொல்வேன்பாரு
துய்யபுகழ் பாண்டியன்போல் வுதாரம்பேசி துப்புரவாய் குறிசொல்வோன் கேட்பான்பாரே
5964.
பாரேதான் முன்சொன்ன வடையாளம்போல் பாங்குடனே மாண்பர்களை யுருட்டிப்பார்த்து
நேரேதான் ஈசானீய மூலையப்பா நெருக்கமுடன் நடுபந்தி தனிலிருக்க
சீரேதான் கட்டழகி மாதுதன்னை சிறப்பாக சித்தடியைக் கூப்பிடென்று
ஆரோதான் அம்மம்மா குறைகளொன்று ஆர்க்கமுடி போதாது என்பான்பாரே
5965.
என்னவே யுந்தனுக்குக் குறைகள்மெத்த ஏர்க்கமுடி போகாது ரோகம்மீறி
பன்னவே யுன்புருஷன் உன்னைவிட்டு பாரினிலே வனசாரி சென்றாரம்மா
துன்னவே மைந்தனுக்குக் கண்ணும்போச்சு துப்புரவாய்ப் பாவாடை ராயனுக்கு
மின்னவே கங்கணமுங் கட்டியல்லோ மிக்கான பொங்கல்களு மிட்டீர்காணே
5966.
காணவே ரிருபத்தோர் வாரமம்மா கட்டழகி காணிக்கை கொண்டுசென்று
தோணவே முதற்பூசை யுன்னுதென்று துப்புறவாய் சொல்லினதும் வுண்டோகூறும்
நாணவே குறுமுகத்தில் வந்துயென்னை நன்மையோ துன்மையோ வென்றுசொல்லி
பாணம்போல் மனதுருகி மனதுவந்து பாலகனே கேட்கவந்தீர் உண்மைதானே
5967.
உண்மையாம் என்குறிகள் பொய்யாதம்மா வுத்தமியே நாதாக்கள் வணங்குவார்கள்
வண்மையாங் கைகண்ட குறிதானென்று வளப்பமுடன் நிதியெனக்கு குடுப்பார்பாரு
திண்மையாம் பாதகாணிக் கையோடும் தீர்க்கமுடன் புஷ்பதாம் பூலத்தோடும்
தண்மையுடன் வேணவுப சாரத்தோடும் தட்டாமல் எந்தனுக்குத் தருவார்தானே
5968.
தட்டாமல் தருவதா னென்றுசொல்லி சர்க்கமிட்டு சித்தடிக்கு வாதுகூறி
கொட்டாவி கொண்டல்லோ மலையேறியப்பா கொப்பெனவே யான்போறோ மென்றுசொல்லி
சட்டமுடன் கற்பூர பழத்தைவாங்க சாங்கமுடன் வாய்தனிலே கொண்டுமல்லோ
வட்டபுரி யம்மனது பாதம்போறேன் வளமுடனே எல்லாரும் பணிவீர்தாமே
5969.
பணியவென்று குறிசொல்வோன் கூறும்போது பண்பான முழுமூடர் கழுதைமாண்பர்
அணியணியாய் குறிகேட்டு மெய்யென்றெண்ணி அவன்பாதந் தனில்விழுஞ் சண்டிமாண்பர்
மணியான தெய்வமது ஒன்றிருக்க மார்க்கமுடன் மதுகொள்ளும் மாண்பர்தம்மை
கணிதமுடன் குறிகண்டு குணமுங்கண்டு காசினியில் வந்துதித்த தெய்வந்தானே
5970.
தானான மதுகொள்ளும் மதுரைவீரன் தாரணியில் குறிசொல்லும் தெய்வமென்றும்
கோனான முழுமடையர் பேயரப்பா குவலயத்தில் கல்விகற்றும் பேயனாகி
மானான பஞ்சறிவுந் தானறிந்து மகத்தான சாத்திரங்கள் படித்துக்கேட்டு
பானாகக் குறிசொல்வோர் வலையிற்சிக்கி பண்புடனே மயங்குகிறார் மடையர்தாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக