பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6141-6150

6141.
வாழவே யின்னமொரு வதிதஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி யதிதவானே
தாழவே பெரியாளின் மூலியப்பா தாரணியில் சித்தர்களுங் காணமாட்டார்
மூழவே கண்டாலுங் கூறமாட்டார் முனையான மூலிதனை மறைத்துப்போவார்
சூழவே கானகத்தில் இருக்குமூலி சுடர்மூலி விடமூலிச் சுருதியாமே
6142.
சுருதியாம் மூலியுட வேகந்தன்னை சுந்தரனே என்னசொல்வேன் மச்சகேந்திரா
நிருதியாங் காடெல்லாந் திரிந்தாலுந்தான் நிஷ்களங்க மானதொரு மூலிதன்னை
குருதியா மூலிநிறமே யாகும் குவலயத்தில் கண்டவர்கள் விள்ளாரப்பா
பருதிமதி காணாத விருட்சத்தின்கீழ் படர்ந்துமே தானிருக்கும் மூலியாமே
6143.
மூலியாந் தழையதனைக் கொண்டுவந்து முனையான ரசமதுவுந் துலமேயாகும்
நாலிலோர் பங்கதுவுஞ் சூதந்தன்னை நலமுடனே தான்கூட்டி மத்தித்தேதான்
வேலியெனும் வீரமதை கால்தான்கூட்டி வேகமுடன் தான்குழைத்து மன்னாகேளு
பாலியெனும் பரித்தகட்டிற் பூசியேதான் பாங்கான ஓட்டிலிட்டு சீலைசெய்யே
6144.
சீலையது செய்தபின்பு ரவியில்வைத்து சிற்பரனே கோழியென்ற புடத்தைப்போடு
வேலையெனும் புடமதுவு மாறிப்பின்பு வேதாந்தத் தாயதனை மனதிலுன்னி
நூலையது வரன்முறையாய்த் தொகுப்புங்கண்டு நுட்பமுடன் கைபாகஞ் செய்பாகந்தான்
மாலையுடன் புடமாறி யெடுத்துப்பாரு மகத்தான யேமமது களங்கமாச்சே
6145.
ஏமமென்ற களங்கதனை எடுத்துமைந்தா எழிலான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
வாமமுடன் தானுருக்கிக் குருவொன்றீய மகத்தான வெள்ளியது யேமமாச்சு
நாமமென்ற வெள்ளியது பிறவித்தங்கம் நாதாக்கள் கண்டதொரு நாகத்தங்கம்
ஆமமென்ற தங்கமது வர்ணத்தங்கம் வப்பனே மூலிகையின் பெருமைபாரே
6146.
பெருமையா யனேகவித போக்குமுண்டு பேரான வழலைக்கு மூலிவேண்டும்
கருமமது தானகற்றி புண்ணியவானே காசினியில் சித்துபோல் பெயருங்கொண்டு
அருமையுள்ள சித்தருக்கு வடிபணிந்து வன்புடனே யேவலது மிகப்புரிந்து
ஒருமைபட வையகத்தில் எந்தநாளும் வுலகமதில் பெயருண்டாய் வாழ்வீர்தானே
6147.
தானான மாற்றதுவும் நூற்றிருபத்தெட்டு தண்மையுள்ள நாதாக்கள் செய்யுந்தங்கம்
கோனான சித்துமுனி யனேகமாக கூறினார் வெகுகோடி நூலிலப்பா 
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் கண்டறிந்த வேதைதன்னை
மானான மகதேவர் புண்ணியத்தால் மகிழ்ச்சியுடன் எந்நாளும் மணங்கொள்வீரே
6148.
மணமுடனே சிதாபாசம் மனதிலுன்னி மார்க்கமுடன் மதியமுர்தங் கொண்டுமல்லோ
கணலதுவும் நேராமல் யோகந்தன்னில் கழற்சியுடன் சிவயோக நிலையில்நின்று
குணமுடனே திரிகரண சொரூபராக குவலயத்தில் அஷ்டாங்க யோகங்கண்டு
வணங்கியே யஷ்டநிலை பதியைக்கண்டு வாமமுட னர்ச்சித்து வலுகொள்வீரே
6148.
உண்டான வித்தையது வனேகமுண்டு வுத்தமனே பார்க்கவென்றால் கண்கொள்ளாது
திண்டான வித்தையது சொல்வீரானால் தீரமுடன் செய்வதற்கு வையமில்லை
பண்டான குலைகளவு யில்லாவித்தை பட்சமுடன் எந்தமக்கு சொல்வீரானால் 
வண்மையுடன் செய்துமல்லோ வுந்தமக்கு வளமையுடன் காட்சியது தருவேன்பாரே
6149.
கொள்ளவே யின்னமொரு குணமுஞ்சொல்வேன் கூரான புலிப்பாணி புனிதவானே
விள்ளவே காடெல்லாந் திரிந்தாலுந்தான் விட்டகுறை யிருந்தாலே லயிக்கும்பாரு
வெள்ளமது கண்டாலே யழியுமூலி வேதாந்த தாயிருக்கு மூலியப்பா
எள்ளளவு குற்றமது நேராமூலி எழிலான கறுப்புக் கோடாலியாமே
6150.
கோடான சுழியென்ற மூலியப்பா கொற்றவனே கொண்டுவந்து சொல்லக்கேளும்
தாடான மூலிரசந் துலமேயாகும் தாக்கான வீரமது வராகனொன்று
கூடான சூதமது விராகனொன்று கொற்றவனே மூன்றையுந்தான் ஒன்றாய்க்கூட்டி
வாடாமல் வெண்ணையது போலரைத்து வளமான செம்பதனில் பூசிடாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக