6121.
போடேதான் புடமதுவும் மாறிப்பாரு பொங்கமுடன் மாற்றதுவும் என்னசொல்வேன்
கூடேதான் நவலோகஞ் செந்தூரங்கள் கூறான மூலிகைக்கு யீடுமுண்டோ
நாடேதான் மூலிவகை யறியா மாண்பர் நாட்டினிலிலே கெட்டார்கோடி
மாடேதான் குருமுடிக்கும் வகையுங்காணார் மட்டிகளாங் கூர்மையில்லா மாண்பர்தானே
6122.
மாண்பான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
காண்பான பொன்முசுட்டை மூலிதானும் காடெல்லாந் திரிந்தாலும் கிடையாதப்பா
மாண்பான காணாறு குகைகள்கண்டு மடிந்தவர்கள் கணக்கில்லை கோடாகோடி
சாண்பாம்பு நீளமப்பா மூலிதானும் சட்டமுடன் ஆணிவேர் அறாமற்றானே
6123.
ஆணியாம் மூலிகைக்கு மூலமப்பா வப்பனே சாணீளஞ் சொல்லலாகும்
காணிமுதல் காடெல்லாந் திரிந்திட்டாலும் கசடருக்கும் கிட்டாது கர்மிகட்கும்
வாணியாஞ் சரஸ்வதியாள் வீற்றிருக்கும் வளமான மூலியது பொன்முசுட்டை
பாணியது பூமிவளந் தன்னிலப்பா பாங்கான மூலியது காணாதன்றே
6124.
அன்றான மூலிகைதான் கொண்டுவந்து வப்பனே முப்பூவுங் கூடச்சேர்த்து
குன்றான சமூலமுடன் கூட்டியல்லோ கொற்றவனே குருத்தயில மாகக்கொண்டு
வென்றிடவே நவலோகத் தகட்டின்மேலே வீரமுடன் தயிலமதைப் பூசியல்லோ
சென்றிடவே பாண்டமென்ற வோட்டிலப்பா செம்மலுடன் சீலையது வலுவாய்ச்செய்யே
6125.
வலுவான சீலையது செய்தபின்பு மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
சுலுவான புடமதுவுங் கோழியாக துப்புரவாய்ப் போட்டெடுக்க ஏமந்தானும்
மலுவான தடமதுவும் பழுப்புமேறி மகத்தான மாற்றதுவும் ஐநூறாகும்
நிலுவையாம் பிரிதிவென்ற தங்கமப்பா நீதிசொல்ல யிதற்கீடு சொல்லொண்ணாதே
6126.
சொல்லவே யின்னமொரு மார்க்கங்கேளு சுந்தரனே புலிப்பாணி மன்னாபாரு
வெல்லவே நாதாக்கள் சொல்லவில்லை வேதாந்தத் தாயாருஞ் சொல்லவில்லை
புல்லவே காலாங்கி நாதர்தாமும் புகழான வகஸ்தியருங் கூறவில்லை
நல்லதொரு குளிகையது பூண்டதாலே நாட்டிலே நானுமல்லோ வறிந்திட்டேனே
6127.
அறிந்தேனே பொன்னினா வாரையப்பா வழகான மலைதோறும் சுனைகள்தோறும்
செறிந்துமே மூலிகையின் வுளவுபார்த்து செம்மலுடன் முப்பூவுங் களஞ்செடுத்து
முறிந்துமே போகாமல் தயிலமாக்கி மூர்க்கமது வாராமல் மனதிலுன்னி
குறித்ததொரு தயிலமதை யெடுத்துக்கொண்டு கொற்றவனே குடவனிலே பூசிடாயே
6128.
பூசிடவே குடவனிலே என்னசொல்வேன் புகழான நாதாக்கள் கூறவில்லை
காசியென்ற செம்பதுவுங் காணும்போது கனமான மாற்றதுவும் இருநூற்றெட்டு
மாசிபடா தங்கமது என்னசொல்வேன் மகத்தான பிரதிவென்ற தங்கமாச்சே
ஊசியென்னும் இரும்பினிலே தாக்கினாக்கால் வுத்தமனே சுயத்தங்கம் அயத்தங்கமாமே
6129.
தங்கமாம் இன்னமொரு வதிதஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மகனேகேளு
அங்கமாம் பொன்னூ மத்தையப்பா அழகான மூலியது கொண்டுவந்து
துங்கமாம் வழலையது வராகனொன்று துப்புரவாய் மூலியது சாற்றினாலே
பொங்கமுடன் மதியென்ற தகட்டிலப்பா புகழாகப் பூசிடவே யேமமாமே
6130.
ஏமமாங் காயாதி கொண்டமூலி எழிலான காயகற்ப மூலியாகும்
சாமமென்ற மூலியது வாணமூலி தாக்கான சித்தருண்ணும் மூலியாச்சு
வாமமுடன் மாற்றதுவும் எழுநூற்றெட்டு வளமான சுயத்தங்கம் பிறவித்தங்கம்
நேமமென்ற பூசைக்குக் கருவித்தங்கம் நெடிதான சித்துமுனி மூலியாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக