பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6131-6140

6131.
ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மன்னாகேளு
மூச்சடங்கி நெடுங்காலங் கொண்டசித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை
பாச்சலென்ற மூறலியது கறுங்கையானாகும் கதிரோனை கண்மறைக்கும் மூலிதானும்
மாச்சலென்ற மூலியது வதிதஞ்சொல்வேன் மகத்தான மாற்றதுவும் நூற்றெட்டுமாமே
6132.
எட்டான மூலியது துலமேயாகும் எழிலான பூநீறு களஞ்சியாகும்
சட்டமுடன் மத்தித்து வெண்ணையாக்கி சதிரான செம்பென்ற தகட்டிற்பூசி
திட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து சிறப்பான புடமதுவுங் கோழியாக 
வட்டமுடன் ஆறியபின் எடுத்துப்பாரு மகத்தான தங்கமென்ற செம்புமாமே
6133.
செம்பான செம்பதுவு மென்னசொல்வேன் செழிப்பான தங்கமென்ற செம்புமாச்சு
அம்பொன்னாந் தங்கமென்ற செம்புதன்னை வப்பனே பதிதனிலே நூற்றுக்கொன்று
கும்பிடவே தானுருக்கிக் குருவொன்றீய குற்றமற்ற மதியதுவுந் தங்கமாச்சு
வெம்பியதோர் விஷமதுவுந் தீண்டினாற்போல் வேதாந்த சித்தனுட தங்கங்காணே
6134.
காணவே தங்கமதை யென்னசொல்வேன் கைலாச நாதருந்தான் காணமாட்டார்
பூணவே சுயத்தங்கம் பிறவித்தங்கம் புகழான நாதாக்கள் செய்யும்தங்கம்
ஆணவங்கள் காவியங்கள் ஒடுக்குந்தங்கம் அரகரா யித்தங்கம் என்னசொல்வேன்
வேணதொரு நாதாக்கள் பாடுபட்டு வேதைமுகங் காணாமல் மறைத்திட்டாரே
6135.
மறைத்தாரே யித்தங்கம் ஆருக்கென்றால் மகத்தான சிவயோகி ஞானிகட்கும்
குறைந்தங்க மானாலே வையகத்தில் கொற்றவர்கள் மாண்பருக்கு விடுதியாகும்
நிறைந்ததொரு பரிபூரணத் தங்கமப்பா நீதியுள்ள ஞானிகட்கும் சிவயோகிக்கும்
மறைகொண்டு கானகத்தில் வாழுஞ்சித்து சீரான தேவரிஷி வாய்க்குந்தானே
6136.
வாய்க்குமே மற்றவர்க்குச் சித்தியில்லை மகத்தான கொற்றவருங் கண்டதில்லை
காய்க்குமே யிம்மூலி வேதைதன்னை காசினியில் ஆருக்குங் கிட்டாதப்பா
தோக்கமலம் வீற்றிருக்கும் அம்பாள்பாதம் தொழுதுமே பணிந்துநித்தம் சதாகாலந்தான்
சேய்போலே யம்பாட்குப் பணிகள்செய்து சித்தம்வர மனதுவந்து நடந்துகொள்ளே
6137.
கொள்ளவே யின்னமொரு வதிதஞ்சொல்வேன் கூரான புலிப்பாணி மகனேகேளு
எள்ளளவுங் கொளாறு நேராமற்றான் எழிலான கானகத்தின் மூலிகண்டேன் 
மெள்ளவே சிறியானின் நங்கைதன்னை மேன்மையுடன் கொண்டுவந்து கூறக்கேளும்
விள்ளவே மூலியது சாற்றிலப்பா வீரமுடன் சூதமதைத் தாக்கிடாயே
6138.
தாக்கவே சூதமென்ற ரசத்தைத்தானும் தண்மையுள்ள நாகமதில் தன்னிலூட்ட
நோக்கமுடன் நாகமது கண்ணடைந்து நெருங்கியே சவளையது போலேயாகும்
ஊக்கமுடன் சவளையது எடுத்துமைந்தா ஓகோகோ நாதாக்கள் சொன்னநீதி
தூக்கமது கொள்ளாமல் செம்பிலப்பா துப்புரவாய் நூற்றுக்கு ஒன்றுதாக்கே
6139.
ஒன்றான சவளையது கொடுத்தபோது வுத்தமனே மாற்றதுவு மென்னசொல்வேன்
வென்றிடவே மாற்றதுவும் அறுபத்துநான்கு வேதாந்தத் தாயாரும் வுரைத்தநீதி
குன்றினில் வாழ்சித்தர்முனி கூறாரப்பா குவலயத்தில் வுந்தனுக்காய் உரைப்பேன்யானும்
சென்றிடவே நெடுங்காலம் மலையில்காத்து செம்மலுடன் வாங்கியதோர் வேதைபாரே
6140.
பாரேதான் சிறியானின் நங்கைவேதை பாருலகில் யார்செய்வார் மாண்பரப்பா
நேரேதான் நாதாக்கள் செய்யும்வேதை நேர்மையுடன் கண்டறிந்து மனதுவந்து 
தீரேதான் உந்தமக்கு மனங்களித்து தீர்க்கமுடன் யான்கொடுத்த வேதைதன்னை
சீரேதான் மற்றவருங் காணாமற்றான் சீருலகில் புத்திவானாய் வாழ்வீர்தாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக