6061.
ஆச்சப்பா கரியல்லோ கோனானைத்தான் வப்பனே துரத்துகின்ற வேளைதன்னில்
பாச்சலுடன் கோனானும் ஓட்டங்கொண்டு பதுங்கியே செல்வதற்கு காளிகோயில்
மூச்சடங்கி யோடியல்லோ தேவஸ்தானம் முனையான காளியது மூலஸ்தானம்
மாச்சலது வருவதற்கு முன்னதாக மகத்தான சுரங்கவழி சென்றான்தானே
6062.
சென்றாரே கோனானுங் காளிபக்கல் செம்மலுடன் பதுங்கியல்லோ மூற்புறத்தில்
நின்றாரே கோனானும் உடல்நடுங்கி நீதியுடன் காளிபுறம் தன்னில்நிற்க
குன்றேறி வாழுகின்ற யானையப்பா கொற்றவனே சுரங்கம்வழி வருகலாச்சு
வென்றிடவே யானையது தும்பிக்கையால் வீரமுடன் சுரங்கமது நுழையலாச்சே
6063.
நுழையவே சுரங்கத்தின் வழியிலப்பா துண்மையுடன் தும்பிக்கை விட்டுமல்லோ
குழையவே தேகமது செல்லாமற்றான் கொற்றவனே யானையது நின்றுகொண்டு
தழைமேய்க்கும் கோனானைத் தும்பிக்கையால் தட்டாமல் நாற்புறமும் தடவும்போது
நுழையவே கதிதனக்கு இடமுமில்லை நுட்பமுடன் இடையூறு நேரலாச்சே
6064.
ஆச்சுதே தும்பிக்கை யாலேதானும் வப்பனே கோனானைத் தேடும்போது
மூச்சடங்கித் தானிருந்து கோனான்தானும் முனையான காளியின்மேல் சிந்தையாகி
மாச்சலது வாராமல் இருந்துகொண்டான் மகத்தான யானையுந்தன் தும்பிதன்னை
வீச்சலுடன் உச்சிலிங்கத் தேள்தானப்பா வீரமுடன் கொட்டிடவே சத்தமாமே
6065.
சத்தமது கொண்டிடவே யானைதானும் சதுரான மலைதனிலே கேட்கும்போது
முத்திபெறும் சித்தர்களின் கூட்டத்தார்கள் முனையான சத்தமதைக் கேட்டுமேதான்
புத்தியுடன் யானையது தன்னையல்லோ புகழான வுச்சிலிங்கத் தேள்தானப்பா
வெத்தியுடன் கொட்டியதோர் தேள்தானென்று வீரமுடன் சித்தர்களும் அறிந்திட்டாரே
6066.
அறிந்தாரே வுச்சிலிங்கத் தேள்தானப்பா வப்பனே கரிதனையே கொட்டிட்டென்று
செறிந்துமே மலைதனையே விட்டிறங்கி செம்மலுடன் யானையது பக்கல்வந்தார்
குறியான யானையது விஷமுமேறி கொப்பெனவே நெருப்பதுபோல் எரியுதங்கே
முறியுடனே தந்தமெல்லாம் பற்றியல்லோ முனையான கொழுந்துவிட்டு எரியலாச்சே
6067.
எரிந்துமே பிரிதிவென்ற சாம்பலாச்சு எழிலான யானையது மடிந்துபோச்சு
சொரிந்ததொரு சாம்பல்தன்னை சித்தர்கண்டு சோராமல் அவரவர்கள் பங்குவீதம்
புரிந்துமே பங்கதுவும் பகரும்போது புகழான கோனானும் சுரங்கத்தண்டே
வரிந்துமே கோனானை சித்தர்கண்டு வகையுடனே வளப்பமதைக் கேட்டிட்டாரே
6068.
கேட்டவுடன் கோனானும் மனம்நடுங்கி கெவனமுடன் சித்தர்கட்கு கூறலுற்றான்
வாட்டமுடன் மாடாடு மேய்க்கும்போது வளமான யானையது என்னைக்கண்டு
தாட்டிகமாய்ச் சீரலது மிகவுண்டாகி சட்டமுடன் எந்தனையும் துரத்தலாச்சு
கோட்டமுடன் யானையது வருகும்போது கொப்பெனவே யான்பயந்து ஓடினேனே
6069.
ஓடினேன் தங்குதற்கு இடமில்லாமல் ஓகோகோ நாதாக்கள் முனிவரேகேள்
தேடியே காளியது தேவஸ்தானம் தேற்றமுடன் யான்கண்டு மனதுவந்து
வாடியே சுரங்கமது வழியிற்சென்று மகத்தான காளியின்தன் பக்கல்நின்றேன்
நீடியே யானையது எந்தனைத்தான் நிஷ்களங்க மாகவல்லோ தேடலாச்சே
6070.
ஆச்சையா சித்துமுனி ரிஷியாரேகேள் ஆங்கார முள்ளதொரு யானைதானும்
மூச்சடங்கித் தும்பிக்கை தன்னினாலே முனையான சுரங்கத்தின் வழியினுள்ளே
பாச்சலுடன் தும்பிக்கை விட்டபோது பாழான சுரங்கமதில் மகிமையேதோ
கூச்சலுடன் வீரிட்டு யெறிந்துமேதான் கொப்பெனவே பரிதிவென்ற சாம்பலாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக