6161.
ஆச்சுதென்று விடுகாதே யின்னங்ககேளு ஆகாகா நாதாக்கள் மறைத்தஜோதி
வாச்சுதே சிவயோகிக் குகந்ததங்கம் வர்ணதங்க மிதற்கல்லோ யீடாமோதான்
போச்சுதென்று விடுகாதே புண்ணியவானே புகழான நாதாக்கள் ஆடுங்கூத்து
காச்சதே சிவந்த சித்திரமாமூலி கனகமென்ற வேதையது கைக்குள்ளாச்சே
6162.
உள்ளான பொருளெல்லாம் இதிலேதோயும் வுத்தமனே நாதாக்கள் கூறாரப்பா
கள்ளமின்றி நேராக யேமவித்தை காசினியில் சித்துமுனி செய்யும்மார்க்கம்
எள்ளளவும் பிசகதுவும் வாராதப்பா எழிலான வித்தையது என்னசொல்வேன்
கொள்ளைகொண்ட குருவினது வாக்குதானும் குவலயத்தில் பொய்யாது மெய்யதாமே
6163.
மெய்யான சிவந்த சித்திரமாமூலி மேதினியில் வெகுமாண்பர் காணாமற்றான்
பொய்யான மூலிதனை மெய்யென்றெண்ணி பொங்கமுடன் கெட்டலைந்தார் கோடிகோடி
துய்யதமிழ் சாத்திரங்கள் கூறும்வண்ணம் துப்புறவாய் தலைமாடு கால்மாடாக
செய்யதொரு காப்பேடு காணாமற்றான் சேனைதிரள் மாண்பர்களும் கெட்டார்தாமே
6164.
கெட்டாரே சிவந்த சித்திரமாமூலி கெடியான வையகத்தில் காணாமற்றான்
பட்டலைந்து மலைவளங்கள் குன்னுநாடு பாருலகில் தேடியல்லோ காணாமற்றான்
அட்டகிரி தான்புகழும் மேடுதன்னில் வன்பான மூலிதனைக் கண்டறிந்து
விட்டகுறை யிருந்ததொரு தன்மையாலே மேதினியில் சிலபேர்கள் கண்டார்தாமே
6165.
கண்டாரே காலாங்கி கிருபையாலே காசினியில் நாதாக்கள் இருக்கும்ஸ்தானம்
தொண்டுமிக செய்தல்லோ மூலிதன்னை தோறாது மனதுவந்து கற்பங்கொள்ள
சண்டமா ருதம்போலே மூலிகற்பம் சாங்கமுடன் இருவேளை யுண்டுமல்லோ
வண்டுமூது கோடாது போலவர்ணங்கொண்டு வையகத்தில் வெகுமாண்பர் இருந்தார்தாமே
6166.
தானான மூலியது கொண்டபோது தாக்கான வாசியது கீழ்நோக்காகும்
கோனான குருநாதர் சொன்னவாக்கு குவலயத்தில் பொய்யாமல் மெய்யென்றெண்ணி
தேனான சிவப்பு சித்தரமாங்கற்பம் தேசமதில் கோடான கோடிபேர்கள்
மானான மலைவளத்தி லிருந்துகொண்டு மார்க்கமுடன் கற்பமது கொண்டிட்டாரே
6167.
கற்பமாம் சித்தரமாம் மூலிகற்பம் கனமுடனே வுண்டவர்க்கு வயதேசொல்வேன்
சொற்பமென்று எண்ணாதே துய்யபாலா சொர்ணம்போல் தேகமது மின்னும்பாரு
விற்பனமும் மிகவுண்டாம் அறிவுமுண்டாம் விருத்தமது வாராது பாலன்போலாம்
அற்பமென்று நினையாதே யறியபாலா வாயிரமாம் வருடமது இருக்கலாமே
6168.
இருக்கவென்றால் உலகுபதி சித்துதாமும் எழிலுடனே நெடுங்கால மிருந்தசித்து
பொருக்கவே காயாதி கற்பங்கொண்டு பொன்னுலகு பதிதனிலே சேர்ந்தாரப்பா
வருத்தமுடன் வெகுகோடி சித்துதாமும் வளமான மூலிகற்பம் கொண்டுமேதான்
திருக்கமல வீற்றிருக்கு மம்பாள்பாதம் தீர்க்கமுடன் நெடுங்கால மிருந்தார்பாரே
6169.
பாரேதா னின்னமொரு பண்புசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாக்கியவானே
நேரேதான் உலகுபதி மாண்பரெல்லாம் நெடிதான மொய்சதனை நுகரும்நேர்மை
தீரேதான் யான்தெய்வம் என்பார்தானும் திரளான சார்வாகம் பொய்யேயாகும்
கூரேதான் கடவுளெனும் மதம்பொய் குவலயத்தில் தேவனில்லை என்பார்தாமே
6170.
தாமான மார்க்கமது பொய்யேயாகும் சகலகலை யறிவதுவும் பொய்யேயாகும்
நாமான மோகனங்கள் பொய்யேயாகும் நலமான வசியமுதல் மாற்றம்பொய்யே
வேமான முள்ளதொரு வுச்சாடனங்கள் வெகுபிறட்டு தலைதிரட்டு மேதினிக்குள்
சாமானிய மானதொரு தேவசங்கம் சட்டமுடன் வரவழைத்தல் பொய்யதாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக