5981.
தாமான சமுசாரி மாண்பன்தேவி சட்டமுடன் நாயகன்சொற் கடவாமற்றான்
பேமானி தானுரைத்த வார்த்தைதன்னை பேருலகில் உபதேசம் மெய்யென்றெண்ணி
சாமான்ய மானதொரு பெண்பால்தானும் சட்டமுடன் ஜங்கன்தன் வாசற்சென்று
பூமான்கள் அறியாமல் பதிமுகத்தில் புகட்சியுடன் ஜங்கன்தனைக் கண்டாள்பாரே
5982.
கண்டதொரு சத்தகன்னி ஜங்கன்தானும் கருத்துடனே கொம்பனையைக் கொண்டுசென்று
அண்டர்முனி தேவாதி தேவர்க்கெல்லாம் அவனியிலே குறியுரைத்தேன் மெத்தவுண்டு
தண்டுளப மாலையணி கிருஷ்ணன்போலே தகமையுடன் மாதுதனைக் கைபிடித்து
கொண்டனைத்து சைதன்யஞ் செய்துமல்லோ கொப்பெனவே மைந்தனு முண்டாக்கினானே
5983.
ஆக்கினான் இருபத்தோர் வாரமட்டும் அங்ஙனவே பதிமுகத்தில் சென்றுமல்லோ
பாக்கியங்கள் பெற்றவர்போல் வாரவாரம் பதிமுகத்தில் ஜங்கன்தான் கூடிருந்து
சாத்திரங்கள் சொற்பனங்கள் கண்டாற்போல சட்டமுடன் தம்பதிக்கு வந்துமல்லோ
நீக்கியே சத்தகன்னி வரமும்பெற்று நீட்சியுடன் வடபதிக்கு வந்திட்டாரே
5984.
வந்தாரே வெகுநாட்கள் தான்கழித்து வளமையுடன் மைந்தனையும் பெற்றபின்பு
சிந்தனைகள் தாம்நீங்கி கலியும்நீங்கி சிற்பரனைப் போலஒரு பாலன்பெற்று
பந்தமுடன் மணவாளன் மனைவிதானும் பட்சமுடன் மைந்தனையுங் கொஞ்சியல்லோ
அந்தவுல கத்தினிலே சத்தகன்னி எழிலான குறிப்போலே யுண்டென்பாரே
5985.
என்பாரே முழுமடையர் தானுமப்பா எழிலான சாத்திரங்கள் கற்றுமென்ன
வன்பான மாண்பனல்லோ நம்மைப்போல வளமையுடன் வையகத்தில் வந்தமாண்பன்
தன்போலே மனிதனென்று வறியாமற்றான் தண்மையுடன் சத்தகன்னி ஜங்கன்தன்னை
நன்னயமாய் மனிதனையுஞ் சுவாமியென்று நலமுடனே யவர்காலில் விழுந்திட்டாரே
5986.
விழுந்தாரே யவன்கலவி தன்னிற்சென்று விட்டகுறை இருந்ததொரு பாவத்தாலே
அழுந்தியே அவன்வலையிற் சிக்கியல்லோ அவனியிலே பேருண்டாய் பேரும்பெற்று
தொழுதுமே குலதெய்வம் அவன்தானென்று தொல்லுலகில் கெட்டதொரு கழுதைமாண்பர்
மழுவேந்தர் கதைபேசி நயங்கள்பேசி மாநிலத்தில் கெட்டவர்கள் கோடியாமே
5987.
கோடியா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் குறிப்பான தட்சணமா மாண்பருக்கு
நீடியே பலதேவ கோடியாக நீதியுடன் தாமுரைப்பார் அனந்தமார்க்கம்
வாடியே வையகத்து மாண்பரெல்லாம் வளமையுடன் பலகாலுந் தொழுதிரஞ்சி
தேடியே திரவியங்கள் அனைத்துந்தந்து தீர்க்கமுடன் தான்கொடுத்து நிதிகேட்பாரே
5988.
நிதியான மானிடர்மேல் குறிகள்வந்து நினைத்து விளையாடுமது சன்னதங்கள்
பதியான பதிவிட்டு வந்தேனென்றும் பாலகனே தெய்வகன்னி நான்தானென்றும்
துதியுடனே மரத்துமுனி யென்பேரென்றும் துப்புரவாய் எல்லையது பிடாரியென்றும்
மதியான லாடமுனி நான்தானென்றும் மகத்தான சன்னதங்கள் கூறுந்தானே
5989.
தானான வம்மனது காளியென்றும் தாக்கான வேல்முருகன் யான்தானென்றும்
கோனான வாடைமுனி யான்தானென்றும் குறிப்பான காட்டேரி யான்தானென்றும்
தேனான திருவேங்கிட பதிதானென்றும் சிறப்பான அங்காள வல்லியென்றும்
மானான கார்த்தவ ராயனென்றும் மகத்தான அனேகவித தெய்வம்பாரே
5990.
பாரேதான் தெய்வமது அனேகங்கோடி பாரினிலே மாண்பர்மேல் சன்னதங்கள்
நேரேதான் தெய்வமயல் கொண்டோர்போலும் நேர்மையுடன் பலபலவாஞ் சன்னதங்கள்
கூரேதான் குடிகள்படை சேனைதன்னில் கோஷ்டமிட்டு சன்னதங்கள் மிகக்கொண்டாடும்
வீரேதான் பிராணாய வுட்சாடந்தான் வீரமுடன் தானுரைப்பார் வெகுவாய்த்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக