6031.
காணவே சிங்கமது பிறவியல்லோ கைலாய நாதருட கடாட்சத்தாலே
தோணவே வையகத்தில் குட்டியீன்று தொல்லுலகில் வாழ்குவது மகிமைமெத்த
ஆணவங்கள் அதிகமுண்டு அரிதனக்கு அவனியிலே ராஜனென்ற மிருகமாச்சு
பூணவே வையகத்தின் மிருகமெல்லாம் புகழான சிங்கத்தின் கீழுமாச்சே
6032.
கீழான மிருகமது வனேகமுண்டு கீர்த்தியுள்ள சிங்கமது ராசனப்பா
பாழான காடுகளில் இருக்கும்சிங்கம் பார்த்தவர்கள் ஆரேனும் கண்டதுண்டோ
சாழலுடன் கானாறு தன்னிலப்பா சட்டமுடன் விழுந்திறந்த கதைகேட்டார்கள்
ஆழான மடுக்களிலே விழுந்திறந்த அதிசயங்கள் வையகத்தில் கண்டார்தாமே
6033.
தாமான யின்னமொரு மார்க்கம்பாரு தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோமானகள் அறிந்ததில்லை குவலயத்தில் கொற்றவனே இன்னமொரு மகிமைசொல்வேன்
சாமானிய மானதொரு சித்தரப்பா சட்டமுடன் அன்பதுபேர் கூட்டமாக
அமான மாகவல்லோ கூட்டங்கூடி அடவான காட்டகத்தில் வந்திட்டாரே
6034.
வந்ததொரு வழிதனிலே மார்க்கங்கண்டு வண்மையுடன் சிங்கமது கர்ச்சித்தல்லோ
சிந்தனையாய் மாண்பருட சைகைதன்னை சீறலுடன் தானறிந்து கோபமிஞ்சி
தொந்தரவு செய்வதற்கு மனதுவந்து தோற்றமுடன் பாச்சலது வதிகமாகி
விந்தையுடன் சிங்கமது வேவுகொண்ட வீரியத்தை கண்டார்கள் சித்துதாமே
6035.
சித்தான சித்துமுனி ரிஷிகள்தாமும் சீறலுடன் வருகின்ற சிங்கந்தன்னை
புத்தியுள்ள சித்துமுனி பார்த்துயேங்கி புகழான வன்பதுபேர் கூட்டத்தோடும்
பத்தியுடன் கல்லாலின் மரத்தின்மேலே பரிவுடனே ஏறியல்லோ பார்க்கும்போது
சுத்தியெங்கும் பார்த்துமல்லோ சிங்கந்தானும் சுந்தரனார் அன்பதுபேர் காணலாச்சே
6036.
காணவே சிங்கமது சித்தர்தம்மை கனதான வீரியத்தால் கோபமிஞ்சி
தோணவே சிங்கமது யேதுசெய்யும் தோற்றாமல் கோபமது வதிகங்கொண்டு
பாணம்போல் சிறுநீரை பூமிதன்னில் பள்ளமதாய்ச் செய்துமல்லோ மண்ணைத்தானும்
பூணவே மூத்திரத்தில் வாலைவிட்டு புகழுடனே மண்ணதனைப் பிரட்டலாச்சே
6037.
பிரட்டியே வால்தனிலே மண்ணையேந்தி பின்பக்க மாகவல்லோ திரும்பியேதான்
வாட்டியே வாலதனைத் தூக்கியேதான் வளமையுடன் மண்ணதனை நோக்கியல்லோ
தூட்டியே வால்சுற்றி யெரியும்போது துப்புரவாய் மண்ணதனை மேலேநோக்கி
மிரட்டியே தானெரிய மண்தானப்பா மீறியே சித்தரின்மேல் விழுகலாச்சே
6038.
விழுகவே நாற்பத்தி யெண்மர்பேரில் விஷமான மண்ணதுவும் மேலேபட்டு
பழுதுபடா மேனியதில் விஷமுங்கண்டு பாங்குடனே நித்திரைகள் வந்தாற்போல
நழுகியே சிங்கமது சென்றபின்பு நடுக்கமுடன் திரேகமது ஒடுக்கமாகி
முழுதுமே நாற்பத்தி யெண்மர்பேரும் மூதுலக மண்மீதில் விழுந்திட்டாரே
6039.
மண்ணான பூமிதனில் விழுந்தபோது மயக்கமுடன் கண்ணுரங்கி யிருந்தாற்போலும்
திண்ணமுடன் மடிந்தார்கள் சித்தரெல்லாம் தீர்க்கமுடன் வையகத்தைக் கண்டதில்லை
எண்ணியே மரத்தின்மேல் இருந்தபேர்கள் யெழிலான யிருவருமே யிறங்கியேபின்
குண்ணியே முகம்வாடி மனமயர்ந்து குவலயத்தில் மடிந்தவரைக் கண்டார்தாமே
6040.
தானான மண்படா திரண்டுபேரும் சட்டமுடன் மரம்விட்டுக் கீழிறங்கி
கோனான சிங்கமது சென்றபின்பு கொற்றவனே இருவருமே யறிந்துகொண்டு
தேனான மனோன்மணியை மனதிலுன்னி தெளிவுடனே புத்தியது யதிகமாகி
பானான சித்துமுனி இருவர்தாமும் பரிட்சிக்க எண்ணமது கொண்டிட்டாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக