6101.
போமேதான் வார்த்தையது கூறும்போது பொங்கமுடன் வனத்துமகா ரிஷியார்தாமும்
தாமேதான் சொன்னபடி வனத்தில்தானும் தகமையுடன் மண்காற்று மழையுமாக
ஆமேதான் மின்னலிடி ஜோதிபோலும் அவனியெலாந் தத்தளிக்க மிகவேசெய்தார்
வேமேதான் பொதிமாட்டுக் காரரெல்லாம் விருப்பமுடன் கண்டல்லோ பிர்மித்தாரே
6102.
பிர்மித்த சிறுபால மாண்பரெல்லாம் பேரான சித்துமுனி ரிஷியார்தம்மை
வர்மமுடன் பதாம்புயத்தை சுற்றிவந்து மனதுவந்து முடிசாய்த்து வஞ்சலித்து
தர்மமுள்ள நாதாந்த சித்தேநாங்கள் தாரணியில் எந்நாளும் உந்தமைத்தான்
தர்மமது வையால் வையகத்தில் மார்க்கமுடன் எந்நாளும் வசனிப்போமே
6103.
வசனிப்போஞ் சற்குருவே எந்தன்நாதா வளமையுடன் எந்நாளுங் கிரியில்வாழும்
நிசமுடைய வேதாந்த சித்தேகேளும் நிஷ்களங்க மானதொரு சொரூபபாதா
துசங்கொண்ட வீராதி சித்தேகேளும் துவாபரமா மூன்றுயுகந் தன்னில்தானும்
குசமுடைய சின்மயத்தில் இருந்தசித்தை கோடான கோடிவரை கண்டிட்டோமே
6104.
கண்டோமே வஷ்டகிரி தன்னில்நாதா காணோமே யும்மைப்போல் ஒருவரேனும்
தொண்டுசெய்து வெகுகோடி மாண்பரெல்லாம் தொல்லுலகில் கெட்டார்கள் அனந்தங்கோடி
விண்டுரை சொல்கேளாத வீணர்கோடி வெகுகோடி வையகத்தில் கண்டதுண்டு
துண்டரிக மானதொரு சித்துபோலே துப்புரவாய் வையகத்தில் காணோம்தானே
6105.
தானான கற்பமது கொடுக்கவேதான் தண்மையுள்ள பொதிமாட்டுக் காரரெல்லாம்
கோனான கிரிதனிலே இருக்குஞ்சித்து கொற்றவனார் மாயாவின் சித்துவுக்கு
மானான புகையிலையின் கற்பந்தன்னை மார்க்கமுடன் சித்தரவர் கொள்வதற்கு
பானான மாண்பரெல்லா மொன்றாய்க்கூடி பட்சமுடன் ஆள்பாரங் காட்டினாரே
6106.
கட்டினார் மாண்பரெல்லாம் ஒன்றாய்க்கூடி கனமான சுமையதுவு மென்னசொல்வேன்
இட்டமுடன் சுமையதுவை யெடுக்கும்போது எழிலான சித்துமுனி நடுக்கங்கொள்ள
வட்டமுடன் பாலரெல்லா மொன்றாய்க்கூடி வளமான சித்தருக்கே கொண்டுசென்று
பட்டமரம் போலேயல்லோ மாண்பரெல்லாம் பாதவித்து நின்றல்லோ பார்த்திட்டாரே
6107.
பார்த்தவுடன் மலையில்வந்த சித்துதாமும் பாலரெல்லாந் தானடுங்க கரத்திலேந்தி
தீர்த்தகிரி சிவலிங்கப் பொதியைப்போலும் திறமுடனே கிரிதனிலே கொண்டுசென்று
பூர்த்தியுடன் குருபாதந் தனைவணங்கி புகழுடனே வஞ்சலிகள் மிகச்செய்தாரே
6108.
செய்யவே சித்துமுனி சீஷர்தாமும் சிறப்புடனே குருநாதர் மனதுவந்து
துய்யபுகழ் புகையிலையின் கற்பந்தன்னை துப்புரவாய் மனதுவந்து நாதர்தானும்
வெய்யவே காயாதி கற்பந்தன்னை வேண்டியே விருப்பமுடன் கொடுத்தமாண்பர்
பையவே யெவ்விடத்தி லிருப்போரப்பா பான்மையுடன் அவர்களுக்கு விதிசொல்வீரே
6109.
விதியான குருமதியி னுபதேசத்தை வித்தகனார் சீஷவர்க்கந் தானுங்கேட்டு
மதியான வுபதேசம் மாண்பருக்கு மார்க்கமுடன் செய்வதற்கு மனதிலெண்ணி
துதியுடனே பொதிமாட்டுக் காரர்தம்மை துப்புரவாய் அவர்மனதில் எண்ணங்கொண்டு
நிதியதுவுந் தான்கொடுத்து மாண்பருக்கு நீதியுடன் உபதேச மெண்ணினாரே
6110.
எண்ணியே பொதிமாட்டு மாண்பர்தம்மை எழிலாக வரவழைக்க மனதுபூண்டு
வண்ணமுடன் சரமாரி பொழியவல்லோ மார்க்கமுடன் மகதேவர் தனைநினைத்து
திண்ணமுடன் ரிஷியாரும் நினைக்கும்போது தீர்க்கமுடன் பிரளயங்கள் அதிகமாகி
எண்ணமுடன் பொதிமாட்டுக் காரரெல்லாம் எழிலான மலைதனிலே வந்திட்டாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக