5991.
தேனேகேள் லாடகவி யனேகஞ்சொல்வார் தாக்கான பரிபாஷை மிகவுஞ்சொல்வார்
மானேகேள் சன்னதங்கள் மிகவுண்டாகி மார்க்கமுடன் திரேகமது நடுக்கல்கண்டு
தேனேகேள் சிதாபாச நிலையில்நின்று தீர்க்கமுடன் வதிதங்கள் மிகவுரைப்பார்
தானேதான் தெய்வமது கொண்டாற்போலே தகமையுடன் பலபிரட்டு பேசுவாரே
5992.
பேசுகின்ற வார்த்தைதனை மெய்யென்றெண்ணி பேரான தட்சணத்து மாண்பரெல்லாம்
காசிபணம் நிதியனைத்தும் மிகவுந்தந்து கருத்துடனே குறிமுறைகள் கேட்டாரப்பா
ஆசுகவி சாத்திரங்கள் பார்த்துமென்ன அறிவுகெட்ட மாண்பருக்கு மதியீனந்தான்
தேசுலவு பூந்துடையாய் போகசீஷர் தெளிவுடனே மிகவுரைப்பேன் கேளுகேளே
5993.
கேளேதான் தட்சினத்து மாண்பரெல்லாம் கெவனமுடன் குறிகேட்டு மதியுங்கெட்டு
பாளேதான் சாத்திரத்தை மிகப்பாராமல் பாருலகில் மதிகெட்டு குருடராகி
ஆனேதான் அறிவழிந்து மானங்கெட்டு வப்பனே வஞ்ஞான வலையிற்சிக்கி
நாமேதான் போகாமல் நமனுக்காளாய் நாட்டினிலே யிருந்தவர்கள் கோடிகாணே
5994.
காணவே எந்தனது சீஷபாலா கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே தேசாதி தேசமெல்லாம் துப்புறவாய் குளிகைகொண்டு வடியேன்தானும்
நீணவே காலாங்கி கடாட்சத்தாலே நீதியுடன் சத்தசா கரமுந்தாண்டி
பாணமுடன் எழுகடலுஞ் சுற்றிவந்து பாங்கான நிலைதனிலே நின்றிட்டேனே
5995.
இட்டேனே அட்டதிசை யானுங்கண்டேன் எழிலான தட்சணத்து மாண்பர்போலே
கெட்டதொரு மாண்பர்களைக் கண்டதில்லை கெடியான தட்சணமாம் பதியிலப்பா
திட்டமுடன் வெகுகோடி மாண்பர்தம்மை தீர்க்கமுடன் கண்டேனே தட்சணத்தில்
சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தானுரைத்த வண்ணமது போல்கண்டேனே
5996.
கண்டேனே யடியேனும் யானுமல்லோ கனமான போகரே ழாயிரத்தை
அண்டர்முனி தேவாதி தேவரெல்லாம் வன்புடனே மனதுவந்து களிப்பதற்கும்
தண்டபம்போல் வையகத்து சித்துமாண்பர் தருவான குருக்கள் மனுவேந்தருக்கும்
சண்டமா ருதம்போலே இந்தநூலை சாற்றினேன் பெரியோர்கள் சமுசாரிக்கே
5997.
சாரிகேள் சமுசாரி யானபேர்க்கு சட்டமுடன் சித்துமுனி யானபேர்க்கு
வாரிதிபோல் பெருநூல் ஏழாயிரந்தான் மகத்தான நூல்களெல்லாம் இதிலடக்கம்
மீறியதோர் இந்நூலுக் குற்றநூலாம் மேன்மையுடன் அகஸ்தியனார் காவியந்தான்
வீறியதோர் பன்னீராயிரக் காண்டந்தான் வித்தகனார் பாடிவைத்த நூல்தான்பாரே
5998.
பாரேதான் சத்தகாண்டந் தன்னிற்குள்ளே பாங்கான லோகவதி சயங்களெல்லாம்
நேரேதான் ஆறாவ தானகாண்டம் நெடிதான காண்டமிது குருநூலாகும்
தீரேதான் கடைகாண்டம் ஏழாங்காண்டம் தீர்க்கமுடன் இன்னவதி சயங்கள்கூறும்
சீரேதான் காலாங்கி கடாட்சத்தாலே சிறப்புடனே பாடிவைத்தேன் பெருநூல்தானே
5999.
நூலான நூலிதுதான் சத்தகாண்டம் நுணுக்கமுடன் இதிலடக்கஞ் சொல்லொண்ணாது
பாலான பதினெண்பேர் சொன்னநூலும் பயிலான இந்நூலுக் கொள்ளாதப்பா
சேலான நவகோடி ரிஷிகள்தாமும் செம்மலுடன் கோடிவரை நூலுஞ்செய்தார்
மாலான நூலிதுவும் மகிமைமெத்த மகத்தான விந்நூல்போல் இல்லைதானே
6000.
தானான யெனதையர் காலாங்கிநாதர் தண்மையுடன் அவர்பாத கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் காவியமே ழாயிரத்தை
மானான வையகத்தோர் பிழைக்கவென்று மகத்தான சீனபதி மாண்பருக்கு
பானான காண்டமே ழாயிரத்தில் பட்சமுடன் இருமூன்று காண்டமுற்றே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக