6171.
பொய்யான செப்பிடுகள் வித்தைபொய்யே பொங்கமுடன் தூலங்கள் சொல்லப்பொய்யே
துய்யகெஜ தரணமது சுத்தம்பொய்யே துப்புரவாய் குளிசங்கள் எல்லாம்பொய்யே
வெய்யபுகழ் தேகமது தானும்பொய்யே மேதினியில் இருப்பவரும் பொய்யேயாகும்
நையவரு மூகமதிலெல்லாம் பொய்யே நாதாக்கள் சொல்லுமுறை சிலபொய்தானே
6172.
தானான புலிப்பாணி தார்வேந்தாகேள் தண்மையுடன் சொல்லுகிறேன் தருமவானே
கோனேதான் உலகுபதி மாண்பரெல்லாம் கோர்வையுடன் பலநூலுங் கற்றுமென்ன
வீணேதான் பொய்மெய்யும் அறியாமாண்பர் விருதாவாய் சிவயோகஞ் செய்துகொண்டு
காணாமல் வையகத்தின் உண்மைதன்னை கசடகற்றி மெய்யறிய மறந்தார்பாரே
6173.
பாரேதான் வையகத்தில் தெய்வமுண்டு பாங்கான மோட்சமென்ற வீடுமுண்டு
நேரேதான் பாவிகட்கு நரகமுண்டு நீடாழி யுலகமது யழிவதுண்டு
சீரேதான் வாதமது மெய்யேயாகும் சிறப்பான குளிகையது மெய்யேயாகும்
வீரேதான் கற்பமது மெய்யேயாகும் விருப்பமுடன் இறப்பதுவும் மெய்யதாச்சே
6174.
ஆச்சப்பா புலிப்பாணி புனிதவானே அவனிதனில் இன்னமுண்டு கற்பங்கேளிர்
மாச்சலென்ற நன்னாரி கற்பமப்பா மகத்தான கற்பமதை யாண்டுகொண்டால்
பாச்சலென்ற வுதிரமது விஷங்காணாது பாங்கான தேகமது கனலேறாது
வீச்சுடனே நேத்திரங்கள் குளிர்ந்துகாணும் வீரான சுவாசமது கீழ்நோக்காமே
6175.
நோக்கான மூலிகையாங் கற்பந்தன்னில் நுணுக்கமுள்ள மாண்பர்களுங் கொண்டுவந்து
தாக்கான மதிமயக்கம் பூண்டுகொண்டு வண்மையுடன் தவநிலைக்கு உறுதிகொண்டு
வாக்குமனம் சித்தமார்க்கம் பொங்கி வளமையுடன் வாசியது கீழேநோக்கி
தேக்கமுடன் சிவயோக பதியில்சென்று தேற்றமுடன் நெடுங்கால மிருக்கலாமே
6176.
இருக்கவே யின்னமொரு மகத்துவந்தான் எழிலான புலிப்பாணி திலர்தவானே
பொருக்கவே காயாதி கொண்டபேர்க்கு பொங்கமுடன் சீவனத்துக் கிடமேதென்றால்
திருக்கையிலே தானிருக்கும் சிவனாராணை தீர்க்கமுடன் வாதமது புகலக்கேளும்
பெருக்கமுடன் காலாங்கி நாதர்பாதம் பெருமையுடன் யான்வணங்கி கூறுவேனே
6177.
கூறுவேன் ஜாதிலிங்கம் பலந்தானொன்று கொற்றவனே முலைப்பாலில் வூரப்போடு
தேறுதலாய் முப்பொழுது மானபின்பு தெளுவிருத்து லிங்கமதை யெடுத்துமைந்தா
மாறுபடா யெறிகாலன் பாலையப்பா மார்க்கமுடன் எண்சாமம் சுருக்குத்தாக்கு
வீறுடைய குமரியின்தன் பாலால்தானும் விருப்பமுடன் நாற்சாமம் சுருக்குத்தாக்கே
6178.
தாக்கான லிங்கமதை யெடுத்துபாலா தண்மையுடன் ஆராதாரச் சரக்காம்
போக்கான சரக்கதுவும் ஏதென்றாக்கால் பொங்கமுடன் துருசுவெடி யுப்புக்காரம்
நோக்கான சாரமுடன் சீனந்தானும் நுண்மையுள்ள கரியுப்பு கூடச்சேர்த்து
வாக்கதுவும் பிசகாத வண்ணமப்பா வளமையுடன் தீராஞ் செயநீர்தானே
6179.
தானான வாராதாரச் சரக்கால் தாரணியில் அண்டபிண்டந் தானுமாச்சு
கோனான குருவருளுங் காணலாகும் கொப்பெனவே சத்திசிவ மாற்றிக்காண்பீர்
பானான செந்தூரக் கட்டுப்போக்கும் பாங்கான களங்கு மிதனாலாகும்
தேனான தேவிமனோன் மணியாள்பாதந் தேர்ந்தெடுத்து வாராதாரந் தான்பாரே
6180.
பாரேதான் ஜெயநீரில் அனந்தம்போக்கு பாடினார் ஜெகதலத்தில் முனிவர்கோடி
நேரேதான் குருக்கிடையுங் கருக்கிடையுமப்பா நெடிதான சாஸ்திரங்கள் அனந்தஞ்சொன்னார்
வேரேதான் சாஸ்திரத்தி லிந்தப்போக்கு வேதைமுகங் காணுதற்கு குறிகள்சொன்னார்
நீரேதான் சாத்திரத்தின் உளவுகண்டு நீதியுடன் ஆராதாரத்தைக் காணே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக