பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6041-6050

6041.
கொண்டுமே மரத்தடியை விட்டிறங்கி கொற்றவர்கள் சிங்கத்தின் பள்ளங்கண்டு
விண்டிடவே மூத்திரமாம் பள்ளங்கண்டு விருப்பமுடன் சோதனைகள் பண்ணவெண்ணி
கண்டிடவே கரமதனில் இருந்தசெம்பை கட்டழகர் தானெடுத்து மண்ணிற்போட
கொண்டதொரு செம்பதுவுந் தங்கமாச்சு கொற்றவனே யதின்விஷத்தை யறிந்தார்பாரே
6042.
பாரேதான் விஷமேறி பழுக்கலாச்சு பாங்கான அரியினது மூத்திரந்தான்
நேரேதான் மண்ணதனில் விஷமுமாகி நேர்மையுடன் சித்தரின்மேல் படுகலாச்சு
சீரேதான் தேகமது புண்ணுமாகி தீர்க்கமுடன் தானிறந்தார் சித்தரெல்லாம்
ஆரோதான் கண்டவர்கள் உலகிலில்லை யப்பனே சித்தர்முனி கண்டார்தானே
6043.
கண்டாரே சித்துமுனி ரிஷியார்தாமும் கானகத்தில் நடந்ததொரு வதிசயத்தை
தண்டம்போல் தான்கண்டு பிர்மித்தேங்கி தாரணியில் குளிகைகொண்டு சீனந்தன்னில்
வண்ணமுடன் சீனபதி மாண்பருக்கு வளமான வதிசயத்தை யெடுத்துக்கூற
திண்ணமுடன் மனதுவந்து மனங்களித்து தீர்க்கமுடன் சீனபதிக் கேகினாரே
6044.
ஏகவே யின்னமொரு மார்க்கங்கேளு யெழிலான புலிப்பாணி மணியேபாரு
சாகமுடன் நெடுங்காலம் வடமேருதன்னில் சட்டமுடன் நானிருந்தேன் சிலதுகாலம்
பாகமுடன் சிங்கத்தின் அதிசயத்தை பாரினிலே நாதாக்கள் கண்டதில்லை
வேகமுடன் யான்கண்டு சீனத்தார்க்கு விருப்பமுடன் உபதேசஞ் செய்திட்டேனே
6045.
செய்தேனே வடமேரு தன்னிலப்பா சிறப்பான சிங்கத்தின் மகிமைதன்னை
வெய்யபுகழ் சீனபதி மாண்பருக்கு விருப்பமுடன் உபதேசஞ் செய்தேன்யானும்
பையவே யான்கொண்ட காயகற்பம் பட்சமுடன் அவர்களுக்கு கொடுத்தேன்பாரு
துய்யவே சீனபதி மாண்பரெல்லாம் துப்புரவாய் காயாதி கொண்டார்பாரே
6046.
பாரேதான் காயாதி கொண்டபின்பு பாங்கான சீனபதி மாண்பர்தம்மில்
நேரேதான் சிலதுபேர் ஞானவானாய் நேர்மையுடன் குளிகையது பூண்டுகொண்டு
தீரேதான் வடமேரு கானகத்தில் தீர்க்கமுடன் தான்சென்று காணுதற்கு
வீரேதான் குளிகையது பூண்டுகொண்டு விருப்பமுடன் வடமேருக் கேகினாரே
6047.
ஏகினார் சிங்கமென்ற காட்டகத்தில் எழிலாக நாதாக்கள் தன்னைப்போலே
பாகமுடன் காயாதி கொண்டுமல்லோ பக்குவமாய் குளிகைவிட்டு கானகத்தில்
சாகமுடன் சிங்கமதைக் கண்டாரங்கே சட்டமுடன் சிங்கமது கெர்ச்சித்தேதான்
வேகமுடன் சீனபதி மாண்பர்தம்மை வீறுடனே கொல்லுதற்கு வருகலாச்சே
6048.
வருகவே சித்துமுனி தம்மைப்போலே வாகான சீனபதி மாண்பரெல்லாம்
பெருகவே கல்லாலின் மரத்தின்மேலே பேரான முன்னிருந்த சித்துபோலே
சொரூபமதைக் கண்டவுடன் மரத்தின்பேரில் சுந்தரனே பார்த்துமல்லோ திகைத்துநின்று
அருவமென்ன சிங்கமதைக் கண்டுமல்லோ வப்பனே பிரமித்து நின்றிட்டாரே
6049.
நின்றாரே சித்துமுனி ரிஷியார்தாமும் நேரான சிங்கமது கண்டுமேதான்
குன்றிடவே தன்மனதில் வுறுதிகொண்டு கூரான சிங்கமது யேதுசெய்யும்
வென்றிடவே முன்போலே மண்ணைவாரி விட்டெரிய சீனபதி மாண்பரெல்லாம்
தன்றிடவே கல்லாலின் மரத்தின்பேரில் சட்டமுடன் மேலிருந்து விழுந்தார்தாமே
6050.
தாமான சீனபதி மாண்பரெல்லாம் தகமையுடன் மண்ணதனில் விழுந்துமேதான்
பூமான்கள் விஷமதுவும் சகியாமற்றான் புகழான தேகமது சிலிர்த்துமல்லோ
நாமான பஞ்சேந்திரியம் உள்ளடங்கி நமனுக்கு ஆளாகி பொறிகலங்கி
வேமான மாகவல்லோ மண்ணின்பேரில் விழுந்துமே பிரண்டிருக்கக் கண்டிட்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக