பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6071-6080

6071.
சாம்பலாய்ப் போனதொரு சேதிகண்டு சட்டமுடன் சுரங்கமது வுள்ளிருந்து 
தீம்புகளும் நேராது யென்றுசொல்லி தீர்க்கமுடன் வெளியரங்கம் வந்தேனென்றான்
வீம்புடைய கோனானின் வார்த்தைதன்னை விருப்பமுடன் சித்தர்முனி கேட்டுவந்து
நாம்யிவனுக் கோருதவி செய்யவென்று நலமுடனே சித்தரெல்லாம் நினைத்திட்டாரே
6072.
நினைத்துமே வுச்சிலிங்கத் தேளினாலே நிஷ்களங்க மானதொரு திரவியங்கள்
சுனைபோல ஏமமென்ற தங்கந்தானும் துப்புரவாய் நந்தமக்கு வாய்த்துதென்று
சுனையான கோனானால் வந்தபாக்கியம் காசினியில் சதகோடி சொல்லொண்ணாது
பனையளவு பாக்கியமும் இவனாலாச்சு பட்சமுடன் சித்தர்முனி எண்ணினாரே
6073.
எண்ணியே சித்தர்முனி மனதுவந்து எழிலான கோனானைத் தானழைத்து
பண்ணவே ஏமமென்ற வித்தைதன்னை பட்சமுடன் இவனுக்கோர் பாகமீய்ந்து
வண்ணமுடன் செய்பாகம் கைபாகங்கள் வளமையுடன் காண்பித்து விதியுஞ்சொல்லி
சுண்ணமென்ற சாம்பல்தனை யோர்பாகந்தான் சுத்தமுடன் கைகொடுத்து போவென்றாரே
6074.
போமென்று சொல்லியல்லோ முனிவர்தானும் பொங்கமுடன் கோனானுக் குறுதிகூறி
நாமென்ற காலாங்கி வாக்குபோலே நலமுடனே ஞானோப தேசஞ்செய்து 
தாமென்ற பிரிதிவியாஞ் சாம்பல்தன்னை சட்டமுடன் தான்கொடுத்து மதியுஞ்சொல்லி
வேமென்ற காட்டகத்தே சித்தர்தாமும் வேகமுடன் குகைதனிலே சென்றிட்டாரே
6075.
சென்றவுடன் கோனானும் சாம்பல்தன்னை செம்மலுடன் அவர்பதிக்குக் கொண்டுசென்று
பொன்னான மாற்றதுவும் செம்பிலேற புகழான செம்பதுவுந் தங்கமாச்சு
மன்னவனைப் போலாகக் கோனான்தானும் மகதேவர் சித்தர்முனி தம்மைப்போலும்
தென்னகரி ராமருட செல்வம்போலும் திரளான கோடிவரை பார்த்திட்டானே
6076.
பார்த்தானே சித்தருட மகிமைதன்னால் பாங்கான யேமமென்ற வித்தைதன்னை
கீர்த்தியுடன் முறைசெய்த தபோபலத்தால் சீர்பெற்றான் கோனானுஞ் சித்துதம்மால்
பேர்பெற்றான் கோனானுங் காட்டகத்தில் பேருலகில் விட்டகுறை இருந்துதன்னால்
தார்வேந்தர் மெச்சிடவே தரணிதன்னில் தாமுமொரு சிவயோகி போலானானே
6077.
ஆனான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி புத்திவானே
கோனான கதையுரைத்தேன் மகிமையல்ல கொற்றவனே யின்னமொரு மகிமைசொல்வேன்
தேனான தேவிமனோன் மணியாள்பாதம் தேற்றமுடன் யான்வணங்கி காதைசொல்வேன்
பானான காலாங்கி நாதர்பாதம் பட்சமுடன் யான்வணங்கி பகருவேனே
6078.
பகருவேன் புலிப்பாணி மன்னாகேளீர் பாரினிலே குளிகைகொண்டு சித்தியேதான்
நிகரமுடன் வையகத்து வதிசயத்தை நீதியுடன் யான்கண்டு மலையிற்றேடி
சிகரமது சதுரகிரி மலையிலப்பா சிறப்புடனே யானிறங்கி இருக்குங்காலம்
நிகரமுடன் கிரிதனையே சுத்தியல்லோ நீடூழி காலம்வரை திரிந்திட்டேனே
6079.
திரிந்துமே மலையோரம் தன்னிற்சென்று தீர்க்கமுடன் யான்காணும் வேளைதன்னில்
புரிந்துமே சிகரமது கிரியில்நின்று புகழான பனையளவு சித்துதாமும்
தெரிந்துமே மலையைவிட்டு கீழிறங்கி சிறப்புடனே மாண்பர்களைக் காணும்வண்ணம்
செரிந்துமே மகிமையது கோடியுண்டு தேசமதில் விதியுள்ளான் காண்பார்பாரே
6080.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி மன்னாகேளு
ஆரோதான் பொதிமாட்டுக் காரரப்பா ஆயிரம்பேர் ஒருகூட்ட மாகக்கூடி
தேரோடும் பாவனைப்போல் மாண்பரெல்லாம் தேற்றமுடன் மலையோரஞ் செல்லும்போது
சீரோடும் புகையிலையின் பொதிகைதன்னை சிறப்பான சித்துமுனி கண்டிட்டாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக