பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6051-6060

6051.
கண்டேனே சீனபதி மாண்பர்தம்மை கடுகெனவே விஷமேறி யிருந்தபேர்க்கு
தண்டகம்போல் காயாதி முறிப்புயானும் தகமையுடன் தான்கொடுத்து யெழுப்பியல்லோ
மண்டலங்கள் உள்ளளவும் சிங்ககற்பம் மடியாமல் இருப்பதற்கு மனதுவந்து
விண்டவே யான்கொடுத்து உயிர்கொடுத்தேன் விட்டகுறை இருந்ததினால் எழுந்தார்பாரே
6052.
பாரேதான் சீனபதி மாண்பருக்கு பாங்கான கற்பமுறை யானுஞ்சொல்லி 
நேரேதான் பிழைப்பதற்கு வழியுஞ்சொன்னேன் நேர்மையுடன் கருவாளி கண்டுகொள்வார்
சீரேதான் சித்தர்முனி மார்க்கந்தன்னை சிறப்புடனே யானுரைத்தேன் மாண்பருக்கு
வேரேதான் மற்றோரால் சொல்லப்போமோ வேதாந்த காலாங்கி கடாட்சந்தானே
6053.
தானான சீனபதி மாண்பரெல்லாம் தகமையுடன் தானெழுந்து முடிவணங்கி
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனார் சீனபதி மாண்பரெல்லாம்
பானான விட்டகுறை இருந்துமல்லோ பாங்குடனே என்னாலே எழுப்பப்பட்டார்
மானான மகதேவர் கடாட்சத்தாலே மறைபொருளை யானுமல்லோ உணர்ந்திட்டேனே
6054.
உணர்ந்தேனே யின்னமொரு மார்க்கம்பாரு வுத்தமனே புலிப்பாணி மைந்தாகேளு
மணங்கமழும் வடகோடி கானகத்தில் மார்க்கமுடன் மகமேரு பக்கந்தன்னை
கணமுடனே யனேகவித தெய்வந்தானும் காட்டகத்தே வாசமது செய்துகொண்டு
பிணமதனை யாபூதி கொள்ளுங்காளி பேரான காட்டகத்தை கண்டேன்தானே
6055.
தானேகேள் அண்டமுனி யறியாக்காடு தகமையுள்ள வனந்தனிலே திரிந்துயானும்
மானேகேள் மகமேரு சாரல்பக்கம் மகத்தான குண்ணுகளும் மலையுமுண்டு 
தேனான மலைதனிலே வாசஞ்செய்யும் தேளதுவுந் திரள்கூட்டஞ் சொல்லொண்ணாது
கோனான தேளதுவின் கூட்டந்தன்னை தேற்றமுடன் கோடிவரை யான்பார்த்தேனே
6056.
பார்த்தேனே செந்தேளாம் கோடிவர்க்கம் சாங்கமுடன் யுகம்பிரித்து நடக்கும்போது
தீர்த்தலிங்கந் தனிலுதித்த செந்தேளப்பா தீரமுடன் கோடிதளம் வருகும்போது
ஆர்த்தியுடன் மேலேறி வருகுந்தேளாம் வப்பனே உச்சிலிங்கத் தேளேயாகும்
மூர்த்தியுடன் மும்மூர்த்தி யானபேரும் மூதுலகில் நடுங்குவது திண்ணமாமே
6057.
திண்ணமாம் உச்சிலிங்கத் தேன்தானப்பா தீர்க்கமுடன் காட்டகத்தே இருக்கக்கண்டேன்
வண்ணமுடன் மலைசாரல் காளிகோயில் வளமான தேவதாஸ் தலமுங்கண்டேன்
எண்ணரிய கோயிலது மூலஸ்தானம் யெழிலாக வால்நுழைய இடமுமுண்டு
கண்ணமுடன் காளிதனைக் காணவென்றால் சாங்கமுடன் சுரங்கவழி செல்வார்பாரே
6058.
பாரேதான் தேவதா ஸ்தலத்துக்குள்ளே பாங்கான வழியதுவும் மூலஸ்தானம்
நேரேதான் காளிதனைக் காணவென்றால் நேர்மையுடன் மார்பாலே நகர்ந்துமல்லோ
தீரேதான் எண்சாணு விடமுந்தாண்டி தீர்க்கமுடன் காளிதனைக் காணலாகும்
கூரேதான் அதற்கப்பால் காளிவாசம் கொற்றவனே தானிருக்கக் காணலாமே
6059.
காணலாம் உச்சிலிங்கத் தேள்தானப்பா கடியதொரு சுரங்கமதில் வாசஞ்செய்து
பூணவே நெடுங்காலம் வாசஞ்செய்து பொங்கமுடன் இருக்குமந்த காலந்தன்னில்
நீணவே யவ்விடத்தில் கரிக்கூட்டங்கள் நீதியுடன் சொல்லுதற்கு லக்கோயில்லை
ஆணவங்கள் மிஞ்சியல்லோ யானைக்கூட்டம் வப்பனே கணக்குண்டோ சொல்லொண்ணாதே
6060.
ஒண்ணாது காட்டகத்தே கோனான்தானும் வுத்தமனே மாடாடு மேய்க்கும்ஸ்தானம்
அண்ணார்ந்து பார்ப்பதற்கு முடிகொள்ளாது வப்பனே பசுக்கூட்டம் மெத்தவுண்டு
கண்ணாலே யானையது கோனான்தன்னை கடைநோக்கிப் பார்த்தல்லோ சீறலாகி
மண்ணோடே தும்பிக்கை யாற்புரண்டி மகத்தான கோனானைத் துறத்தலாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக