6021.
இறங்கினேன் வடபாகங் கடலோரத்தில் எழிலான இருளடைந்த கானகந்தான்
உறங்குமே கரடிபுலி சிங்கந்தானும் ஓகோகோ நாதாக்கள் மெத்தவுண்டு
திறமுடைய கரிக்கூட்டம் சொல்லொண்ணாது திரளான வடகோடி கானகத்தில்
குறைவன்றி வாழுமது மிருகமெல்லாம் கொற்றவனே இமயகிரி வடபாகந்தானே
6022.
தானான முற்பக்கம் அரிகள்கூட்டம் தாக்கான பிற்பக்கம் கரிகள்கூட்டம்
கோனான மேற்பக்கம் பரிகள்கூட்டம் கொற்றவனே கீழ்பக்கம் நரிகள்கூட்டம்
தேனான நடுமையக் கானகந்தான் தேவிமனோன் மணியாள் அறியாநாடு
மானான பரிதிமதி காணாநாடு மகத்தான சில்லென்ற காடுதானே
6023.
காடான நடுமையங் கானகத்தில் கரடிபுலி சிங்கமது வாழும்நாடு
தாடாண்மை கொண்டதொரு தழைத்தநாடு தகமையுள்ள கானகந்தான் சித்தர்நாடு
நாடாளும் ராஜர்பதி கண்டதில்லை நலமுடனே தேவரிஷி இருக்கும்நாடு
பாடாண்மை கொண்டதொரு பசுக்கள்நாடு பாரினிலே யாரேனுங் காணார்தாமே
6024.
காணாரே யவ்வனத்தில் மகிமைதன்னை கதையுரைப்பேன் புலிப்பாணி மன்னாகேளு
தோணாமல் சித்தர்முனி ரிஷிகளுக்கும் தொல்லுலகில் கண்டறியா வதிசயங்கள்
நாணாது சிங்கமென்ற காட்டகத்தை நன்மையுடன் குளிகைகொண்டு சென்றுயானும்
வீணாகக் காலமது கழியாமற்றான் விருப்பமுடன் சிலகால மிருந்திட்டேனே
6025.
இட்டேனே நெடுங்கால மடியேன்தானும் எழிலான காலாங்கி கிருபையாலும்
திட்டமுடன் குளிகைகொண்டு கானகத்தில் தீர்க்கமுடன் சுற்றிவருங் காலந்தன்னில்
பட்டமுடன் ஆண்சிங்கம் பெண்ணைக்கண்டு பாச்சலுடன் மோகமது வதிகமாகி
சட்டமுடன் கலவிதனில் மிகக்கலந்து சாங்கமுடன் இருக்குமது காலந்தானே
6026.
காலமாம் ஆணுடனே பெண்ணுங்கூடி கலவிதனி லிருக்கின்ற நாளுங்கண்டேன்
தாலமாம் பனிரெண்டு வருஷந்தானும் தாக்கான பெண்சிங்கங் கருவுமாகி
கோலமுடன் பூரணமாங் கெற்பங்கொண்டு கொற்றவனே யீனுகிற காலமாச்சு
சாலமது யென்சொல்வேன் மன்னாகேளு சாங்கமுடன் ஒருவருந்தான் கண்டிலாரே
6027.
கண்டேனே கானகத்தி லதிசயங்கள் கண்கொள்ளா மகிமையது யென்னசொல்வேன்
அண்டர்முனி ராட்சதர்கள் அறியாநாடு யவ்வனத்தில் சிங்கமது கற்பங்கொண்டு
பண்டுபல வஸ்துக்கள் அருந்தியல்லோ பாங்குடனே கெற்பவே தனையுமாகி
அண்டமுடி யாமலது சிங்கந்தானும் அவனிதனில் வேதனைகள் படுகலாச்சே
6028.
ஆச்சப்பா வாண்சிங்கந் தானுமல்லோ அரிவையெனும் பெண்சிங்கந் தன்னைக்கண்டு
பாச்சலுடன் யானையது இருக்குங்கூட்டம் பாண்மையுடன் தானறிந்து மனதுவந்து
மேச்சலுடன் பெண்சிங்கந் தன்னைக்கூட்டி மேன்மையுடன் கரிக்கூட்டந் தன்னிலங்கே
மாச்சலது வாராமல் சிங்கந்தானும் மன்னவனே சென்றல்லோ நிற்கலாச்சே
6029.
நிற்கவே கரிக்கூட்டம் முன்னதாக நேரான சிங்கமது பின்னதாக
விற்பனமாய் முதுகொடுத்து நின்றுகொண்டு வீரமுடன் குட்டியது ஈன்றபின்பு
சொற்பெரிய குட்டியென்ற சிங்கந்தானும் சுந்தரனே மத்தகெஜந் தலையிற்பாய்ந்து
உற்பனமா மூளையது உரிந்துமல்லோ வுத்தமனே சிங்கமது இறங்கும்பாரே
6030.
பாரேதான் சிங்கமது இறங்கும்போது பாங்கான கரிக்கூட்டம் நடுங்கியல்லோ
நேரேதான் தலைவாறு திசைமாறிதானும் நேர்மையுடன் கானகத்தைச் சென்றுபோகும்
சீரேதான் சிங்கமென்ற குட்டிதானும் திறளான கரிக்கூட்டம் தன்னிற்சென்று
வீரேதான் நான்குநாள் இரையுங்கொண்டு விடுபட்சி காட்டகத்தே வருகுங்காணே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக