பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6361-6370

6361.
ஆச்சப்பா பொய்சூது கபடுதந்திரம் வப்பனே நிந்தையுடன் நிலைமைமாறல்
பேச்சுடனே மெய்தவறல் பொறாமைகூறல் பேரான பேரின்ப நிலைமறத்தல்
மூச்சடங்கி மெய்போலே யாகஞ்செய்தல் முனையான நற்குருவை தூஷணித்தல்
ஆச்சரிய மானதொரு களவுமார்க்கம் வப்பனே நீக்குவதும் உண்மைபாரே
6362.
உண்மையாம் முன்புநயம் புரணிகூறல் வுத்தமரை வுதாசினங்கள் மிகவும்பேசல்
நண்மையாம் பெரியோரை பகடிகூறல் நலமுடனே பரிசுத்தோன் போலேகூறல்
கண்மையாம் மேன்மேலும் போர்விளைத்தல் கருவான போருக்கு முயன்றுநிற்கல்
தண்மையாம் சித்துமுனி நூல்களெல்லாம் தானறிந்த பித்தனைப்போல் பினற்றுவானே
6363.
பித்தனென்றால் சொல்லுகிறேன் இன்னங்கேளு பிணிதீர்க்கும் பண்டிதன்போல் பெயர்வகுத்து
சுத்தமுடன் காவிக ஷாயம்பூண்டு சுந்தரனே யுபதேசங் கூறவல்லோன்
சத்திநெறி தவறாத தருமவான்போல் தாரணியில் வேடமது பூண்டுகொண்டு
புத்தியுடன் கோபமதை யற்றவன்போல் புலம்பியே திரிவானே கழுதைமாண்பே
6364.
மாண்பான வையகத்தில் அனேகரப்பா மார்க்கமுடன் பலபலவாய் வேஷங்கொண்டு
ஆண்பிள்ளை போலாக வீரங்கொண்டு அதட்டியே வார்த்தையது மிகவுங்கூறி 
காண்பவர்கள் எல்லவர்க்கும் கருத்துளான்போல் கைதனிலே ருத்திராட்ச மாலைபூண்டு
வீண்பிள்ளை யாகவல்லோ திரிந்துகொண்டு விருதான வேஷமது கொள்வார்தானே
6365.
தானான புலிப்பாணி யின்னங்கேளு தண்மையுள்ள பூபாலா சொல்வேனப்பா
கோனான குருவருளும் பெற்றோனாக குவலயத்தில் கீர்த்திகொண்டு இருப்போனாக
தேனான மனோன்மணியாள் பதாம்புயத்தை தேற்றமுடன் எந்நாளும் துதிப்போனாக
பானான பரமசிவன் புத்திவானாய் பாருலகில் வசித்திருக்குச் சீடன்பாரே
6366.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேகேளு
நேரேதான் உந்தமக்கு காயகற்பம் நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறேன் நேர்மையாக
வீரேதான் நெல்லிக்காய் கெந்திதானும் விருப்பமுடன் பலமதுவும் ஐந்துசேரு
சீரேதான் தாளகமும் ரெண்டுசேரு சிறப்பான சிங்கியது வொன்றுகூட்டே
6367.
கூட்டவே மனோசிலையு மொன்றுசேரு குணமான கௌரியது ஒன்றுசேரு
நாட்டமுடன் பூரமது ஒன்றுசேரு நலமான வீரமது அரையேசேரு
வாட்டமுடன் அபினியது ஒன்றேசேரு வகுப்பான லிங்கமது ஒன்றுகூட்டு
தேட்டமுடன் துருசதுவும் ஒன்றேசேரு தெளிவான துத்தமது ஒன்றுதூக்கே
6368.
தூக்கியே சிற்றண்டங் கருவிலப்பா துடியாகத் தானரைப்பாய் நான்குசாமம்
தாக்குவாய் வாலுழுவைத் தயிலத்தாலே தானரைப்பாய் ஜாமமது எட்டதாக
நோக்கமுடன் கருஞ்சீரந் தயிலமப்பா நுணுக்கமுடன் தானரைப்பாய் ஆறுசாமம்
வாக்கதுவும் பிசகாத வண்ணமப்பா வளமான தாழம்பூ சார்தான்கூட்டே
6369.
சாரான தாழம்பூ நாலுசாமம் தண்மையுடன் மந்தாரை நாலுசாமம்
நாறான சரக்கெண்ணை நாலுசாமம் நலமான கொடிவேலி யாறுசாமம்
தேறான கௌதும்பை யாறுசாமம் தேற்றமுடன் துவரையது நாலுசாமம்
சேறான வெண்குன்றி யாறுசாமம் செம்மையுடன் தானரைப்பாய் மைந்தாகேளே
6370.
கேளேதான் சரக்கெல்லா மரைத்தபின்பு கெவனமுடன் பில்லையது லேசதாக
நாளேதான் போகாமல் ரவியில்வைத்து நயமான புதுக்கலசந் தன்னிலப்பா
கோளேதான் நேராமல் மைந்தாநீயும் குமுறவே தானடைத்துச் சீலைசெய்து
கீளேதான் கலசமது துவாரமிட்டு கிருபையுடன் தயிலமது இறக்கிடாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக