6581.
கொள்ளவே சண்டரச போக்குசொல்வேன் குறிப்பான ரோகமதைக் கொல்லும்வேகம்
விள்ளவே ரோகமது என்னவென்றால் வீறான சூலையது பதினெட்டும்போம்
உள்ளதொரு குன்மமது யெட்டும்போகும் ஓகோகோ பாண்டுவகை யாறுந்தீரும்
கள்ளமிலா பித்தமது நாற்பதும்போகும் கருவான வாதமென் பதுவும்போமே
6582.
போமேதான் வாயுவென்ற ரோகம்போகும் பொல்லாத பீலிகையும் மகோதரம்போம்
ஆமேதான் கெவுசியென்ற கெண்டைபோகும் வப்பனே விக்கலென்ற வுளமாந்தைபோகும்
நாமேதான் சொன்னபடி வயிற்றுவலிபோகும் நலமான சோகையொடு பிரமேகம்போம்
வேமேதான் மேகமது இருபதுவும்போகும் வேகமுடன் விஷபாகந் தீருந்தானே
6583.
தானான கயரோகம் செயரோகம்போம் தாக்கான இருமலொடு வீனைகச்சும்
கோனான மண்டையில் சூலைபோகும் கெடிதான கருப்பனென்ற வியாதிபோகும்
பானான படர்தாமரை கருப்புபோகும் படையோடு சில்விஷங்கள் எல்லாந்தீரும்
தேனான காலாங்கி நீதிவாக்கு தேசமதில் பொய்யாது மெய்யதாமே
6584.
மெய்யான சில்விஷமாங் குஷ்டம்போகும் மேலான விப்புருதி யகண்டமாலை
வெய்யவே கிராணியது கழிச்சல்போகும் வெளுப்பான சீழ்மூலம் நவமூலம்போம்
துய்யதொரு பவுத்திரமும் மறையாப்பும்போம் துலையாத புத்துவுடல் யோனிச்சூலை
எய்யவே மந்தார காரம்போகும் எழிலான நேத்திரநோய் போகும்பாரே
6585.
பாரேதான் கண்ணோய்தான் தொண்ணூற்றாறும் பாங்கான பிடரிநோய் ஜன்னிபதிமூன்றும்
நேரேதான் அண்டமென்ற வாதம்போகும் நெடிதான பாதத்தின் வீக்கம்போகும்
கூரேதான் குறிப்புற்று கன்னப்புற்று குடிகெடுக்கும் ராசனென்ற பிளவையோடும்
சேரேதான் முதுவாளை விலாவின்வாளை செயலான தமர்க்காய்ச் சிலந்திகாணே
6586.
காணவே யிடிவிழுந்து புரைமேற்புண்ணும் கண்ணோசை சதைவளர்த்தி ரோகந்தானும்
தோணவே கபவாதம் ரத்தவாதம் தோற்றாத கைமுடக்கு கால்முடக்கு
வேணதொரு நாவரட்சி சந்திடுப்பு வீரான கீலினது வாய்வுபோகும்
தோணவே கரம்புவலி முடிச்சிபோகும் கோளான மலக்குற்றம் போகும்பாரே
6587.
போகுமே அனுபானம் கண்டறிந்து போக்கவே வியாதிகளுக் குகந்தவண்ணம்
ஏகுமே கைபாகஞ் செய்பாகந்தான் யெழிலான புடபாகம் ருசிபாகந்தான்
ஆகுமே இத்தனையுங் கண்டறிந்து வப்பனே நூல்வழியே சென்றாயானால்
பாகுபதங் கால்வழிதான் காணலாகும் பாங்கான நாதாக்கள் கற்பந்தானே
6588.
கற்பமாம் சண்டரச சூதமப்பா காசினியில் சித்தரெல்லாம் மறைத்துவைத்தார்
பற்பமது வுலகோர்கள் அறியாமற்றான் பான்மைபெற நூல்களிலே மறைத்துச்சொன்னார்
அற்பமென்று நினையாரதே யருண்மைந்தாகேள் வன்புடனே யாமுனக்கு வுரைத்தநீதி
கற்பேந்திர காலமது நெடுங்காலந்தான் காசினியில் இருப்பதுவும் உண்மைதானே
6589.
உண்மையாஞ் சண்டரச பற்பந்தன்னை வுலகுபதி மாண்பர்களும் உளவறிந்து
தண்மையுடன் கைபாகஞ் செய்பாகத்தால் சட்டமுடன் செய்குவது மெய்யேயானால்
வண்மையாஞ் சித்தர்முனி நாதர்போலே வளமுடனே வையகத்தில் நெடுங்காலந்தான்
திண்மையுடன் வெகுகோடி காலமப்பா தீர்க்கமுட னிருப்பதுவும் உண்மைதானே
6590.
உண்மையாம் வையகத்தில் நெடுங்காலந்தான் வுத்தமனே நாதாக்கள் சித்தரோடும்
பண்மையுள்ள சாத்திரங்கள் பலவாராய்ந்து பாருலகில் மாண்பர்களும் பிழைப்பதற்கு
கண்மையாய் காலாங்கி தாள்பணிந்து கர்த்தாவை யஞ்சலித்து முடிகள்சாய்த்து
நன்மைபெற வுந்தனுக்கு மனதுவந்து நாட்டினேன் உண்மை சத்தியமும்பாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக