பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6441-6450

6441.
அரைத்துமே நாற்சாம மானபின்பு வன்பாக பில்லையது லகுவாய்ச்செய்து
குறையாது ரவிதனிலே காயவைத்து குணமாக சில்லிட்டுச் சீலைசெய்து
முறைதானும் பிசகாமல் பின்னுமப்பா முசியாமல் கோழியென்ற புடந்தான்போடு
நிறைபோலே தீயாறி யெடுத்துப்பாரு நிட்களங்க மானதொரு பற்பமாச்சே
6442.
ஆச்சப்பா லவணமதை எடுத்துமைந்தா வப்பனே முன்போலே காடியாலே
மூச்சடங்கத் தானரைப்பாய் நாலுசாமம் முசியாமல் முன்போலே சீலைசெய்து
மாச்சலுடன் ரவிதனிலே காயவைத்து பாங்குபெற புடந்தனையே போடுபோடு
மாச்சலது வாராது லவணபற்பம் மகத்தான நாதாக்கள் வித்தையாச்சே
6443.
வித்தையாம் லவணமென்ற பற்பந்தன்னை வீறுடனே இரண்டுபத்து புடமேபோடு
சுத்தமுள்ள பற்பமது என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செய்யும்வேதை
சத்தியமாய் யானறிந்த மட்டுமல்லோ தண்மைபெற வுந்தனுக்கு வோதினேன்யான்
புத்தியுள்ள பூபாலா புண்ணியவானே புகழுடனே செய்துகொண்டால் சித்திதானே
6444.
தானேகேள் புலிப்பாணி மகனேயப்பா தண்மையுள்ள லவணவகை இருபத்தைந்து
மானேகேள் எந்தனது நிகண்டிலப்பா மகத்தான வாயிரத்து எழுநூற்றுக்குள்
கோனான என்குருவின் கடாட்சத்தாலே கொற்றவனே லவணவகை இருபத்தைந்தும்
மானான பேர்கண்டு விடையுங்கண்டு மகத்தான யினங்கண்டு சேர்வைகாணே
6445.
காணவே லவணவகை பற்பந்தன்னை கருவாக முடித்தவர்க்கு யெல்லாஞ்சித்தி
பூணவே பாஷாண முப்பத்திரண்டும் புகழாக லவணவகை பற்பத்தாலே
ஆணவங்கள் தானொடுங்கி யடங்கிக்கொல்லும் ஆராதாரத்தைத் தான்மறைத்து வைத்தார்
வேணதொரு சரக்கெல்லாம் லவணத்தாலே விஷங்கொண்டு மடிந்தல்லோ முடியும்பாரே
6446.
பாரேதான் லவணமதைக் கொண்டபோது பாலகனே தேகமது சுசிவேயில்லை
நேரேதான் கந்தமது இருக்கிக்காட்டும் நேர்மையுள்ள தேகமது வுளுப்பேயில்லை
சீரேதான் காயாதி கற்பமாகும் சிறப்பான லவணத்தின் பற்பமல்லோ
வீரேதான் கவனமென்ற காரத்தாலே வெகுவித்தை யாடுதற்கு யினமுங்கேளே
6447.
கேளேதான் பற்பமது தானெடுத்து கெடியான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
நீளவே களஞ்சியது ஒன்றுதாக்க நிட்களங்க மானதொரு குருவினாலே
பாளமென்ற வெள்ளியது பழுக்கும்பாரு பாருலகில் நாதாக்கள் செய்யும்வேதை
ஆளாவ மாற்றதுவும் என்னசொல்வேன் வப்பனே பதினாறு மாற்றுகாணே
6448.
காணவே சிவயோகி மாண்பருக்கு கருவான லவணமென்ற தங்கந்தானும்
பூணவே பூசைமுகஞ் சொன்னதல்லால் புகழான வையகத்து மாண்பருக்கு
வேணபணி செய்வதற்கு சொன்னதல்ல வேதைமுகந் தங்கமென்ற லவணந்தன்னை
மாணமருங் கல்வியுள்ள வேடத்தோர்க்கு மகத்தான சிவயோகிக் காகும்பாரே
6449.
பாரேதான் புலிப்பாணி மன்னாகேளு பாருலகில் கருமியுள்ள மாண்பருண்டு
நேரேதான் அவர்வாசல் காத்துநின்று நேர்மையுள்ள பழக்கமது செய்யவேண்டும்
சேரேதான் கிட்டிருந்த பழக்கத்தாலே சேர்வையுடன் மனதுவந்து நூல்கள்கூர்வார்
வீரேதான் வாதமென்ற போக்கைக்கேட்பார் வேறுபட தூறுபட மயங்குவாரே
6450.
மயங்குவார் பலநூலு மறிந்தாற்போலே மார்க்கமெல்லாந் தெரிந்ததொரு மவுனிபோலும்
தியக்கமுடன் நூல்பார்த்துத் தெரிந்தோர்போலும் தீர்க்கமுடன் பவமகற்றி இருந்தோர்போலும்
தயக்கமது கொண்டல்லோ வாதுகூறி தப்பாமல் வேதைமுகங் கேட்பார்பாரு
நயம்படவே யவர்களுக்கு யிதவுகூறி நன்மையுடன் இருப்பதுவும் நன்றாய்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக