6521.
எடுத்துமே சூதமென்ற மணியையப்பா எழிலான சாரணைதான் செப்பக்கேளு
கொடுத்துமே யாறுவகை ஜெயநீர்தன்னால் துப்புரவாய் தானரைப்பாய் நாலுசாமம்
வித்ததொரு வெண்ணைதனை தானெடுத்து விருப்பமுடன் நாகுயென்ற காசந்தன்னை
அடுத்துமே பலமதுவும் நிறுத்துமைந்தா வப்பனே கவசமது செய்திடாயே
6522.
செய்யவென்றால் காடியென்ற காரந்தன்னில் செம்மலுடன் சூதமென்ற வெண்ணைதன்னை
பையவே கவசமது செய்துபாலா பாங்குபெற சுக்கானின் சீலைசெய்து
துய்யதொரு ரவிதனிலே காயவைத்து துப்புரவாய் யெழுசீலை வலுவாய்ச்செய்து
வெய்யவே யுமிபுடத்தில் போட்டுமைந்தா விருப்பமுடன் தானெடுப்பாய் பதமாய்த்தானே
6523.
பதமான சீலையது பிரித்துமைந்தா பாங்குபெறத் தானெடுப்பாய் சூதந்தன்னை
கதமான சூதமது இறுகியல்லோ கண்மணியே நல்லதுபோ லிருக்கும்பாரு
பதமுடனே மணியெடுத்து செப்பக்கேளு பாங்குபெற வெள்ளாட்டுப் பாலினாலே
மிதமுடனே நாற்சாமம் சுருக்குத்தாக்கு மிக்கான சூதமென்ற மணியுமாமே
6524.
மணியான சூதமதை எடுத்துமைந்தா மார்க்கமுடன் குளிகைக்கு வழிதான்சொல்வேன்
அணியான பூநாகம் பலம்பத்தப்பா வப்பனே மணிபோக்கி எடுத்துப்பாரு
கணிதமுடன் தேனதனில் அரைத்துமைந்தா கருத்துடனே மணிதனக்குக் கவசஞ்செய்து
பணிதமுடன் சீலையது காவிக்கல்லால் பான்மையுடன் தான்பொதித்து ரவியிற்போடே
6525.
போடவே ரவிதனிலே காய்ந்தபின்பு பொங்கமுடன் மண்மறைவிற் புடத்தைப்போடு
தேடவே தீயாறி எடுத்துப்பாரு தெளிவுடனே கவசமது இறுகியல்லோ
மூடவே கவசமதை யுடைத்துமைந்தா வுத்தமனே பார்க்குமந்த வேளைதன்னில்
கூடவே மண்ணாகஞ் செம்புதானும் குணமான சூதமதை இறுகலாச்சே
6526.
ஆச்சப்பா சூதமது மணியுமாச்சு வப்பனே சாரணைகள் இன்னஞ்சொல்வேன்
மூச்சடங்கி நெடுங்கால மிருப்பதற்கு முனையான சூதமதை மணியேசெய்தால்
பாச்சலுடன் நெடுந்தூரம் நடக்கலாகும் பாங்கான குளிகையது கீழ்நோக்காது
வீச்சுடனே கிருஷ்ணாவ தாரனப்பா விண்ணுலகில் ஆடியதோர் குளிகையாச்சே
6527.
குளிகைக்கு சாரணைகள் என்னவென்றால் கொற்றவனே ஊமத்தங் காய்கள்தன்னை
நளினமுடன் தானரைத்துக் கவசஞ்செய்து நலமுடனே சீலையது வலுவாய்ச்செய்து
பளிதமது வாறாது பாலாகேளு பாங்குபெற மண்மறைவிற் புடத்தைப்போடு
வனிதமுடன் கவசமது நீக்கிமைந்தா வளமையுடன் தானெடுத்து செப்பக்கேளே
6528.
செப்பவென்றால் குளிகையது என்னசொல்வேன் செம்மலுடன் போகும்வகை முறைமைகேளு
ஒப்பமுடன் குளிகைதனை எடுத்துமைந்தா ஓகோகோ நாதாக்கள் செய்யும்வண்ணம்
தப்பிதங்கள் வாராமல் தவளைச்சங்கு சாங்கமுடன் தானிடித்து மாவதாக்கி
இப்புவியில் சித்துவிளை யாடுதற்கு எழிலான சாரணைகள் சொல்வேன்பாரே
6529.
சொல்லவென்றால் சாரணைகள் நிம்பழத்தால் சுத்தமுடன் தானரைத்து மைபோலாக்கி
வெல்லவே சூதமென்ற கட்டியப்பா வேகமுடன் தானரைத்துக் கவசஞ்செய்து
புல்லவே ரவிதனிலே காயவைத்து புகழான மண்மறைவிற் புடத்தைப்போடு
வெல்லவே புடமாறி எடுத்துப்பாரு வேதாந்தத் தாயினது கடாட்சந்தானே
6530.
தானான புடமதுவும் கவசம்நீங்கி தண்மையுள்ள மணிதனையே எடுத்துமைந்தா
பானான சக்கினிட சுண்ணந்தன்னை பார்த்திபனே தானெடுத்து மைபோலாட்டி
கோனான குருசொன்ன நீதிபோலே கொற்றவனே கைமுறைகள் பிசகாமற்றான்
ஊனான சங்குதனைக் கவசஞ்செய்து வுத்தமனே புடம்நூறு போட்டிடாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக