பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6571-6580

6571.
சேரேதான் குகையிலிட்டு செப்பக்கேளும் செயலான ஆறுவகை ஜெயநீர்தன்னை
வீரேதான் மூசையிட்டு குடோரிசேர்த்து விருப்பமுடன் துருத்தியது நாலுகொண்டு
நேரேதான் தானுருக்கி மைந்தாகேளு நேர்மையுடன் கருக்கட்டி வார்ப்பாயப்பா
ஆரேதான் மற்றொருவர் காணாமற்றான் வப்பனே ஆறியபின் உடைத்துப்பாரே
6572.
உடைத்துமே பார்க்கையிலே என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்தவண்ணம்
படிகமும் நவநீதம் யானறிந்து பட்சமுடன் யானுரைத்த பச்சைதன்னில்
மடைபோன்ற சீரலது இருக்கும்பாரு மகத்தான வணிகரிடஞ் சென்றாயானால் 
சடைநீக்கி சாணைதனில் கொண்டுமல்லோ சட்டமுடன் ஜோதிதனை யறிந்துபாரே
6573.
அறிவான பச்சையென்ற வைப்புதன்னை வப்பனே யுந்தமக்கு வரைத்தவார்போல்
குறியான முறையறிந்து வழியறிந்து குணமான பாகமது தானறிந்து
முறியாமல் வுருக்குமுகம் பாலறிந்து முனையான கருவதனில் பாச்சும்போது
நெறியான பிறவியென்ற கல்லைப்போலும் நெடிதான பச்சையென்ற தளமுமாச்சே
6574.
ஆச்சப்பா யின்னமொரு பாகஞ்சொல்வேன் அறிவுள்ள சிறுபாலா வன்புள்ளானே
ஆச்சரிய மானதொரு செப்புதன்னை வப்பனே புலிப்பாணி யறைவேன்பாரு
மூச்சடங்கி தானிருந்தேன் நெடுங்காலசித்து மூதுலகில் சமாதிகொண்ட காலாங்கிநாதர்
பாச்சலுடன் சீனபதி சமாதிருந்து பட்சமுடன் எந்தனுக்கு உரைத்தவாறே
6575.
வாறான வெடியுப்பு பலமோபத்து வளமையுள்ள சீனமது பலமோபத்து 
கூறான கண்டரது பலமோபத்து குறிப்பான கல்லுப்பு பலமோபத்து
சேறான மிருதாருசிங்கி பலமோபத்து செம்பவள புத்துமது பலமோபத்து
மாறான கெந்தியது துலாமோவைந்து மகத்தான பூரமது பலமுமைந்தே
6576.
அஞ்சான சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி வப்பனே சாரமென்ற ஜெயநீர்தன்னால் 
மிஞ்சவே தானரைப்பாய் நாலுசாமம் மிக்கான பில்லையது லகுவாய்ச்செய்து
அஞ்சாமல் சக்ரமாம் வாலைதன்னில் துப்புரவாய்த் தானமைத்து பாண்டந்தன்னில்
பஞ்சமென்ற கவசமது வைந்தும்வைத்து பட்சமுடன் ஒன்றின்மே லொன்றுவையே
6577.
வைத்துமே கரகமென்ற பாண்டந்தன்னில் வளமுடனே சீலையது வலுவாய்ச்செய்து 
பொய்த்துமே போகாமல் தீயைமூட்டி பொங்கமுடன் தானெரிப்பாய் கமலம்போலே
சுத்துமே சலமதனை விட்டுமைந்தா சுந்தரனே வாலையது எரிக்கும்போது
பத்துமே தீயதுவும் யேராமற்றான் பாங்குபெற வாலைதனை எரித்திடாயே
6578.
எரிக்கையிலே பதங்கமது என்னசொல்வேன் எழிலாக சாமமதி லைந்திலே
சரியான சூதமென்ற பதங்கந்தானும் சதுரான மேற்கலசந் தன்னைப்பற்றி
சரிகுழலில் மேலாகப் பதங்கமேறி சுத்தமுடன் தவளமது நிரந்தைப்போலும்
உரியதொரு சூதமென்ற ஆசுதானும் வுத்தமனே பளபளத்து நிற்கும்பாரே
6579.
பாரப்பா சாமமது நாலேயாகும் பாங்குபெற தானெரிப்பாய் கமலம்போலே
நேரப்பா எரித்தவுடன் காரமேறி நேர்மையுடன் சரக்குமிக சேர்த்துமல்லோ
வேரப்பா வடிப்பாண்டம் சிட்டம்நின்று விளக்கொளிபோல் சிறுபொடியாந் தகடுபோலே
ஆரப்பா தவளம்போ லிருக்கும்பாரு வப்பனே சண்டரசப் பெருமைதானே
6580.
பெருமையாம் சண்டரசமென்ற பற்பம் பேருலகில் நாதாக்கள் மறைத்துமல்லோ
அருமையா முள்ளதொரு பற்பந்தன்னை வப்பனே தான்மறைத்துப் பாடிவைத்தார்
ஒருமையாம் எல்லவரும் அறிவதற்கு உத்தமனே உந்தமக்கு உகமைகூறி
பெருமையாய் யானுரைத்தேன் உந்தமக்கு பேரான கைமுறையை தெரிந்துகொள்ளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக