பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6391-6400

6391.
போதித்தேன் விலாங்கினுட மாயாகற்பம் பொங்கமுடன் சமுசாரிக்கான கற்பம்
வாதிகளுங் கண்டறிந்து செய்வாரப்பா வையகத்தில் விதியுள்ளான் செய்யுமார்க்கம்
சோதித்து சாத்திரங்கள் கண்டாராய்ந்து சுந்தரனே உந்தனுக்கு ஓதிவைத்தேன்
சாதித்தால் குளிகையென்ற விலாங்குகற்பம் சாங்கமுடன் யோகிகட்கு உறுதியாமே
6392.
உறுதியாஞ் சிற்றின்பங் கொண்டபேர்க்கு வுத்தமனே யாக்கைநரம் புடையபேர்க்கும்
நிறுதியெனும் தாதுவிருத்தி யில்லாதார்க்கும் நீடூழி போகமது கொள்வோருக்கும்
குறுதியது யில்லாத தேகத்தோர்க்கும் குணமில்லா மணமில்லா மேனுயோர்க்கும்
அறிவுகுன்றி யிருப்பதொரு மாண்பருக்கும் வழகான குளிகையது பாருபாரே
6393.
பாரப்பா குளிகையது கொண்டபேர்க்கு பாங்குடனே யேழானை பலமுண்டாகும்
ஆரப்பா குளிகையது செய்யப்போறார் வப்பனே யறிவுடையோர் செய்யும்வேதை
நீரப்பா தனிலிருக்கும் விலாங்குகற்பம் நீதியுள்ள கற்பமது என்னசொல்வேன்
பேரப்பா சிவயோகி செய்யாரப்பா பேரின்ப நிலைநடந்தோர் செய்யார்தானே
6394.
செய்வார்கள் சிற்றின்ப முடையபேர்கள் ஜெகதலத்தில் கோடியுண்டு லக்கோயில்லை
துய்யதமிழ் பண்டிதங்கள் மெத்தவுண்டு துப்புரவாய்ச் செய்துமல்லோ வதிதஞ்செய்வார்
மெய்யான கற்பமதை செய்தபேர்கள் மேதினியில் கலவிக்கு முதன்மையாவார்
பொய்யான கற்பமது கூறவில்லை புண்ணியனே யுந்தனுக்கு புகட்டினேனே
6395.
புகட்டினேன் உந்தனுக்கு வன்புகூர்ந்து புகழான விலாங்கினது கற்பந்தன்னை
ஜகமுதும் சித்துமுனி சாத்திரத்தில் சாங்கமுடன் மறைத்துவைத்தார் என்னசொல்வேன்
அகங்கொண்ட மாண்பர்களுக் காகாவென்று வப்பனே சிடிகையெல்லா மறைத்துப்போட்டார்
சுகம்பெறவே யடியேனும் மனதுவந்து சூட்டினேன் மாண்பர்களுக் குகந்தவாறே
6396.
வாறான சூத்திரத்தில் மறைத்துதெல்லாம் வாகுடனே சாத்திரத்தில் பெருக்கிவிட்டேன்
கூறான சிடிகையென்ற மார்க்கந்தன்னை குணம்பெறவே செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி
மாறாமல் கைபாகம் செய்பாகந்தான் மன்னவனே செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி
தூறான மார்க்கமது சென்றபேர்க்கு துப்புரவாய் யாதொன்றும் பலியாதன்றே
6397.
பலியாது குடிகெடுக்கும் பாவியோர்க்கும் பாங்கான சண்டாள துரோகியோர்க்கும்
வலிதான பவமுடைய கருமியோர்க்கும் வாகுடைய சிடிகையென்ற வேதைதானும்
நவியாளர் தங்களுக்கும் அவனாதியோர்க்கும் நற்பெண்டிர் களைக்கெடுத்த துரோகியோர்க்கும்
கலியுடைய சப்பாணி குருடருக்கும் சட்டமுடன் ஒருக்காலும் பலியாதன்றே
6398.
அன்றான போகரே ழாயிரத்தில் வப்பனே கடைக்காண்டந் தன்னிலப்பா
குன்றான மலைபோலே கோடிகற்பம் கொட்டினேன் நாதாக்கள் அறிந்ததில்லை
தென்றிசையில் அகத்தியனார் காவியத்தில் தேற்றமுடன் வெகுகோடி பாடிவைத்தார்
வென்றிடவே சத்தகாண்டந் தன்னிலப்பா விருப்பமுடன் பாடிவைத்தேன் கோடியாமே
6399.
கோடியா மின்னமொரு கற்பஞ்சொல்வேன் கோபாலா என்குருவே குமரவேலா
வாடியே மயங்காதே மன்னாகேளு வளமையுடன் நாரையென்ற கற்பஞ்சொல்வேன்
தேடியே கருநாரை கொண்டாராய்ந்து தேற்றமுடன் குடல்போக்கி சிறகுபோக்கி
ஆடியதோர் சூதமென்ற பாலைதன்னை வப்பனே யதன்வாயிற் புகட்டிடாயே
6400.
பகட்டவே இருவாயுந் தைத்துமல்லோ பொங்கமுடன் தாளியென்ற பாண்டந்தன்னில்
அகலமது சாணதுவும் விரல்தான்நாலு வப்பனே பூநீரைப் பரப்பிமைந்தா 
நிகலவே நாரையென்ற பட்சிதன்னை நிஷ்களங்க மாகவல்லோ பாண்டம்வைத்து
புகலவே மேலுமந்த பூநீர்விட்டு புண்ணியனே மேற்பாண்டந் தன்னைமூடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக