6471.
போடேநீ குப்பிக்கு சீலையேழு பொங்கமுடன் வாயைவிட்டு சீலைசெய்து
கூடேநான் தளவாயாம் பாண்டந்தன்னில் கொற்றவனே மணலிட்டுக் குப்பிவைத்து
நாமேதான் குப்பிதனில் மணலுமிட்டு நயமாக மேல்மூடி சீலைசெய்து
ஆடேநீ நாற்சாம மெரித்தபோது வப்பனே செந்தூர மாகும்பாரே
6472.
பாரேதான் செந்தூரந் தனையெடுத்து பாங்குடனே நாதாக்கள் சொன்னமார்க்கம்
சேரேதான் வெள்ளியது களஞ்சிநூறு தேற்றமுடன் தானெடுத்து குகையிலிட்டு
கூரேதான் தானுருக்கி மைந்தாகேளு குறிப்புடனே குருவொன்று தன்னிலீய
வீரேதான் வர்ணமது என்னசொல்வேன் வீறான போக்கதுவும் கூறப்போமோ
6473.
போமேதான் வெள்ளிதனை யுருக்கிப்பார்க்க போக்கான வெள்ளியது தங்கமாச்சு
நாமேதான் சொன்னபடி தங்கமாற்று நாதாக்கள் தம்மாலே கூறப்போமோ
வேமேதான் பிறவியென்ற தங்கந்தானும் வேதாந்தத் தங்கமது இதற்கீடுண்டோ
ஆமேதான் சிவயோகத் தங்கமாகும் அப்பனே காலாங்கித் தங்கமாமே
6474.
தங்கமா மின்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தயவாய்க்கேளு
வங்கமதைத் தான்கொடுத்து வூதிற்செம்பை வளமாகத் தானுருக்கி எடுத்துமைந்தா
துங்கமுள்ள செம்பதனில் நூற்றுக்கொன்று துப்புரவாய்த் தானுருக்கிக் குருவொன்றீய
பங்கமிலாத் தங்கமது என்னசொல்வேன் பாருலகில் சிவயோகிக் காணலாச்சே
6475.
ஆச்சப்பா செம்பதுவுந் தங்கமாச்சு வப்பனே நாதாக்கள் மறைத்துவைத்தார்
மாச்சலது வாராது தங்கச்செம்பாம் மகத்தான தங்கமது இதற்கீடுண்டோ
பூச்சுடைய பிறவியென்ற தங்கரேக்கு புகலவொண்ணா சுயத்தங்கம் இதற்கீடுண்டோ
ஆச்சர்ய மானதொரு தங்கமாச்சு வப்பனே நாதாக்கள் மறைத்தார்தானே
6476.
தானான தங்கமதைத் தானெடுத்து தண்மைபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று
கோனான குகைதனிலே விட்டுருக்கி கொற்றவனே செம்பதுவும் ஒன்றேயீந்தால்
தேனான வெள்ளியது பழுக்கும்பாரு தேற்றமுடன் மாற்றதுவுங் கூறப்போமோ
மானான தேவேந்திரன் வீற்றிருக்கும் மகத்தான வாணியென்ற தங்கமாச்சே
6477.
ஆணியா மின்னமொரு போக்குசொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
காணியாஞ் செந்தூரம் எடுத்துமைந்தா காத்துடனே குடவனிலே நூற்றுக்கொன்று
வாணிபதந் தான்வணங்கி கொடுத்துப்பாரு வளமான குடவனது வூறலேகி
ஆணியாந் தங்கமது கொப்பேசொல்வார் வப்பனே இந்திரபீட தங்கமாச்சே
6478.
இந்திரனார் வீற்றிருக்கும் ஆணித்தங்கம் எழிலானத் தங்கமது எவர்தான்செய்வார்
சுந்தரம்போல் சிவவேடம் பூண்டுமல்லோ துப்புரவாய்த் தானிருக்கும் யோகவான்கள்
விந்தையுடன் வினோதமென்ற வேதைதன்னை விருப்பமுடன் செய்துமல்லோ மனதுவந்து
அந்தமெலாம் புகழவரமும் பெற்று வப்பனே வசித்திருப்பார் போகமாண்பே
6479.
மாண்பான யின்னமொரு போக்குசொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
ஆண்மையுள்ள காலாங்கி நாதர்பாதம் வப்பனே நான்வணங்கி சீனதேசம்
வீண்காலம் போகாமல் குளிகைகொண்டு விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால்
தாண்டவம்போல் தேசாதி தேசமெல்லாம் சற்குருவைத் தானடுத்து வரம்பெற்றேனே
6480.
பெற்றேனே காலாங்கி கடாட்சத்தாலும் பெருமையுள்ள மனோன்மணியாள் கிருபையாலும்
கற்றறிந்த நாதாக்கள் அருளினாலும் கைலாச நாதருட புண்ணியத்தால்
சற்றெங்குந் தேடியல்லோ கண்டாராய்ந்து சத்தமுடன் வேதைமுகம் உளவுகண்டு
பெற்றதொரு மைந்தனைப்போல் என்னையெண்ணி பெருமையுள்ள மார்க்கமெலாம் ஓதினேனே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக