பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6511-6520

6511.
வரிசைபெற நவரத்ன மொன்பதுந்தான் வளமைபெற கல்லாணி யாக்கிக்கொண்டு
அறிவுடைய சிம்பமதில் அத்திரந்தான் வப்பனே மூலிகையைக் கயற்போலாக்கி
புரிசடையோன் தம்பிரான் தன்னைதானும் புகழான தேர்மீதில் உச்சாடித்து
சரியுடனே மூலமதிற் தாள்கொண்டுபூட்டி தற்பரனை கள்ளாணி முடிக்கிடாயே
6512.
முடுக்கவே கருவிகர ணாதியந்தம் முனையான உடல்பொருள் களாவியெல்லாம்
தொடுக்கவே யண்டசராசரங்கள் மட்டும் தோறாமல் தாம்கண்ட வேதைகோடி
நடுக்கடலில் நாணியறுந் திட்டார்போலே நலமான பூதமெல்லா மொன்றேயானால்
படுகணையில் மாறன்விட்ட வம்புபோலே பாரினிலே வாதமது பலிக்கும்பாரே
6513.
பலிக்குமே அறிவுடையோன் செய்துகொள்ளும் பாங்கான வேதைமுகங் கோடாகோடி
ஜொலிக்குமே பிரணவத்தால் மூலிகட்டும் சோராமல் சரக்கெல்லாம் சுருண்டுமாளும்
ஒலிக்குமே லோகமெலாம் ஒன்றாய்க்கூடி வுத்தமனே வாதத்துக் குறுதியாச்சு
சலியாத சரக்கெல்லாம் ஐந்தைந்தாக சட்டமுடன் செய்வார்க்கு வாதமாமே
6514.
வாதமென்றால் சரக்குகளுள் பஞ்சபூதம் வளமான பூதமதில் ஒன்றுதப்பில்
கீதமென்ற கின்னரிக்கு நாணற்றாப்போல் கீர்த்தியுள்ள சரக்கெல்லாம் விழலாய்ப்போகும்
தோதமுடன் வாதமது காணவென்றால் தோறாமல் பஞ்சபூதத்தைப் பாரு
பேதமது வாராது பூதங்கண்டால் பேரான வுலகினிலே சித்தாவாயே
6515.
சித்தான சித்துமுனி இந்தமார்க்கம் சிறப்புடனே சாத்திரத்தில் சொல்லவில்லை
முத்தான நூலெல்லாம் அனேகங்கண்டேன் முனையான பஞ்சபூத பேதந்தன்னை
சத்தேனும் மாண்பர்களும் பிழைப்பதற்கு தயவுவைத்து யாரேனுங் கூறவில்லை
முத்திபெற சாத்திரங்கள் கோடாகோடி மூதுலகில் சொன்னவர்கள் கோடியுண்டே
6516.
கோடியே நாதாந்த சித்துதாமும் குறிப்புடனே சாத்திரங்கள் அதிதஞ்சொன்னார்
தேடியே சாத்திரங்கள் தலைவகுத்து செப்பினார் யாதொன்றுங் கண்டதில்லை
பாடியதோர் வெகுநூல்கள் கைமறைப்பு பாருலகில் பாடிவைத்தார் சித்தர்தாமும்
நீடியே யுந்தனுக்கு வாதங்காண நீதியுடன் போதித்தேன் உண்மைதானே
6517.
உண்மையா மின்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே நாதாக்கள் சொன்னாரில்லை
வண்மையுள்ள காலாங்கி கிருபையாலே வளம்பெரிய சித்தரெல்லாம் மறைத்துவைத்த
தண்மையுள்ள கைபாகஞ் செய்பாகத்தை சட்டமுடன் நாதாக்கள் கூறவில்லை
நண்மைபெற மாண்பர்களும் பிழைக்கவென்று நன்மையுடன் யானுரைப்பேன் பண்புதானே
6518.
தானான சூதமது பலந்தானைந்து தாக்குடனே சுத்திசெய்து எடுத்துமைந்தா
பாங்குடனே மருதாறு சிங்கிதன்னை பட்சமுடன் தானெடுத்து செப்பக்கேளு
மானான பலமதுவும் பத்தேயாகும் மகத்தான கல்வமதி லிட்டுமைந்தா
தேனான செவ்வாவின் பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
6519.
நாலான சாமமது வரைத்தபின்பு நலமான மூசையது குரைதான்செய்து
பாலான ரவிதனிலே காயவைத்து பாங்குபெற மூசைதனை யெடுத்துமைந்தா
தாலான தளவாயாம் பாண்டந்தன்னில் தண்மையுடன் பூமணலைக் கொட்டியல்லோ
காலான மூசைதனை மையம்வைத்து கண்மணியே மூசைதனில் சூதந்தாக்கே
6520.
தாக்கவே மேலுமந்த பில்லைமூடி தளமுடனே மணலதனை மேலேசெய்து
நோக்கமுடன் தானெரிப்பாய் நாலுசாமம் நுட்பமுடன் தீயாறி எடுத்துப்பாரு
பாக்கதுபோல் வுருளையது திரண்டுமல்லோ பாங்குடனே தானிருக்கும் வருண்மைந்தாகேள்
வாக்கதுவும் பொய்யாது புண்ணியவானே வளம்பெறவே சூதமதை எடுத்திடாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக