6531.
புடமதுவுஞ் சதமென்றால் நூறுபோடு புகழான ரசமணியுங் கட்டும்பாரு
தடமதுவும் நடப்பதற்கு இதுவேசித்தி தண்மையுள்ள சூதமது குளிகையாச்சு
மடந்தனிலே தானிருக்கும் சிவயோகிக்கு மகத்தான குளிகையது கிட்டிற்றானால்
நடராஜ சுந்தரனார் கிருபையாலே நாதாந்த சித்துவெனச் செப்பலாமே
6532.
சித்தான சித்துகளும் இவர்க்கீடுண்டோ சிறப்பான நாதாக்கள் கண்டதில்லை
வெற்றியுடன் அஷ்டசித்து இதனாலாகும் வேதாந்தத் தாயாரும் பிசங்கிப்பாள்
முத்திபெற மோட்சவழி காணலாகும் முனையான சிவயோகி இவர்தானென்பார்
சத்தியங்கள் தவறாமல் குளிகைகொண்டு சட்டமுடன் நடப்பவனே சித்தன்பாரே
6533.
பாரேதான் குளிகையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலகனே
நேரேதான் சாத்திரங்கள் உளவாராய்ந்து நேர்மையுடன் மாண்பர்களும் ஆகாவென்று
சீரேதான் குளிகைதனை முடித்துமல்லோ சிறப்புடனே யஷ்டசித்து யாராலாகும்
ஆரோதான் உந்தமக்கு போதிப்பாரே வப்பனே யுந்தமக்கு வருள்செய்வேனே
6534.
அருளான வருளிதுவும் என்னவென்றால் வப்பனே முன்செய்த புண்ணியத்தால்
பொருளான சூதமென்ற மணிதானப்பா புண்ணியனே யுந்தமக்கு கிட்டலாச்சு
இருளான பவக்கடலை விட்டகற்றி எழிலான தவக்கடலை யேகியல்லோ
மருளான ஞானமென்ற கடலைக்கண்டு மன்னவனே சிவயோக நிலையில்நில்லே
6535.
நிற்கவென்றால் உந்தமக்கு எல்லாங்கிட்டும் நீதியுடன் சூதமென்ற குளிகைதன்னால்
அற்பமென்று நினையாதே யருண்மைந்தாகேள் ஆகாகா விதியிருந்து கிட்டலாச்சு
சொற்பமெனும் கருமியென்ற மாண்பர்தம்மை சுட்டறுத்து விட்டகற்றி துகளகற்றி
கற்புடைய மாயவலைச் சிக்கறுத்து களங்கமில்லா சிவயோக தவத்தைப்போற்றே
6536.
போற்றியே சூதமென்ற குளிகைதன்னை பொங்கமுடன் துவாரமிட்டு கயர்தான்மாட்டி
நாற்றிசையும் மெச்சுதற்கு கண்டம்போல் நாயகனே கழுத்திலிட்டு வேடம்பூண்டு
ஆற்றவே நெடுந்தூரம் நெடுந்தேசம் வப்பனே வயிரமாங் காதவோசை
ஏற்றமுடன் தானடக்க வாசியோடும் எழிலான குளிகையது மகிமைபாரே
6537.
பார்க்கவென்றால் அறுபத்து நான்குசித்தும் பாருலகில் வெகுகூத்து வாடலாகும்
தீர்க்கமுடன் ஆவினது முதுகில்வைத்தால் திறமான பசுவதுவும் பால்கொடாது
ஏர்க்கவே குளிகையது வேகத்தாலே யெளிதான பாலதுவும் மேலேநோக்கும்
ஆர்க்கமுடன் மணியதுவை எடுத்தாலல்லோ வப்பனே பாலதுவுங் கறக்கும்பாரே
6538.
கறக்குகின்ற ஆவதுவும் பால்கொடாது காசினியில் இதுவுமொரு சித்துவாகும்
திறமுடைய குளிகைதனை யெடுத்துமைந்தா தீர்க்கமுடன் பதனமாய்ச் செய்துகொண்டு
உறமுடனே நெடுங்கால மிருந்துகொண்டு வுத்தமனே சிவயோகஞ் சாதித்தேதான்
நிறமதுவும் மாறாமல் சதாகாலந்தான் நீட்சியுடன் சமாதிமுகம் நின்றிடாயே
6539.
நிற்கவே விதியிருந்த புண்ணியத்தால் நிலமையுள்ள குளிகையது கிடைக்கலாச்சு
அற்பமென்ற பொருளெல்லா மாண்பாகேளு வப்பனே யுந்தனுக்குக் கிடைக்கலாச்சு
விற்பிடித்த மன்னவரும் நன்றமைத்து விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால்
உற்பனமாங் குளிகையது வாய்க்கலாச்சு ஓகோகோ நாதாக்கள் கடாட்சந்தானே
6540.
நாணவே யின்னமொரு போக்குசொல்வேன் கருவான புலிப்பாணி மகனேகேளு
தோணவே செம்பதுவுஞ் சேர்தானொன்று செப்புகிறேன் செம்புதனை மூசையிட்டு
வேணபடி சரக்குவகை சொல்வேனப்பா வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
பானமெனும் வெடியுப்பு பலந்தானொன்று பாங்குபெற துருசதுவும் பலந்தானொன்றே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக