பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6561-6570

6561.
விலக்கவே வைப்புமுதல் உளவுதன்னை வெகுபேர்கள் அறியாமல் வினயங்கொண்டு
துலக்கமுடன் நூல்தனைக் காணாமற்றான் துப்புரவாய்க் கருவிகர ணாதியந்தம்
பலக்கவே சிடிகையென்ற வேதைதன்னை பாராமல் பாருலகில் கெட்டார்கோடி
ஜலக்கம்ப மென்றதொரு கெந்திபோலே சாங்கமுடன் செய்வதற்கு மதிபோனாரே
6562.
மதியான வயிரமது பிறவிபோலாம் மகத்தான நாதாக்கள் செய்தவேதை
துதியான பிறவியென்ற கல்லினாலே துப்புரவாய் ராசாதி ராஜர்தாமும்
நதிகளிலும் மலைகளிலும் கண்டெடுத்த நாதாந்த சித்தொளியே கல்போலாகும்
பதியான சுனைதனிலும் ஓடைதன்னில் பாங்குடனே வயிரமது விளையுந்தானே
6563.
தானான இன்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தம்பிரானே
கோனான இந்தமுறை வேதையப்பா குவலயத்தில் நாதாக்கள் கூறவில்லை
பானான படிகமது சேர்தானொன்று பாலகனே பூநீரும் பலந்தானொன்று
தேனான தேன்வளையல் சேர்தான்காலாம் தேற்றமுடன் பவளமென்ற புத்துகாலே
6564.
காலான பண்பவள சேர்தான்காலாம் கண்மணியே வளையலுப்பு சேர்தான்காலாம்
மாலான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி மகத்தான வங்கமென்ற செந்தூரந்தான்
நூலான நூற்படியே கால்சேர்கூட்டி நுட்பமுடன் தானுருக்கிக் கருவமைத்து
சூலான கெற்பமது வுள்ளிருக்க துப்புரவாய் மணிபோலே வார்த்திடாயே
6565.
வார்க்கவென்றால் மணியதுவும் உருகியல்லோ வளமான கெம்பினுட தளம்போலாகும்
தீர்க்கமுடன் தளமெடுத்த சாணைதன்னில் திறமுடனே தான்கொடுத்து மதியம்போண்டு
ஏற்கவே யிவ்வேதை சிடிகைவேதை எழிலான கெம்பினுட தளந்தானாச்சு
பூர்க்கவே சாணைதனில் மணிகொடுத்தால் புகழான கெம்பினுட ஜோதிதானே
6566.
ஜோதியாங் கெம்பினுட மகிமைதன்னை சுந்திரனார் சித்துமுனி மறைத்துவைத்தார்
வாதிகளும் காணாமல் மதியம்பூண்டு வண்மையுடன் கைமறைப்பைத் தெரியாமற்றான்
நீதியுடன் சாத்திரங்கள் படித்தயர்ந்து நிஷ்களங்க மாயிருந்தார் கோடிபேர்கள்
வீதியெங் கொல்லனது மாளிதன்னில் விரும்பூசி விற்றதொரு கதையுமாச்சே
6567.
கதையான கதைகாட்டி மையம்பூண்டு காசினியில் தான்மறைத்தார் வினோதவித்தை
கெதையான உப்பினிட கெதையைச்சொன்னேன் கெணிதமுடன் எண்ணிகண்டு காணாமற்றான்
விதைபோட்டால் சுரையொன்று காய்க்குமோசொல் வித்தகனே நூல்களெல்லாம் வினயங்கூறி
உதயம்போல் கெம்புவைப்பு இருக்க உத்தமனே வெகுதேசஞ் சென்றார்பாரே
6568.
பாரேதான் மணிதனையே சாணைதன்னால் பக்குவமாய்த் தான்பொடித்து ஒளியுங்கொண்டு
நேரேதான் வணிகரிடஞ் சென்றாயானால் நெடிதான செம்பதுவும் பிறவியென்று
சீரேதான் ஜெகத்திலுள்ள மாண்பரெல்லாம் ஜெகதலத்தில் பிறவியுள்ள கல்லேயென்று
தீரேதான் ஜெகத்திலுள்ள மாண்பரெல்லாம் செப்பிடுவார் பின்னொன்றும் செப்பார்தானே
6569.
தானான கெம்பதனை யார்தான்செய்வார் தண்மையுள்ள புலிப்பாணி மன்னாகேளு
கோனான நாதாக்கள் சித்துதாமும் குவலயத்தில் மறைத்துவைத்தார் நூல்களெல்லாம்
தேனான நூல்களெல்லாம் உளவாராய்ந்து தேற்றமுடன் ஓதிவைத்தேன் உந்தமக்கு
பானான பரஞ்சுடரே போற்றிசெய்து பாலகனே சதாநித்தம் துதிப்பாய்தானே
6570.
துதிப்பான யின்னமொரு பாகஞ்சொல்வேன் துப்புரவாய் புலிப்பாணி மன்னாகேளு
மதிப்புடைய படிகமென்ற கல்தானப்பா மன்னவனே சேரதுவும் நிறுத்திக்கொண்டு
பதிவுடைய காச்சிக்கல் பச்சைதன்னை பாங்குபெற இருசேராய் நிறுத்துக்கொண்டு
மதிபோன்ற பூநீருங் கூடச்சேர்த்து மகத்தான வளையல் ரங்குதானுஞ்சேரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக