பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6381-6390

6381.
சாய்க்கவே செம்பதுவும் மாற்றோபத்து தனியான மாற்றதுவும் என்னசொல்வேன்
வாய்ந்ததொரு பிறவியென்ற தங்கந்தானும் மகத்தான தங்கமது இதற்கீடுண்டோ
தேய்ந்ததொரு தேய்வுயென்ற தங்கமப்பா தேற்றமுள்ள பிறவியென்ற தங்கமாச்சு
பேய்ந்ததொரு மலைபோலே விளைந்ததங்கம் பெருமையுள்ள சிருஷ்டிப்பு தங்கந்தானே
6382.
தானான தங்கமது யோகித்தங்கம் தண்மையுடன் சிவவேடம் பூண்டோர்க்காகும்
கோனான குருத்தங்கம் ஞானத்தங்கம் கொற்றவர்கள் ராஜாக்கள் அணியுந்தங்கம்
பானான மனோன்மணியாட் குகந்ததங்கம் பாரினிலே சித்தர்மெச்சும் தங்கமப்பா
தேனான குருக்கள் மாரணியுந்தங்கம் தேஜொளிவின் சொரூபமென்ற தங்கந்தானே
6383.
தங்கமா மின்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மகனேகேளு
பங்கமில்லா தங்கமது என்னசொல்வேன் பாலகனே ஒன்பதுக்கு ஒன்றுதாக்கு
துங்கமுள்ள ரசிதமது மாற்றோபத்து துடியான பசுமையென்ற யேமமாச்சு
புங்கசித்தி எட்டுடைய சிவயோகிக்கு புனிதனே தங்கமது வாய்க்கும்பாரே
6384.
பாரேதான் கருமிகட்கும் சண்டாளர்க்கும் பலியாது இவ்வேதை பலியாதப்பா
ஆரோதான் சாத்திரங்கள் அனேகஞ்சித்தர் அபரிதமாய்ப் பாடிவைத்தார் கோடாகோடி
நேரேதான் இவ்வேதைக் குவமைகூற நெடியபுகழ் வையகத்தில் ஆராலாகும்
சீரேதான் விட்டகுறை இருந்தபேர்க்கு தீர்க்கமுடன் வாய்ப்பதும் மெய்யதாமே
6385.
மெய்யான வித்தையது என்னசொல்வேன் மேதினியில் நாதாக்கள் கூறும்வித்தை
பொய்யான வித்தையது யனேகங்கோடி பூட்டினார் வெகுகோடி மாண்பர்க்காக
வையகத்தில் வாழுகின்ற மாண்பருக்கு மகத்தான செந்தூரம் வுண்டபேர்க்கு
ஐயமற ரோகாதி ரோகமெல்லாம் வப்பனே வுடலைவிட்டே யேகும்பாரே
6386.
ஏகுமே யின்னமொரு கற்பம்பாரு யேற்றமுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு
பாருடைய நெய்போன்ற விலாங்குதன்னை பட்சமுடன் தான்பிடித்து பண்பாய்க்கேளு
சாகுதற்கு முன்பாக சூலந்தன்னை சட்டமுடன் வாயிலிட்டு விலாங்குதன்னை
வேகுதற்கு பாண்டமது தானமைத்து வேகமுடன் பூநீரைப் பாண்டம்போடே
6387.
போட்டுமே விலாங்குதனை மேலேவைத்து பொங்கமுடன் மேலுமந்த பூநீர்விட்டு
நாட்டமுடன் ஜலமதனை மேலேவிட்டு நிஷ்களங்க மாகவல்லோ பாண்டமூடி
வாட்டமுடன் தானவித்து ரவியிற்போடு வளமான விலாங்கதுவும் வுலர்ந்தபின்பு
தாட்டிகமாய் கல்லுரலில் இட்டுமைந்தா சட்டமுடன் இரும்புலக்கை தன்னாற்சாடே
6388.
சாடவே சூரணமாய்ச் செய்துகொண்டு சட்டமுடன் சுக்குடனே ஓமஞ்சேர்த்து
கூடவே மிளகுடனே வாய்விளங்கம் குணமான பரங்கியென்ற பட்டைதானும்
போடவே யேலமுடன் ஜாதிபத்திரி பொங்கமுடன் வெந்தயமும் இருசீரந்தான்
சூடவே பச்சையென்ற பூரந்தானும் சுத்தமுள்ள ரோசனையுங் கூடச்சேரே
6389.
சேர்த்துமே வகைக்குவொரு பலமதாக சிறப்புடனே நெய்தேனும் விட்டுக்கிண்டி
பேர்த்துமே புதுக்கலசந் தன்னிலப்பா பெருமையுடன் சீனிசர்க் கரையுங்கூட்டி
ஆர்க்கவே பாகுபதந் தன்னிலப்பா வப்பனே முன்னுரைத்த லேகியத்தை
தீர்க்கமுடன் தான்சேர்த்து கிளறிவாங்கி திட்டமுடன் பீங்கானிற் பதனம்பண்ணே
6390.
பண்ணவே கணபதிக்குப் பூசைசெய்து பாலகனே சோடசத்தில் வைத்துப்போற்றி
உண்ணவே மண்டலந்தான் கொண்டாயானால் வுத்தமனே கழற்சிக்காய் விகிதங்கொள்ள
தண்ணமுடன் தேகமது இறுகிக்காட்டும் தாக்கான வாசியது மேல்நோக்காது
கண்ணபிரான் செய்ததொரு குளிகையப்பா கண்மணியே வுந்தனுக்கு போதித்தேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக