6411.
போதித்த யின்னமொரு மார்க்கம்பாரு புகழான புலிப்பாணி மகனேயப்பா
ஆதித்தன் சந்திரன்போல் யுந்தமக்கு வப்பனே யானுரைப்பேன் மகிமைபாரு
ஜோதிமய மானதொரு மயிலின்முட்டை சுந்தரனே மனதுவந்து முட்டைதன்னில்
பாதிமதி விந்துடனே யாயிநாதம் பாங்குபெற தானெடுப்பாய் களஞ்சியொன்றே
6412.
ஒன்றான களஞ்சியது வகைவகைக்கு வுத்தமனே தானெடுத்து செப்பக்கேளிர்
குன்றாமல் முட்டைதனில் துவாரமிட்டு குறையாமல் சரக்கெல்லாம் அடைத்துமைந்தா
வென்றிடவே சீலையது வலுவாய்ச்செய்து விவரமுடன் துவாரமதை மறைத்துமைந்தா
சென்றிடவே பாண்டமதில் மணல்தான்கொட்டி செழித்துமே மேலுமந்த மணலைக்கொட்டே
6413.
கொட்டியே மேற்பாண்டந் தன்னைமூடி குமுறவே சீலையது வலுவாய்ச்செய்து
சட்டமுடன் வாலுகையாம் ஏந்திரத்தில் சாங்கமுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
பட்டயம்போல் மணலதுவஞ் சிவந்தபிண்பு பாலகனே எடுத்துப்பார் அண்டந்தன்னை
நட்டமென்ன காயாதிக் குறுதியாச்சு நலம்பெறவே கவசமதைப் பிரித்துவாங்கே
6414.
வாங்கியே கவசமதை யெறிந்துபோடு வளம்பெறவே யண்டமதை யுரலிலிட்டு
தூங்கியே திரியாதே இரும்புலக்கை துப்புரவாய்த் தான்கொண்டு ஜாடும்போது
பாங்குபெற மெழுகதுவும் என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் மறைத்துவைத்தார்
ஏங்கியே இருந்தாக்கால் என்னசித்தி எழிலான கற்பமதைத் தேடிக்கொள்ளே
6415.
கொள்ளவே நயம்பெறவே கற்பந்தன்னை குணபாகங் கைபாகஞ் செய்பாகத்தால்
மெள்ளவே குளிகைதனை முடித்துக்கொண்டு மேதினியில் நீயுமொரு சித்தனைப்போல்
உள்ளதொரு வேஷமதை விடுத்துமல்லோ வுத்தமனே சிவராஜ யோகன்போலே
விள்ளவே நெடுங்கால மிருப்பதற்கு விருப்பமுடன் காயாதி கற்பமுன்னே
6416.
உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி வுத்தமனே மயில்கற்பங் கொண்டாயானால்
திண்ணமுடன் நரைதிரையு மற்றுப்போகும் தீர்க்கமுடன் நெடுங்காலம் இருக்கலாகும்
வண்ணமுடன் காயாதி கற்பத்தாலே வளமான வாசிதனை நடத்தலாகும்
திண்ணமுடன் காலாங்கி நாதர்தானும் சட்டமுடன் எந்தனுக்கு ஓதினாரே
6417.
ஓதவே காயாதி கற்பந்தன்னை வுத்தமனே யுந்தனுக்கு உரைத்தேனப்பா
நீதமுடன் காயாதி கற்பமுண்டு நீணிலத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
தோதகமாய் என்காலஞ் சென்றபின்பு துப்புரவாய் லோகாதி லோகமெல்லாம்
சாதகமாய்த் தான்திரிந்து மைந்தாநீயும் சட்டமுடன் சீனபதிக் கேகுவீரே
6418.
ஏகவே யுந்தமக்கு வரமுந்தந்தேன் எழிலான மகிமையெல்லாந் தானுரைத்தேன்
போகவே குளிகையது பூண்டுகொண்டு பொங்கமுடன் காயாதி கற்பமுண்டு
சாகாம லிருப்பதற்கு வினயங்கொண்டு சட்டமுடன் காயாதி கற்பந்தன்னை
ஆகாயந் தனிற்செல்ல குளிகைதானும் அப்பனே யுந்தமக்கு தந்திட்டேனே
6419.
தந்தேனே என்றுசொல்லி போகர்தாமும் சட்டமுடன் சீனபதிக் கேகியல்லோ
அந்தமுடன் சீனபதிப் பெண்களுக்கு யவனிதனில் நடந்ததொரு வதிசயங்கள்
சொந்தமுடன் தாமுரைத்து சித்துதாமும் சுந்தரனார் காலாங்கி சமாதிபக்கல்
விந்தையது யின்னமிகக் காணவென்று விருப்பமுடன் குளிகையிட்டு சென்றிட்டாரே
6420.
சென்றாரே சீனபதிக் கடலோரத்தில் சிறப்புடனே போகமுனி நாதர்தாமும்
வென்றிடவே சிலநாளங் கிருந்துமல்லோ வேகமுடன் மேருவட பாகத்தில்
குன்றான மலையோரஞ் செல்லும்போது கூறான சாம்பலென்ற குகையோரத்தில்
அன்றுமல்லோ செம்புரவி தன்னைத்தானும் அங்ஙெனவே போகர்முனி கண்டார்தாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக