6481.
ஓதினேன் சிடிகையென்ற வேதையப்பா வுத்தமனே வெடியுப்பு ஐந்தாங்காய்ச்சல்
தீதில்லா வுப்பதுவுங் கப்பியுப்பு தீர்க்கமுடன் பலமைந்து நிறுத்துமைந்தா
ஆதியென்ற முப்பூவைப் பழச்சாற்றாலே வப்பனே தானரைத்துக் கவசஞ்செய்து
ஜோதிமயந் தான்பெறவே ரவியில்வைத்து சோராமல் சீலையது வலுவாய்ச் செய்யே
6482.
செய்யவே கோழியென்ற புடத்தைப்போடு செயலான வுப்பதுவுங் கட்டிப்போச்சு
பையவே வுப்பதுவுங் கட்டிற்றானால் பாலகனே யேமமென்ற செடியுமாச்சு
துய்யதொரு வுப்பாலே எல்லாஞ்சித்தி துப்புரவாய் ஜெகத்தொளிவை யற்றபேர்க்கு
உய்யதொரு பொருளெல்லாந் தோயும்தோயும் வுத்தமனே வெடியுப்பைக் கண்டோர்க்காமே
6483.
கண்டவர்கள் உப்பினிட மார்க்கந்தன்னை காட்டார்கள் கருவாளி மாண்பரெல்லாம்
விண்டதொரு வுப்பினால் அப்புக்கட்டும் விண்ணுலகும் மண்ணுலகும் இதிலடக்கம்
சண்டமாருதங் கொண்ட வுப்பினாலே ஜகமெலாம் படல்கட்டி யாடலாகும்
தொண்டுசெய்து உப்பதனை யறியவேண்டும் துரைராஜ சுந்தரனே செப்பக்கேளே
6484.
செப்பவென்றால் வெடியுப்பை விட்டாலல்லோ செம்மலுடன் பூவுமில்லை காயுமில்லை
அப்பினால் உப்பதனைக் கட்டலாகும் ஆகாகா நாதாக்கள் சிடிகைவேதை
ஒப்பமுடன் சிடிகையென்ற வுப்புதன்னை ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார்
தப்பிதங்கள் நேராது வுப்பின்மார்க்கம் தண்மையுள்ள மன்னவனே சாற்றக்கேளே
6485.
சாற்றவென்றால் உப்பினிட கட்டினத்தை சாங்கமுடன் குகையிலிட்டு உருக்கிமைந்தா
திட்டமுடன் குழலொன்று செய்துமல்லோ தீர்க்கமுடன் நாலுபட்டை யாகச்செய்து
வட்டமுடன் உப்பதனை யுருக்கிமைந்தா வளமையுள்ள கருங்குழலில் பாய்ச்சியேதான்
நாட்டமது நேராமல் கருவைநீக்கி நயம்பெறவே வுப்பதனை யெடுத்திடாயே
6486.
எடுத்துமே உப்பதனைச் சொல்லக்கேளு எழிலான பஞ்சவர்ண மேற்றப்பாரு
தொடுத்ததொரு லிங்கமதை யரைத்துமைந்தா தோறாமல் ஒருபக்கம் பூசிப்போடு
விடுத்ததொரு தாளகத்தை யெடுத்துபாலா விருப்பமுடன் ஒருபக்கம் பூசிப்போடு
படுத்ததொரு கெந்தகத்தை யறைத்துமைந்தா பாங்குடனே ஒருபக்கம் பூசிப்போடே
6487.
போடேதான் கெவுரியது எடுத்துமைந்தா பொங்கமுடன் ஒருபக்கம் பூசிப்போடு
ஆடேதான் நாற்சரக்கு மானபின்பு வப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
நாடேதான் ரவிதனிலே காயப்போடு நலமான புடமதுவுங் கோழியாகும்
தேடவே புடம்போடு எடுத்துப்பாரு தெளிவான வர்ணமது தோற்றும்பாரே
6488.
தோற்றவே பக்கமொரு வர்ணபேதம் தோறாத கம்பியுப்பு சாரணையேயாக்க
மாற்றதுவும் சொல்லவென்றால் நாவேயில்லை மகத்தான சாஸ்திரந்தா னோடும்பாரு
ஆற்றவே லிங்கமது மாற்றாயிரந்தான் வப்பனே சொல்வதற்கு நாவுமில்லை
தேற்றமுடன் தாளகமும் ரெண்டாயிரம்மாற்று தெளிவான வுப்பினிட வேகம்பாரே
6489.
வேகமாங் கெந்தியது மூவாயிரமாற்று வெழிலான வேதைமுகஞ் சொல்லொண்ணாது
பாகமுடன் கெவுரியது ஐந்நூறுமாற்று பாங்குடனே வேதைமுகஞ் சொல்லும்பாரு
சாகமுடன் வுப்பினிட மேற்பட்டையப்பா சதானந்தர் வைகுந்தர் அறிவாரோதான்
போகமது கொண்டதொரு காலாங்கிநாதர் பொன்னவனே எந்தனுக்கு உரைத்தார்தானே
6490.
தானான மாற்றினிட வேகமப்பா தாரணியில் சித்தர்தம்மால் சொல்லப்போமோ
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே யானுரைத்தேன் உந்தமக்கு
தேனான முறையதுவை யாருஞ்சொல்லார் தேவாதி என்குருவே எந்தன்மைந்தா
பானான பரஞ்சுடரே யுந்தமக்கு பாரினிலே பாலித்தேன் பண்பாய்த்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக