6401.
மூடவே சீலையது வலுவாய்ச்செய்து முசியாமல் தானெரிப்பாய் இரண்டுசாமம்
நீடவே பட்சியது வந்துமல்லோ நீதியுடன் தீயாறி எடுத்துப்பாரு
கூடவே மேலிருந்த பாண்டம்நீக்கி குற்றமற மாமிசத்தை எடுத்துமைந்தா
சாடவே குழிக்கல்லில் தன்னிலிட்டு சட்டமுடன் இரும்புலக்கை தன்னாற்சாடே
6402.
சாட்டியபின் சூரணமாய்ச் செய்துகொண்டு சாங்கமுடன் சூரணத்தில் நாலுக்கொன்று
தாட்டிகமாய் பஞ்சமுஷ்டி தானுஞ்சேர்த்து சட்டமுடன் பஞ்சதிரவியங் களனைத்தும்
வாட்டமுடன் திரிகடுகு திரிபலாதி வகைவகைக்கு நாலுக்கொன்று சேரு
பூட்டவே இத்தாதி சரக்கையெல்லாம் புகழ்பெறவே நெய்தேனும் விட்டுக்கிண்டே
6403.
கிண்டியே பரணிதனில் பதனம்பண்ணு கீர்த்திபெற வுண்பதற்கு விபரங்கேளு
தண்டகம்போல் இருவேளை யுண்பாயானால் தாட்டிகமாய் வாசியது மேல்நோக்காது
மண்டலந்தான் கொண்டவர்க்கு வாசியோகம் மகத்தான மார்க்கமெல்லாம் வழியேகாட்டும்
சண்டமா ருதம்போலே இந்தகற்பம் சாங்கமுடன் உண்பவர்க்கு பலனைக்கேளே
6404.
கேளப்பா குளிகையது கொண்டபேர்க்கு கெடியான சின்மயத்தில் ஒடுக்கவாசி
நாளப்பா தன்மயமுங் காணாமற்றான் நலமான வாசிவழிக் கிடங்கொடுக்கும்
ஆளப்பா வாறாதாரத்தை காட்டும் வப்பனே யதிலொடுக்கம் கலைகள்ரெண்டும்
தேளப்பா கொட்டினதோர் விஷத்தைப்போலும் தேஜொளிவின் பூரணத்தைக் காணலாமே
6405.
காணலாஞ் சுழுத்தியிலே இருந்துகொண்டு கருவிகர ணாதியந்தம் மேலேதொட்டு
பூணலாம் விசுத்தியிலே வாசிநாட்டி புகழ்பெறவே வனாகதத்தை மேலேபூட்டி
தோணவே சுடரொளியைத் தாக்கும்போது சூட்சமென்ற தலைதனையே பிரித்துக்காட்டும்
மாணவே மாயாதி சித்தரெல்லாம் மார்க்கமுடன் மறைத்துவைத்தார் உண்மைபாரே
6406.
உண்மையாய் வாசிதனை நடத்தும்போது வுத்தமனே சிகரமது மூஞ்சிக்காட்டும்
தண்மையாய் நடுமையம் மவுனம்பார்த்து தாக்குவாய் அங்கென்று கும்பித்தாக்கால்
வண்மையாஞ் சுழுத்தியிலே கலைதானோக்கும் வளம்பெறவே பூரணத்தைப் பதியக்காட்டும்
கண்மையாஞ் சுவாசமது கபாலம்பற்றி கைலாய வங்குலத்தை காட்டும்பாரே
6407.
காட்டுமே சூட்சமென்ற குதிரையாலே கதிரொடுங்கி சடாபோலே கண்பிதுங்கி
நீட்டமுடன் பஞ்சபூதங்கள் அனைத்தும் நிலையான ஒடுக்கவழி யடங்கநின்று
கூட்டமுடன் பிரிதிவினில் தேய்வுதங்கி குறிப்புடனே தேய்வினிலே வாய்வுதங்கி
காட்டியே யாகாஸம் வப்பில்தங்கி கனமான யோகநிலை நிறுத்தும்பாரே
6408.
பாரேதான் கண்ணாலே மணக்கண்ணாலே பாங்குபெற யோகநிலை நடத்துதற்கு
சீரேதான் சித்துமுனி ரிஷிகள்தாமும் சிறப்புடனே குண்டலியாம் யோகந்தன்னை
நேரேதான் நெடுங்காலங் கற்பமுண்டு தேற்றமுடன் போகநிலை யொடுக்கந்தன்னை
வேரேதான் கருவான நூல்கள்பார்த்து விட்டகுறை யிருந்ததென்று விட்டிட்டாரே
6409.
விட்டாரே தேவதா ரிஷிகளெல்லாம் விண்ணாடர் மண்ணாடர் மாண்பர்தாமும்
கெட்டாரே யோகநிலை சூட்சங்காணார் கேடழிந்து பாடழிந்து விழலாய்ப்போனார்
தொட்டகுறி போலாக வுந்தமக்கு தோறாமல் ஓதிவைத்தேன் புண்ணியவானே
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வித்தகனே யுந்தமக்கு வமைக்கலாச்சே
6410.
ஆச்சப்பா காலாங்கி கிருபையாலும் வப்பனே மனோன்மணியாள் ஆசீர்மத்தால்
மூச்சடங்கி வாசியோகஞ் செய்வதற்கு முனையான காயாதி கற்பமெல்லாம்
வாச்சுதே புலிப்பாணி மன்னாகேளு வளம்பெறவே யுந்தனுக்கு யோகங்காண
மாச்சலென்ற யோகநிலை யுந்தமக்கு மகத்தான மகிமைகளும் போதித்தேனே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக