பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6501-6510

6501.
நாலான சாமமது எரித்தபோது நலமான செந்தூர மென்னசொல்வேன்
காலான செந்தூரந் தனையெடுத்து கருமான வெள்ளிதனில் பத்துக்கொன்று
மாலான வெள்ளியது வுருகும்போது மகத்தான செந்தூரங் களஞ்சியீந்து
கோலான கரியினால் கிண்டும்போது கொற்றவனே வுட்கொண்டு பழுக்கும்பாரே
6502.
பாரேதான் மற்றதுவும் என்னசொல்வேன் பாங்கான வயததுவும் எட்டுமாகும்
கூரேதான் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து குறிப்புடனே வாரடித்துப் புடத்தைப்போடு
நேரேதான் மறுபடியும் உருக்கிப்பாரு நேர்மையுள்ள தங்கமது கூறப்போமோ
ஆரோதான் செய்வார்கள் இந்தப்போக்கு வப்பனே யுந்தமக்கு வுரைத்தேன்தானே
6503.
தானான புடத்தங்கம் பிறவித்தங்கம் தண்மையுள்ள குடோரியது உறங்காதப்பா
கோனான சிவராச தங்கமப்பா கொற்றவனே லவணமதிற் பிறந்ததங்கம்
தேனான சிவயோகிக் குகந்ததங்கம் தெளிவான நாணயத்துக் குகந்ததங்கம்
மானான வையகத்தில் மாண்பர்தாமும் மார்க்கமுடன் செய்கின்ற தங்கமாமே
6504.
தங்கமாம் லவணமென்ற சாரகாரம் தாரணியில் வெகுமாண்பர் காணமாட்டார்
புங்கசித்தி எட்டுரியோன் காண்பான்பாரு புகலான சித்துமுனி செய்யுந்தங்கம்
வங்கமதற் கேங்காது வர்ணத்தங்கம் வளமான புரிசடையோன் அணியுந்தங்கம்
இங்கிதமாய் சமுசாரி வழங்குந்தங்கம் யெழிலான வுப்பினிட தங்கங்காணே
6505.
காணேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கருவான புலிப்பாணி கண்ணியவானே
தோணவே பூதமென்றால் பஞ்சபூதம் சொல்லுகிறேன் நாதாக்கள் மகிமைதன்னை
வேணபடி வாதமெனும் தேர்தானப்பா விருப்பமுடன் பூட்டுகிறேன் பஞ்சபூதம்
ஆணரசர் முன்னுக்குள் அஞ்சுபூதம் வப்பனே சரக்குவகை பூதமஞ்சே
6506.
அஞ்சான தேதென்று கேட்பாயானால் வப்பனே தங்கமது பிரிதிவாகும்
துஞ்சமென்ற இரும்பதுவும் வாயுவாகும் துப்புரவாய்ச் செம்பதுவும் தேய்வாகும்
மிஞ்சவே காரீயம் அப்புவாகும் மிக்கான நாகமது ஆகாசந்தான்
துஞ்சலென்ற லோகமது வஞ்சுங்கூடி துறையான பஞ்சபூத மொடுக்கந்தானே
6507.
ஒடுக்கமாந் தேருக்கு பிரிதியாச்சு வுத்தமனே பீடமது வுரைப்பேன்பாரு
தொடுக்கவே பாஷாணம் பஞ்சபூதம் தோராமல் பீடவகை யரைப்பேன்பாரு
இடுக்கமுள்ள கெந்தியது பிரிதிவாகும் யெழிலான கெவுரியது தேய்வேயாகும்
விடுக்கவே லிங்கமது வாகாசமாகும் விரிவான வீரமது வுப்புமாமே
6508.
அப்பான துரிசியது வாய்வுமாகும் வழகான பாஷாண பஞ்சபூதம்
உப்பான காரசார பஞ்சபூதம் வுத்தமனே யானுரைப்பேன் விபரங்கேளு
கப்பலென்ற தேருக்கு வுருளையப்பா கனமான லவணமென்ற பூதமெல்லாம்
ஒப்பமுடன் வெடியுப்பு பிரிதிவாகும் ஓகோகோ நாதாக்கள் ஆடுங்கூத்தே
6509.
கூத்தான வெடியுப்பு பிரிதிவாச்சு குணமான வளையலுப்பு தேய்வுமாச்சு 
நாத்தமென்ற கல்லுப்பு வப்புவாச்சு நலமான சீனமது வாய்வுமாச்சு
சாத்திரத்தில் உரைத்தபடி பூநீரப்பா தண்மையுள்ள தாகாசந் தானேயாகும்
சூத்திரமாம் பிரிதிவினில் உற்பவித்த சுடரான வுப்பதுவு மாகாசமாச்சோ
6510.
ஆச்சப்பா சரக்கு வறுபத்துநான்கும் வப்பனே வைந்தைந்தா யுகம்பிரித்து
மூச்சடங்கிக் கிடந்ததொரு தேருக்கப்பா முனையான சட்டமதில் தான்கள்பார்த்து
ஆச்சரிய மாகவல்லோ சிகரமட்டும் வப்பனே தூணிருத்தி கால்கள்நாட்டி
மாச்சலென்ற வுபசாரங்கள் தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் அலங்கரித்து வரிசைகேளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக