6371.
இறக்கியே குழித்தயில மாகவல்லோ யெழிலான கலசமதில் வடிதான்கொண்டு
சிறக்கவே முப்பூவுங் களஞ்சிசேர்த்து சிறப்புடனே கலசமதில் பதனம்பண்ணி
திரமான தயிலமதை யாரேனுந்தான் தீர்க்கமுடன் சொல்லவில்லை நூல்கள்தன்னில்
உறமான தயிலமது சித்துதானும் ஓகோகோ நாதாக்கள் சொல்வாரன்றே
6372.
அன்றான தயிலமதை யாராய்ந்தேதான் அவனிதனில் மாண்பர்களும் பிழைக்கவென்று
குன்றான வழிபாடு முறைபாடெல்லாம் கூறினேன் போகரே ழாயிரத்தில்
தென்றிசையில் பொதிகைமலை தன்னில்வாழும் தெளிவான சித்துமுனி நாதர்தாமும்
வென்றிடவே தயிலமதை மறைத்துவைத்தார் வேதாந்த நுட்பொருளை காட்டார்தானே
6373.
தானான சாத்திரத்தின் உளவுகண்டு தண்மையுள்ள கருவிகர ணாதியெல்லாம்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் தயிலமதை வாங்கிமைந்தா
பானான பரிதியென்ற சூதந்தன்னில் பாங்குபெற தயிலமதை களஞ்சிநீட்டே
6374.
நீட்டவே பத்துக்கு ஒன்றுமேதான் நீதியுள்ள மதவானை யடங்கிநிற்க
வாட்டமுடன் தயிலமதை யிரண்டுசாமம் வாகுபெற தானரைக்க சூதமாகும்
தாட்டிகமாய் சூதமதை செந்தூரிக்க தண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு
நாட்டமுடன் தாரமென்ற நாதந்தானும் நலமான களஞ்சியது ஒன்றுசேரே
6375.
சேர்த்துமே முன்சொன்ன தயிலத்தாலே செவ்வையாய்த் தானரைப்பாய் நாலுசாமம்
நேர்த்தியாய் மெழுகுபத மாகுமட்டும் நேர்மையுடன் தானரைத்து செப்பக்கேளிர்
ஊத்துவமாய்க் குப்பிக்குச் சீலைசெய்து வுத்தமனே சரக்கதனைக் குப்பியிட்டு
தீர்த்தமென்ற குப்பிக்கு மாக்கல்லாக திறமாக மேல்மூடி சீலைசெய்யே
6376.
செய்யவே தளவாயாஞ் சட்டிதன்னில் சிறப்புடனே மணலதனைக் கொண்டுவந்து
பையவே தளவாயாஞ் சட்டிதன்னில் பாங்குடனே ரவியில் நாலுவுய ரம்போடு
துய்யநல்ல குப்பிதன்னை மண்மேடிட்டு துப்புரவாய்க் குப்பிவாய் தெரியமூடி
எய்யவே மேற்பாண்டந் தன்னில்மூடி வுத்தமனே சீலையது வலுவாய்ச் செய்யே
6377.
வலுவான சீலையது செய்தபின்பு மைந்தனே மயங்காமல் செய்வாயப்பா
மெலுவான வாலுகையாம் ஏந்திரத்தில் மேன்மையுடன் தானெறிப்பாய் நாலுசாமம்
சுலுவான தீபமது கமலம்போலாம் சுந்தரனே தானெறிப்பாய் செப்பக்கேளு
உலுவான தீபமது யாறியபின் உத்தமனே தானெடுக்க வகையைக்ககேளே
6378.
கேளப்பா கணபதிக்குப் பூசைசெய்து கெட்டியாய் மனோன்மணியை மனதிலுன்னி
நாளப்பா போகாமல் செந்தூரத்தை நலமாக சீசாவிற் பதனம்பண்ணு
பாளப்பா போகாமல் தேகந்தன்னை பட்சமுடன் நெடுங்கால மிருப்பதற்கு
வேளப்பா காயாதி கற்பங்கொள்ள விருப்பமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
6379.
பண்பான செந்தூரங் குன்றிவீதம் பாலகனே மண்டலந்தான் இரண்டுவேளை
நண்பான தேனதினில் கொண்டாயானால் நலமான தேகமது கற்றூணாகும்
திண்பான வாசியது மேல்நோக்காது தீர்க்கமுடன் கொண்டவர்க்கு நரையுமில்லை
உண்டான காயாதி கற்பமெல்லாம் உத்தமனே யிதற்கீடு சொல்லொண்ணாதே
6380.
ஒண்ணாது செந்தூரந் தானுமப்பா வுத்தமனே கோடிவரை யிருக்கலாகும்
கண்ணான செந்தூரந் தன்னையப்பா கருத்துடனே பாச்சுகின்ற விதத்தைக்கேளு
மண்ணான செம்பதுவும் களஞ்சிநூறு மகத்தான செந்தூரங் களஞ்சியொன்று
ஒண்ணாது தானுருக்கி மூசைதன்னில் வுத்தமனே தானெடுத்து சாய்த்திடாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக