பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6431-6440

6431.
கொடுக்கவே வருணரிஷி தன்தனக்கு கொற்றவனார் உபதேசஞ் செய்தமூலி
நடுக்கடலில் கிருஷ்ணாவ தாரங்கொண்ட நலமான கண்ணபிரான் மூலிதன்னை
அடுத்துமே ஆகாஸந் தான்பறந்து அலைகடலில் மையமதில் இறங்கியல்லோ
எடுத்துமே வாய்தனிலே கவ்விக்கொண்டு பசரியே மேற்பறந்து வருகலாச்சே
6432.
தருகவே மூலிதனை சாபந்தீர்த்து சட்டமுடன் போகரிஷி நாதருக்கு
குருவுரைத்த கற்பமென்ற மூலிதன்னை குவலயத்தில் ஒருவருக்கும் விள்ளாதப்பா
சருகுடைய மூலியின்தன் கற்பத்தாலே லட்சாதி கோடிவரை இருக்கலாகும்
திருவருளால் உந்தனுக்கு எல்லாஞ்சித்தி தீர்க்கமுடன் மூலிதனைப் பெற்றுக்கொள்ளே
6433.
கொள்ளவே யென்றுமல்லோ மனதுவந்து கொற்றவர்க்கு மூலிதனைக் கொடுத்துமேதான்
எள்ளளவும் நாதாந்த சித்தர்தம்மால் எளிதாக ஏற்றமது நேராமற்றான்
உள்ளபடி ஞானோப தேசமார்க்கம் வுத்தமனே தான்கொடுத்து வதிதங்கூறி
தெள்ளமுர்த மானதொரு மாயாகற்பம் தெளிவுடனே செம்புரவி யீயலாச்சே
6434.
ஆச்சப்பா புலிப்பாணி மகனேகேளு வட்டதிசை தான்கடந்து புரவிகண்டேன்
பாச்சலுடன் குளிகையது மனதுவந்து பட்சமுடன் கண்ணபிரான் உண்ணகற்பம்
மூச்சடங்கி வருணரிஷி கொண்டகற்பம் முனையான வசுவமது வுபதேசத்தால்
ஆச்சரிய மானதொரு கற்பந்தன்னை வன்புடனே பெற்றுவந்தேன் என்றிட்டாரே
6435.
என்னவே காலாங்கி நாதர்தம்மால் எழிலான எட்டுதிசை குளிகைகொண்டேன்
பன்னவே வசுவதா கடாட்சத்தாலே பாலகனே பெருங்கற்பம் யானுங்கண்டேன்
துன்னவே தேவதா ரிஷிவரத்தால் துப்புறவாய் மகமேரு கற்பங்கொண்டேன்
உன்னவே புஜண்டமகாரிஷி சாபத்தால் வுத்தமனே பற்பமது பெற்றிட்டேனே
6436.
பெற்றேனே சிங்கிந்தா ரிஷிவனத்தில் பேரான குளிகைகற்பம் யானுங்கொண்டேன்
கற்றதொரு முதலைகற்பம் யானுங்கொண்டேன் கருவான பச்சைவண்ணப் புரவிகற்பம்
வெற்றியுடன் இமயகிரி பர்வதத்தில் வேகமுடன் யேழுவரை சென்றேன்யானும்
பற்றியங்ஙன மேலிருந்த தேவர் பாங்கான ரிஷிநாதர் முனிகண்டேனே
6437.
கண்டேனே யவரிடமும் குளிகைகொண்டேன் காணவே மற்றொரு வகையுங்கண்டேன்
விண்டபொருள் இருபத்தோர் வரையுஞ்சென்றேன் விட்டகுறை இருந்ததுவும் வனைத்துங்கண்டேன்
கொண்டல்முடி யச்சுதனார் மூலிகற்பம் கொடிதான சஞ்சீவி யனைத்துங்கண்டேன்
சண்டமா ருதம்போலே புரவிகற்பம் சாங்கமுடன் கண்டேன் என்றிட்டார்தானே
6438.
தானான புரவியது எந்தனுக்கு தண்மையுள்ள கற்பமது கொடுத்ததாலே
கோனான எந்தேவர் காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் கற்பமது கொண்டுமல்லோ
பானான வையகத்தில் பகைவர்தம்மை பட்சமுடன் வென்றுமல்லோ ஜெயித்திட்டேனே
6439.
இட்டேனே புலிப்பாணி மைந்தாகேளு எழிலான கற்பமதை யாருக்குந்தான்
தொட்டகுறி போலாகச் சொல்லிவந்தேன் துரைராஜ சுந்தரனே யுந்தமக்கு
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் விருப்பமுடன் உந்தனுக்கு யுபதேசித்தேன்
சட்டமுடன் எந்நாளுங் காலாங்கிபாதம் சதாகாலந் தான்வணங்கி வாழுவீரே
6440.
வாழ்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
தாழ்கவே லவணமது இருபத்தைந்து தப்பாமல் வகையொன்றுக் களஞ்சிவீதம் 
மூழ்கவே குழிக்கல்லில் தன்னைவிட்டு முனையான காடியென்ற நீராலப்பா
நீழ்கவே முன்சொன்ன காடிதானும் முசியாமல் தானெடுத்து வரைத்திடாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக