பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6591-6600

6591.
சத்தியமா மென்னூலை முழுதும்பார்த்து சாங்கமுடன் செய்பவர்க்கு எல்லாஞ்சித்தி
முத்தியது பெறுவதற்கு காயகற்பம் முனையான பற்பமிது சூதபற்பம்
வெத்திபெற வஷ்டாங்க சித்தியெட்டும் வேதாந்தத் தாயினிட நடனமார்க்கம்
முத்தியது பெறுவதற்கு தேககற்பம் மூதுலகில் சத்தியர்க்கு பலிக்கும்பாரே
6592.
பலிக்குமே சூதமுண்ட மாண்பரெல்லாம் பாருலகில் மகானுபா னென்பார்பாரு
ஜொலிக்குமே தேகமது கற்றூணாகும் சோராது வாசியது மேல்நோக்காது 
சுலிக்காது இருகண்ணும் வருந்தியுந்தோன்றும் காசினியில் வேசியாக மாண்பரென்பர்
சலிக்காது சண்டரச பற்பமப்பா சட்டமுடன் செய்வேனே யோகிபாரே
6593.
பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே காலாங்கி நாதர்நீதி
ஆரப்பா எந்தனுக்கு உரைத்தமார்க்கம் வப்பனே யஞ்சலித்து முடிவணங்கி
சேரப்பா சமாதிமுகஞ் சென்றபோது செம்மலுடன் எந்தமக்கு கொடுத்தபாகம்
நேரப்பா சொல்லுகின்ற பஞ்சபூதம் நெடிதான வேதைமுகம் நன்றாய்த்தானே
6594.
வேதையாம் வேதைமுகம் பஞ்சபூதம் மேன்மையுள்ள செந்தூரம் காயகற்பம்
கோதையெனும் மனோன்மணியாள் கடாட்சத்தாலும் கொற்றவனார் நாதாக்கள் பாதத்தாலும்
பாதையெனும் பஞ்சபூத செந்தூரத்தை பாருலகில் மாணாக்கர் பிழைப்பதற்கும்
சூதையது கூறாமல் குமாரவேலா சுந்தரனே கைபாகஞ் செப்புவேனே
6595.
செப்புவேன் கெந்தியது சேர்தான்பாதி செயலான வீரமது சேர்தான்பாதி
ஒப்பமுடன் லிங்கமது சேர்தானொன்று வுத்தமனே சாரமது சேர்தானொன்று
மெய்ப்புடனே பூரமது சேர்தானொன்று மேன்மையுடன் கல்வமதி லிட்டுமைந்தா
எப்படியும் ஓரைந்தா யட்சபூதம் எழிலான சரக்கெல்லாம் பொடியாய்ப்போச்சே
6596.
பொடியான சரக்கெல்லாம் மையதாகி பொங்கமுடன் தாகமது கருவிட்டாட்டி
கன்னமாஞ் சரக்கெல்லாம் நன்றாயாட்டி கண்மணியே ஜாலமெட்டுந் தீர்ந்தபின்பு
வடிவான பஞ்சரச சரக்கையெல்லாம் வளம்பெறவே பில்லையது லகுவாய்த்தட்டி
மிடியோக வோட்டிலிட்டுச் சீலைசெய்து மீட்சிபெற ரவிதனிலே காயப்போடே
6597.
போடவே ரவியாறிக் காய்ந்தபின்பு பொங்கமுடன் மணல்மறைவிற் புடத்தைப்போடு
நாடவே இப்படியே பத்துமுறைபோடு நலமான தாகமென்ற கருவினாலே
சாடவே புடமதுவும் பத்துந்தீர்ந்தால் சட்டமுடன் மறுபடியுஞ் செப்பக்கேளு
கூடவே சரக்கதனைக் கல்வமிட்டு கொற்றவனே கையானின் ரசச்தைதாக்கே
6598.
தாக்கவே நாற்சாமம் அரைத்தபின்பு சட்டமுடன் பில்லையது லகுவாய்ச்செய்து
ஆக்கமுடன் ரவிதனிலே காயவைத்து வப்பனே சில்லிட்டுச் சீலைசெய்து
போக்கான சரக்கெல்லாங் கட்டுதற்கு பொங்கமுடன் மண்மறைவிற் புடத்தைப்போடு
வாக்கதுவும் பொய்யாமல் கோழியாக வளமுடனே புடம்போடக் கட்டும்பாரே
6599.
கட்டுமே பஞ்சரசச் சரக்குதானும் கருவாக பத்துமுறை இப்படியேபோட்டால்
சட்டமுடன் சரக்கதுவுங் கட்டிப்போகும் சார்பான செந்தூரம் நீலவர்ணம்
மட்டுமே சிவப்பதுவும் ஏராதப்பா மார்க்கமுடன் பின்னும்வகை செப்பக்கேளு
பட்டுப்போல் செந்தூரஞ் சிவப்பதற்கு பாலகனே வரிசையது செப்புவேனே
6600.
செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை தேசத்தின் கருவாளி செய்வாரப்பா
ஒப்பமுடன் கருமிகட்கு வாய்க்காதப்பா ஓகோகோ வாய்த்தாலும் விழலாய்ப்போகும்
இப்புவியில் உந்தமக்கு தருமிகட்கும் எழிலான வேதைமுகம் கூறினேன்யான்
தப்பிதங்கள் நேராது சன்மார்க்கவானே சட்டமுடன் செய்பவனே புத்திவானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக