6551.
ஒன்றான சாரமது பலமொன்றாகும் வுத்தமனே கெவுரியது பலமொன்றாகும்
வென்றிடவே துருசதுவும் பலமொன்றாகும் வேகமுள்ள சீனமது பலமொன்றாகும்
நன்றான லிங்கமது பலமொன்றாகும் நலமான வெடியுப்பு பலமொன்றாகும்
மன்றான கரியுப்பு பலமொன்றாகும் பாலகனே இதுகளெல்லாம் ஒன்றாய்க்கூட்டே
6552.
கூட்டவே சரக்கெல்லாம் கல்வமிட்டு குமுறவே பொடியாக்கி மைந்தாகேளு
நாட்டமுடன் செம்புதனை குகையிலிட்டு நலமாகத் தானுருக்கிக் கிராசமீவாய்
வாட்டமுடன் கிராசமது கொடுக்கும்போது வளமான செம்பதுவும் ஊறலேகி
நீட்டமுடன் தங்கமென்ற செம்புபோலாம் நிதியான செம்புதனை பதனம்பண்ணே
6553.
பண்ணவே செம்பெடுத்து மைந்தாகேளு பாங்குபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று
தண்ணமுடன் கொடுத்துருக்கி மாற்றைப்பாரு தாக்கான வயததுவும் சத்தமாகும்
திண்ணமுடன் சுயத்தங்கம் பிறவித்தங்கம் தீர்க்கமுடன் தங்கமதின் பசுமையாகும்
உண்ணவே சீவனத்துக் கிடம்வேறுண்டோ வுத்தமனே நாதாக்கள் செம்புதானே
6554.
தானான வெள்ளிதனில் பத்துக்கொன்று தண்மையுடன் தங்கமது ஒன்றுசேர்த்து
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே தானுருக்கி வாரடித்து
பானான புடமதுவும் தீர்ந்துதானால் பாலகனே மாற்றதுவும் எட்டதாகும்
மானான மனோன்மணியாள் கடாட்சத்தாலே மன்னவனே செம்பினுட வேதைகாணே
6555.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்தத் தாயினுட மகிமையாலே
தீதொன்றும் வாராமல் ரவியின்மார்க்கம் தீர்க்கமுடன் சொல்லுகிறேன் திறமாய்க்கேளு
போதமுடன் சீனமென்ற படிகக்கல்லாம் பொங்கமுடன் சேரதுவும் நிறுத்திமைந்தா
வாதமதில் மேலான வைடூரியந்தான் வளமான வச்சிமாங் கல்லின்போக்கே
6556.
போக்கான படிகமென்ற கல்தானப்பா பொங்கமுடன் வச்சிரமாங் குகையிலிட்டு
வாக்கதுவும் பொய்யாமல் வசனிப்பேன்யான் வளமான மாந்தளிரும் உருக்குப்பச்சை
நோக்கமுடன் சேரதுவும் கால்தானொன்று நுட்பமுடன் பூநீருக் கிடமொன்றாக
ஆக்கமுடன் காக்கையென்ற நிமிளையப்பா அடவான சேரதுவுங் கால்தானொன்றே
6557.
காலான குடோரியென்ற காரஞ்சேர்ந்து கருவாக மூசையிட்டு வுருக்கும்போது
பாலான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூடி பாகுபதம் போலுருக்கி தண்விட்டாடும்
மாலான வயிரமது போலேதோன்றும் மகத்தான நிமிளையென்ற வேதைதன்னால்
சூலான கெற்பமது வுள்ளேதோன்றி சுக்கிரன்போல் சரணைவெளி காணலாமே
6558.
காணலாம் ரவையென்ற கல்லுமாச்சு கருவான தவளம்போலே இருக்கும்பாரு
பூணலாம் சரணையிட்டு வொளியேகொண்டால் புகழான சுக்கிரன்போல் பூர்க்கும்பாரு
தோணவே வேணமட்டும் குகைதானிட்டு தோறாமல் முன்சொன்ன கணக்குபோலே
வேணபடி கணக்கெடுத்து வுருக்கிப்பாரு வெகுகோடி நிதியனைத்தும் காண்பாய்பாரே
6559.
பாரப்பா மூசையிட்டு வுருகும்போது பாலகனே சிறுமணியாங் கருவமைத்து
நேரப்பா வுருக்கியதை சாய்ப்பாயானால் நெடிதான ஜெகஜோதி என்னசொல்வேன்
சீரப்பா யிதற்கீடு ரத்னமுண்டோ சீருலகில் வெகுமாண்பர் தெரியாமற்றான்
ஆரப்பா முறையோடும் வழிபாடோடும் வப்பனே தாமுரைத்தார் அதிகவானே
6560.
அதிகமாம் வயிரமென்ற போக்குதன்னை வப்பனே யானுரைத்தேன் நுணுக்கமெத்த
பதிதமுள்ள வைப்பதனை சித்துதாமும் பாருலகில் மாண்பருக்குத் தெரியாமற்றான்
துதியோடும் பதியோடும் நூல்கள்சொல்லி துப்புரவாய் மதிதனக்கு யேராமற்றான்
விதியான சிடிகையென்ற கைபாகத்தை விட்டகற்றி நூல்மறைத்து விலக்கினாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக