6461.
அன்றான தங்கமது என்னசொல்வேன் அரகர நாதாக்கள் ஒளித்ததங்கம்
குன்றான சாத்திரத்தில் மறைத்ததங்கம் கோவேந்தர் சுட்டலைந்து கெட்டதங்கம்
வென்றிடவே யுந்தமக்கு ஓதிவைத்தேன் வேதாந்தக் கண்மணியே புத்திவானே
கன்றில்லாப் பால்கறந்த கதையைப்போல காசினியில் சித்தரெல்லாம் ஒளித்தார்தானே
6462.
தாமான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தம்பிரானே
கோமானுக் கொப்பான கோவேகேண்மோ குவலயத்தில் எந்தனிட சத்தியவானே
ஆமான மானதொரு சாத்திரங்கள் வப்பனே வெகுகோடி நூல்கள்பார்த்து
சாமானிய மானதொரு சூதவெள்ளி சாற்றுகிறேன் சன்மார்க்க புனிதவானே
6463.
புனிதமாஞ் சூதமது துலாமேவைந்து புகழான காடியென்ற காரந்தானும்
கனிவுடனே காரமது ஒன்றேயாகும் கனமான மூசைதனிலிட்டு மைந்தா
பனிபோன்ற வாறுவகை ஜெயநீர்தன்னால் பாங்குடனே மூசைதனில் நிறையவிட்டு
இனிதாக கலசமென்ற மண்பாண்டத்தில் எழிலாக மணலிட்டு மூசைவையே
6464.
வைத்து மேல்மூடி சீலைசெய்து வளமாக மேலுமந்த மணலைக்கொட்டி
சத்தமது போகாமல் பாண்டமிட்டு சதுராக சீலையது வலுவாய்ச்செய்து
சுத்தமுடன் கணபதியைப் போற்றிசெய்து சுந்தரனே நாற்சாம மெரிப்பாயப்பா
துத்தமெனுங் காடியென்ற சாரத்தாலே துடியான சூதமது மடியலாச்சே
6465.
ஆச்சப்பா பாண்டமதை திறந்துமைந்தா வப்பனே மூசைதனில் இருக்குஞ்சத்தை
பாச்சலென்ற சூதமது வெண்ணைதன்னை பக்குவமாய் வருத்தெடுத்து பீங்கானிட்டு
மூச்சடங்கிப் போனதொரு சூதந்தன்னில் முசியாமல் கல்லுப்பு துலாமேபோடு
மாச்சலுடன் சூதமென்ற வெண்ணைதானும் மார்க்கமுடன் உருகியல்லோ நிற்கும்பாரே
6466.
நிற்குமே சூதமென்ற வெண்ணைதன்னை நீதியுடன் மூசையிட்டு வுருக்கிப்பாரு
அற்பமென்று நினையாதே யறிவுள்ளேனே ஆகாகா வானத்து மீன்தானாச்சே
சொற்பமென்று நினையாமல் ரவிவான்சேர்த்து துப்புரவாய் பூசையது செப்பக்கேளு
துற்கையென்ற காளிக்குப் பூசைபோடு துறையான வெள்ளிமுகங் காணலாமே
6467.
காணலாம் சூதமென்ற வெள்ளிதன்னை காசினியில் நாதாந்த சித்தர்தாமும்
பூணலாம் சித்துமுனிக் கானவேதை பூவுலகில் சமுசாரிக் கானவேதை
வேணபடி சூதமதைக் கொண்டபேர்க்கு வெகுபாடு வெகுகேடு குஷ்டரோகம்
ஆணவங்கள் தானொடுங்கி வழிந்துதேகம் வப்பனே சகரோக மாவார்பாரே
6468.
பாரப்பா சூதமதைக் கொண்டபேர்கள் பாருலகில் வெகுபேர்கள் மடிந்தாரப்பா
நேரப்பா தவயோகி வேடம்பூண்ட நிஷ்களங்க மானதொரு சிவயோகிக்கும்
கூரப்பா வித்தையது பலிக்கும்பாரு குவலயத்தில் மற்றோர்க்கு பலியாதப்பா
ஆரப்பா புலிப்பாணி புனிதவானே அன்புடனே யானுரைத்தேன் பண்பாய்க்கேளே
6469.
பண்பான புலிப்பாணி பாலாகேளீர் பகருகிறேன் சூதமென்ற செந்தூரத்தை
நண்பான நூல்களுள் வாராய்ந்தேதான் நாதாந்த சித்துமுனி யறிந்துமல்லோ
திண்பான செந்தூரப் போக்குதன்னை திசைமாறி யடைமாறி பிரட்டல்செய்து
உண்மையாய் சொன்னதொரு மொழியைப்போலே உவமைகொண்டு பாடிவைத்தார் பேதந்தானே
6470.
பேதமாம் சூதமென்ற வெண்ணைதானும் பேரான கெந்தியென்ற திராவகத்தால்
நீதமுடன் தானரைப்பாய் யிரண்டுசாமம் நிர்மலமாய் சூதமதை மடிந்துகொள்ளும்
போதமுடன் வாசியென்ற குப்பிதன்னில் பொங்கமுடன் மாக்கல்லால் கொண்டுமூடி
வாதமது பலிப்பதற்கு மெய்யேயானால் வளமான சீலையது வலுவாய்ப்போடே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக