6541.
ஒன்றான வளையுப்பு பலந்தானொன்று வுத்தமனே சாரமது பலந்தானைந்து
குன்றான வீரமது பலந்தான்ரெண்டு குறையாமல் கல்லுப்பு பலந்தான்ரெண்டு
வென்றிடவே அன்னமென்ற பேதியப்பா வேகமுடன் யண்டோடு தானுஞ்சேர்த்து
சென்றுமே பொடியாக்கி திரள்வேந்தேகேள் செப்புகிறேன் கைவரிசை முறைமைபாரே
6542.
முறையான சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி வுத்தமனே கல்வமதில் பொடியதாக்கி
குறையாமல் செம்புதனை யுருக்கிமைந்தா குணம்பெறவே நயம்பெறவே கிராசமீவாய்
திறையகற்று செம்பதுவும் இருளுமேகி தீர்த்தமுடன் சிவந்துமல்லோ யின்னம்பாரு
துறையான செம்பதனை எடுத்துமைந்தா துகளகற்றி வூதியெடு சுத்தியாச்சே
6543.
சுத்தியாஞ் செப்புதனை யெடுத்துபாரு சுந்தரனே யாறுவகை ஜெயநீர்தன்னால்
வெற்றிபெற தானுருக்கிக் காய்ப்பாயப்பா வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
சத்தியமாய் வூறலது யேகியல்லோ சண்முகனார் பூசைக்கு ஏற்றமாச்சு
அத்திபுரந் தானெரித்த வாலங்காடர் வப்பனே தானணியுஞ் செம்புமாச்சே
6544.
செம்பான செம்புதனை பதனம்பண்ணு செயலான முத்தியமும் பெறுவாயப்பா
கும்பமுனி சாத்திரத்தில் அனேகஞ்செம்பு கூறினார் பன்னீரா யிரத்திலப்பா
நம்பியல்லோ செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி நாதாந்த சித்துமுனி சாத்திரத்தில்
அம்பொன்னாஞ் செம்பொன்னின் வினோதவித்தை வப்பனே கோடிதறை சூட்டினாரே
6545.
சூட்டினேன் இச்செம்பு சிடிகைவேதை சிறப்பான செம்புகளு மின்னமுண்டு
வாட்டமுடன் இச்செம்பை மதியில்தானும் வளமுடனே பத்துக்கு ஒன்றுதாக்க
நாட்டமுடன் வயததுவும் என்னசொல்வேன் நலமான மாற்றதுவும் ஆணிக்காறு
ஆட்டிடையன் கதைபோலே இருக்கவேண்டா மப்பனே செம்பிருக்க வலைவாருண்டோ
6546.
உண்டான வெள்ளிதனை யுருக்கிமைந்தா உத்தமனே பத்துக்கோர் தங்கஞ்சேர்த்து
கண்டதமாய் வாரடித்து புடத்தைப்போடு கண்மணியே என்னசொல்வேன் மாற்றோயெட்டு
பண்டிதங்கள் பொய்யாது ஆயுர்வேதம் பாரினிலே கலைவகுத்து நிலைவகுத்து
விண்டிடவே போகரே ழாயிரத்தை விருப்பமுடன் பாடிவைத்தேன் காண்டம்யேழே
6547.
ஏழான காண்டமது கடைக்காண்டத்தில் எழிலான சிவயோக தவயோகங்கள்
ஆழவே வைப்புமுதல் சிடிகைவேதை வப்பனே யானுரைத்தே னுந்தமக்கு
வாழவென்றால் இந்நூல்தான் சத்தகாண்டம் வையகத்து மாண்பருக்கும் போதாதுண்டோ
மீழவே கருவறிந்து பொருளறிந்து மிக்கான குருவறிந்து நினைவாய்க்கொள்ளே
6548.
கொள்ளவென்றால் சாத்திரத்தை யுன்னிப்பாரு கோடான கோடிமுறை குறிப்புசொன்னேன்
விள்ளவே மனோன்மணியாள் பதாம்புயத்தை விருப்பமுடன் பணிந்தாக்கால் எல்லாஞ்சித்தி
உள்ளதொரு பொருளெல்லாம் இதிலேதோயும் வுத்தமனே காண்டமது ஏழுங்கண்டால்
கள்ளமது வாறாது புண்ணியவானே கருத்துடனே பாடிவைத்தேன் காண்டமேழே
6549.
கண்டமா மின்னமொரு போக்குசொல்வேன் கண்மணியே விண்மணியே கருவாய்க்கேளு
வேண்டியதோர் கருமான வினோதமுண்டு வித்தகனே நாதாக்கள் மறைத்துவைத்தார்
தூண்டியே பொருளறிந்து தொடர்பறிந்து தூய்தான சாத்திரத்தின் நிலையறிந்து
ஆண்டியெனுஞ் சித்தர்முனி பதமறிந்து வப்பனே கருமுறைகள் சொல்வேன்யானே
6550.
சொல்லவென்றால் புலிப்பாணி சொகுசுள்ளானே சுந்தரனே இந்திரனே சுகுணமாரா
புல்லறிவால் உந்தனுக்குப் புகட்டுவோம்யாம் புகழான செம்பினிட சுத்திதன்னை
வெல்லவே செம்பதுவும் பலமொன்றாகும் வேகமுள்ள வீரமது பலமொன்றாகும்
சொல்லவே காரமது பலமொன்றாகும் செயலான நிமிளையது பலமொன்றாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக