பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5201-5210

5201.
பாரேதான் எந்தனுக்குச் சொன்னமார்க்கம் பாருலகில் யாவருக்குஞ் சொன்னதில்லை
நேரேதான் வெகுகால கோடியப்பா நேர்மையுடன் காலாங்கி நாதர்தாமும் 
தீரேதான் குருபாதங் கார்த்திருந்து தீரமுடன் வாங்கினதோர் வித்தையப்பா
சீரேதான் உந்தனுக்கு யானுமல்லோ சிறப்புடனே யோதிவைக்கும் வண்மைகேளே
5202.
கேளப்பா வையகத்தில் நன்மைதுன்மை கீர்த்தியுடன் தானிருக்கும் வளமைதானும்
சூளப்பா தேகமது வழியாவண்ணம் சுந்தரனே வெகுகால மிருப்பதற்கும் 
நாளப்பா போகாமல் கற்பஞ்சொல்வேன் நளினமுடன் கற்பமது என்னவென்றால்
ஆளப்பா வாகாய கற்பமாகும் வப்பனே சொல்லுகிறேன் வரிசைபாரே
5203.
வரியான புலிப்பாணி கண்ணேகேளு வாகுபெற வாகாய தெரிசனந்தான்
துரிதமுடன் வையகத்தி லிருப்பதற்கு துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளிர்
சரியான பூமிதனில் மேடுபள்ளம் சட்டமுட னாராய்ந்து சரிதைகாண
பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
5204.
காணவே சாமமது ரெண்டுக்குள்ளே கருவான காயாதி கற்பங்கொண்டு
கோணவே போசனங்க ளுண்டுமேதான் தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
நாணவே முடிதனையே யசைக்காமற்றான் நன்மையுடன் இருகரமுந் தொங்கவிட்டு
பூணவே தன்னிழலைக் கண்ணிற்கண்டு பொங்கமுடன் நன்மைதுன்மை யறிந்திடாயே
5205.
அறியவே நுட்பமது என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல் முனையான தன்சிரசைத் தானும்பார்த்து
குறிப்புடனே வாகாயந் தன்னைநோக்கி கொற்றவனே பார்க்குமந்த சமயந்தன்னில்
நெறியுடனே யுமைப்போல ரூபங்காணும் நேர்மையுடன் ரூபமதில் வினயங்கேளே
5206.
வினயமது என்னவென்றால் செப்பக்கேளிர் வேதாந்தத் தாயினது சொரூபம்போல
நினவதுவுந் தவறாமல் மைந்தாநீதான் நீதியுடன் ஆகாயந் தன்னிற்றானும்
கனவுகண்ட கதைபோலே சுடரானந்தங் கண்ணிற்குத் தோன்றுமப்பா கடினவேதை
பனையளவு வுயரமப்பா வுந்தன்ரூபம் பாரினிலே தானிருந்து காணலாமே
5207.
காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன் கண்ணிற்கு வாகாயந் தன்னிலப்பா
தோணவே சுடரொளிபோல் உந்தன்ரூபம் தோற்றுமப்பா கண்ணிற்குக் கூச்சங்காணும்
சாணளவு ரூபமது கொண்டுமல்லோ சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
நீணவே மாயாதி ரூபந்தானும் நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே
5208.
பார்க்கையிலே சிரசதும் தோன்றாவிட்டால் பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
தீர்க்கமுடன் இருகரமுங் காணாவிட்டால் தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
ஆற்றவே யறுதிங்கள் மரணமாவான் அப்பனே சாயாவின் ரூபந்தானே
5209.
தானான தரிசனங்கள் காணும்போது தகமையுள்ள சொரூபமது குறைவைகண்டால்
கோனான காலாங்கி வாக்குபோல கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
தேனான மனோன்மணியாள் சொரூபம்போல தெளிவாக வுன்ரூபங் கண்டாயானால்
பானான பாருலகில் வெகுகாலந்தான் பாலகனே இருப்பதுவும் வுறுதியாமே
5210.
உறுதியாம் பனிரெண்டு வாண்டுதானும் வுத்தமனே தரிசனங்கள் காண்பாயானால்
நிறுதியாய் வுன்ரூபங் கண்டரூபம் நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து
சுருதியுடன் கருவிகர ணாதியோடு சுத்தமுடன் வுடலாவி கொண்டுமல்லோ
பரிதிவிட்டு யுந்தனிழல் கூடேநிற்கும் பாலகனே சாயாவின் வண்மைபாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5211-5220

5211.
வண்மையாஞ் சொரூபநிலை பின்தொடர்ந்து வாகுடனே யுந்தனிடம் உலாவும்பாரு
திண்மையாய் சயனங்கள் செய்யும்போது தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போது
புண்மையாய் யுளுக்கார்த் திருக்கும்போதும் தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை யுத்தமனே யுந்தமக்கு கூறும்பாரே
5212.
கூறுமே நன்மையென்ற தீமையாவும் குறிப்புடனே யுந்தமக்கு முன்னேசொல்லும்
மாறுபடா மேனியது வாசிகூறும் வளமான தேகமது கற்றூனாகும்
வீறுடனே வையகத்தில் கோடிகாலம் வித்தகனே இருப்பதுவும் நிட்சயந்தான்
நாறுமுடல் அழியாது கோடிகாலம் நாணிலத்தில் இருப்பதுவும் சமாதியாமே
5213.
ஆமேதான் சாயாவின் தரிசனத்தை வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
தாமேதான் அட்டமாஞ் சித்தியாவும் தாரணியில் அடைவதற்கு ஐயமில்லை
போமேதான் பனிரண்டு வாண்டுமட்டும் பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
வேமேதான் காணாத மாண்பருக்கு விட்டகுறை யிருந்தாலும் வாய்க்காதன்றே
5214.
அன்றான தரிசனத்தைக் கண்டமாண்பர் வவனியிலே தானுமொரு சித்தனைப்போல்
குன்றான மலைதனிலே இருக்கலாகும் குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
வென்றிடவே தேவாதி ரிஷிகள்தம்மை விண்ணுலகில் காண்பதற்கு யிடமுண்டாகும்
தென்திசையில் அகத்தியனார் முனிவர்தானும் செப்பினார் இந்தமுறை சொன்னார்பாரே
5215.
பாரேதான் சரநூலாம் பஞ்சாட்சி பாரினிலே மாணாக்கர் பிழைக்கவென்று
நேரேதான் சாத்திரத்தைப் பாடிவைத்தார் நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தை காண்பதற்கு செம்மலுடன் வழிசொன்னார் மைதானில்லை
கூரேதான் மையினது மார்க்கந்தன்னை கூறினேன் காலாங்கி கடாட்சந்தானே
5216.
தானான சித்துமுனி கும்பயோனி தாரணியில் கருவதனை மறைத்துப்போட்டார்
மானான காலாங்கி எந்தநாதர் மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானுங்கற்று தெளிவாக மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து பாருலகில் பாலகர்க்கு பாலித்தேனே
5217.
பாலிப்பேன் இன்னமொரு மார்க்கங்கேளும் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
நீலியென்ற கருங்காலி மூலிதானும் நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
சூலியென்ற நத்தையின் சூரியப்பா சூரியனார் காந்தியது மூலிவேரும்
வேலியென்ற பருத்தியப்பா இருவேலிதானும் வேகமுள்ள கருப்பு வூமத்தைவேரே
5218.
வேரான சடையனது மூலிதானும் வேகமுடன் பொன்னினூ மத்தைவேரும்
தூரான மையூரின் சிகையுங்கூட்டி துப்புறவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சேரான பொடிதனிலே வைங்கோலத்தை செப்பமுடன் தானுரைத்து சொல்லக்கேளு
கூரான புழுகுரோ சனையுஞ்சேர்த்து குறிப்புடனே மைசேர்த்து வரைத்திடாயே
5219.
சேர்த்துமே பேரண்டந் தன்னிலப்பா செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
கோர்த்துமே குமரியுட மையுங்கூட்டி கொற்றவனே தானரைத்து சிமிளில்வைத்து
பார்த்துமே நேத்திரமாம் புருவந்தன்னில் பாலகனே மைதீட்டி வாகாயத்தை
தீர்த்துமே பார்க்குகின்ற ஜாலந்தன்னில் திறமுடனே தெரிசனமுந் தெரியுந்தானே
5220.
தானான சூரியனை மேகந்தானும் சட்டமுடன் மேகமது மறைத்திட்டாலும்
பானான மேகமதுக் குள்ளிருக்கும் பாலகனே சூரியனுங் கண்ணிற்றோற்றும்
மானான சந்திரனைக் காணும்போது மகத்தான தரிசனையுங் கண்ணிற்றோற்றும்
தேனான தேசொளியின் மயக்கத்தைப்போல ஜெகஜோதி மின்னல்போல் தோற்றும்பாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5221-5230

5221.
பாரேதான் மையினால் மேகஜாலம் பாங்குடனே தெரிசனையுங் காணலாகும்
நேரேதான் இக்கருவை சித்தர்தானும் நெறிமுறைமை தானறிந்து கூறாமற்றான்
சீரேதான் கருக்குருவை மறைத்துவிட்டு சீர்தப்பி தெரிசனத்தைப் பாடிவைத்தார்
ஆரோதான் எனைப்போல சொன்னாரப்பா வப்பனே வுண்மையது வுரைத்திட்டோமே
5222.
உண்மையாய் சாத்திரங்கள் கண்டாராய்ந்து உவமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
திண்மையாய் காலாங்கி கிருபையாலே திறமுடனே யுந்தமக்கு வோதிவைத்தேன்
வண்மையாய் நீயுமொரு சித்தனைப்போல் வளமுடனே யுலகுதனி லிருந்துகொண்டு
நன்மையாய் நாதாக்கள் பாதம்போற்றி நாட்டமுடன் எப்போதும் வாழ்வீர்காணே
5223.
காணவே போகரிஷி நாதர்தானும் கனமான காலாங்கி நாதர்பாதம்
பூணவே யவர்பாதந் தொட்டுமல்லோ புகழுடனே மதியமுர்தம் பூண்டுமல்லோ
தோணவே குளிகைதனை பூண்டுகொண்டு துப்புரவாய் சீனபதிக் கேகியல்லோ
நீணவே காலாங்கி சமாதிபக்கல் நின்றாரே நெடுநேரம் நின்றிட்டாரே
5224.
நின்றதொரு போகரிஷி வந்தசேதி நீதியுள்ள காலாங்கி நாதருக்கு
சொந்தமுடன் மனோலயத்தி லறிந்துகொண்டு தோற்றமுடன் போகரிஷி நாதருக்கு
அந்தமுடன் அசரீரி வாக்கினாலே யங்ஙனவே சப்தமது கேட்கலாச்சு
விந்தையுடன் சப்தமது கேட்டபோது விருப்பமுடன் போகரிஷி வணங்கிட்டாரே
5225.
வணங்கியதோர் போகரிஷி நாதர்தானும் வாகான ஞானோப தேசங்கேட்டு
இணங்கியே சிரம்பணிந்து கைகுவித்து யெழிலான காலாங்கி நாதருக்கு 
மணங்கமழும் வேதாந்த தாயாருக்கு மகிழ்ச்சியுடன் இருபாதந் தெண்டனிட்டு
சுணங்கமது வாராமல் போகர்தாமும் துப்புரவாய் சீனபதி வந்திட்டாரே
5226.
இட்டதொரு போகரிஷி நாதர்தாமும் எழிலான சீனபதிப் பெண்களுக்கு
சட்டமுடன் சாயாவின் தரிசனத்தை சாங்கமுடன் போதித்தார் போகர்தாமும்
அட்டதிசை தான்புகழும் சாயாவின்தன் வன்பான தரிசனத்தை கூறும்போது
திட்டமுடன் மாதரெல்லாம் கண்டுமல்லோ திறமுடனே மனதுவந்து களிப்புற்றாரே
5227.
களிப்பான தெரிசனத்தைப் பெண்களெல்லாம் கருத்துடனே பார்த்தல்லோ சந்தோஷித்து
தளிர்போன்ற கரமதனை கண்ணில்வொத்தி சார்புடனே சாயாவின் தரிசனத்தை
பளிங்குடனே எங்களுக்கு போதித்தாலே பாங்குடனே தரிசித்து மனங்களித்து
அளியாமல் எங்களது காயந்தன்னை வவனியிலே தாமிருக்கச் செய்வோம்பாரே
5228.
பாரேதான் காயாதி கற்பங்கொண்டு பாங்குபெற எந்நாளும் பாரின்மீது
சீரேதான் தாமிருந்து யோகசாதம் சிறப்புடனே கண்டல்லோ நாங்களுந்தான்
நேரேதான் பனிரண்டு வாண்டுமட்டும் நேர்புடனே சாதனைகள் மிகவுஞ்செய்து
வீரேதான் விண்ணுலகு வதிசயத்தை விருப்பமுடன் காண்பமென்று வினவிட்டாரே
5229.
இட்டதொரு பெண்களுக்கு போகர்தாமும் யெழிலான வித்தையென்ற சாதனத்தை
தொட்டகுறி போலல்லோ காண்பித்தேதான் தேறாமல் எப்போதும் காண்பதற்கு
பட்டதொரு குறிபோல தரிசனத்தை பாங்குபெற போதித்துப் பெண்களுக்கு 
சட்டமுடன் குளிகையது கொண்டுமல்லோ சாங்கமுடன் மறுபடியும் வந்திட்டாரே
5230.
வந்தாரே மேருவுக்குத் தெற்கேயப்பா வளமுடனே நர்மதா நதிக்குப்பின்னால்
அந்தமுடன் போகரிஷி நாதர்தாமும் அன்பாக குளிகையது பூண்டுகொண்டு
நிந்தனைக ளில்லாமல் ரிஷியார்தாமும் நீதியுடன் வேடிக்கை சிமிட்டுவித்தை
சொந்தமுடன் செய்தல்லோ மாண்பருக்கு சூட்சாதி சூட்சமெல்லாம் காண்பித்தாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5231-5240

5231.
காண்பித்தார் மாண்பருக்கு வினோதவித்தை களிப்புறவே போகரிஷி நாதர்தாமும்
ஆண்பிள்ளை புலிப்பாணி எந்தன்பாலா வப்பனே யுந்தனுக்கு வினோதஜாலம்
நண்பான பானையது பாண்டமப்பா நவிலவே யானுரைப்பேன் மைந்தாகேளு
சாண்பான தவளமது கலசம்போல சட்டமுடன் செய்துமல்லோ செப்பக்கேளே
5232.
செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை
ஒப்பமுடன் பாண்டமது செய்துமல்லோ ஒளிவான நறுவளிய மாபழத்தையப்பா
இப்புவியில் மாண்பர்களுக் கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே
அப்பியே பூசியல்லோ காயப்போடு அங்ஙனவே செய்யுமுறை வறையக்கேளே
5233.
கேளப்பா ஜலமதனை பாண்டமிட்டு செப்புகிறேன் கட்டுயென்ற கொடிதானப்பா
பாளப்பாப் போகாமல் யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே
நாளப்பா போகாமல் அப்போதேதான் நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு
ஆலேதான் எல்லவரும் பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே
5234.
உடைக்கவே ஜலமதுதான் வூறல்போல வுத்தமனே இறுகியல்லோ வெண்ணைபோலாம்
படைசேர்ந்த கொலுமுகத்தில் இந்தஜாலம் பாலகனே செய்துமல்லோ வெண்ணையீவாய்
தடையறவே மாண்பரெல்லாங் கண்டுயேங்கி தகமையுடன் பொசித்தல்லோ யுன்னைமெச்சி
சடைபோன்ற தம்பிரான் மகுத்துவந்தான் தாரிணியில் இவர்போலு மில்லையென்பாரே
5235.
என்னவே வேணதொரு பொருளுமீவார் எழிலான மாந்திரீக ரென்றுமல்லோ
துன்னவே யுந்தனுக்கு சோடசாரம் தோறாமல் செய்தல்லோ தனமுமீவார்
நன்னயமாய் வேதாந்த சித்துவென்று நாட்டினிலே யுந்தமக்குப் பேருண்டாகும்
பன்னவே பலபேரும் போற்றுவார்கள் பாலகனே நீயுமொரு சித்தனாமே
5236.
சித்தனா மின்னமொரு மார்க்கஞ்சொல்வோம் சிறப்பான புலிப்பாணி மைந்தாகேளு
பக்தியுடன் குளிகையது பூண்டுமல்லோ பார்லோகம் சத்தகடல் சுத்திவந்தேன்
முத்திபெற மாண்பரெல்லாங் கோடிகோடி முயன்றுமே காவிக ஷாயத்தோடும் 
நித்தமுமே ஜெபதபங்கள் அதிகமுண்டு நீணிலத்தில் வெகுபேர்கள் கோடியாமே
5237.
கோடியாம் சாதியிலே யனந்தஞ்சாதி கொற்றவனே பதினெட்டு ஜாதியுண்டு
பேடிகளுஞ் சூரர்களு மெத்தவுண்டு பேரான பதிதனிலே லக்கோயில்லை
தேடியே பலதேசங் கண்டாராய்ந்தேன் தேசத்தில் சைவமது காணவில்லை
நீடிரே வெகுமாண்பர் தேசமெல்லாம் நிலையான சைவமென்று சொல்வார்பாரே
5238.
சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே
5239.
கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் மட்டிமாடே
5240.
மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5241-5250

5241.
நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்துகளுஞ் சொல்லவில்லை
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா
தும்பியுடன் பிரம்மகுல ஷத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே
5242.
குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே
5243.
நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே
5244.
அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே
5245.
பாரப்பா யின்னம்வெகு வினோதமப்பா பாரினிலே மாணாக்கர் செய்யுமார்க்கம்
ஆரப்பா கற்பகத் தருவின்மூலம் வப்பனே யார்தின்ற யெச்சிலப்பா
சீரப்பா மாண்பரெல்லாம் ஆதாரந்தான் சிறப்புடைய கிழங்கென்று பொசித்தாரப்பா
நேரப்பா பலபேரும் பொசித்தமூலம் நினைவழிந்து நின்றுமல்லோ கெட்டார்மாண்பரே
5246.
கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே
5247.
நூலான நூலுக்குள் அதிதங்காணும் நுட்பமென்ற பொருளெல்லாம் இதிலேதோயும்
காலான காலாங்கி சொன்னவாக்கு காசினியில் பொய்யாது மெய்யேயாகும் 
மாலான மாண்பரெல்லாம் சிற்றின்பத்தில் மதிகெட்டு தேவதா மங்கையோடு
கோலான லீலையது மிகவுமாடி குவலயத்தில் யெல்லிதனை விரும்பினாரே
5248.
விரும்பியே கலவிதனி லிருவரெச்சை மெய்யுட லாவிபொருள் எல்லாந்தந்து
சுரும்பியன கைப்பொருள்கள் யாவுந்தந்து சுந்தரமே மோட்சமிது யோனியென்று
கரும்புடனே மூத்திரக் குழியையப்பா கைலாச மேருகிரி யென்றுநம்பி
துரும்பாகப் போனவர்கள் கோடாகோடி தூங்கியே மாண்டவர்கள் கோடியாமே
5249.
கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை
தேடியே மாயவலை சிக்கியல்லோ தேசத்தில் கெட்டவர்கள் அதிகமாண்பர்
நீடியே வையகத்தி லிருந்தாரில்லை நிட்சயமாய் காலங்கி சொன்னநீதி
வாடியே போகரிஷி யடியேனப்பா வன்புடனே தாமுரைத்த நீதிதாமே
5250.
தானான நீதியது யாருக்கென்றால் தாரணியில் சீனபதி யுலகத்தோர்கள்
மானான வாக்கியத்தை மெய்யென்றெண்ணி மகவதிலும் பதின்மடங்கு வதிகமாக
கோனான காலாங்கி நாதர்சொல்லை கொப்பெனவே மெய்யென்று நம்பியல்லோ
வேனான வொழுக்கம் ஆசாரத்தோடும் மேதினியில் நடப்பதுவும் உண்மையாமே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5251-5260

5251.
உண்மையாம் சீனபதி தேசத்தோர்க்கு ஓகோகோ சைவங்கள் இல்லையப்பா
கண்மையாய் மாமிஷங்கள் புலால்தானும் கபடன்றி புசிப்பது நீதியாகும்
வண்மையுடன் ஜெபதபங்கள் குளியலுண்டு வளமான நேமநிஷ்டை யனேகமுண்டு
திண்மையாம் மாமிஷம் மிலாதவர்க்கம் திகழுடனே தின்பார்கள் சைவந்தானே
5252.
சைவமென்பார் பேதாபேதங் களில்லை சாதுரிய பதார்த்தவகை புசித்திட்டாலும்
கைதவங்கள் பிசகாத சுழிகள்போலும் கைலாய நாதரைப்போல் தவமும்செய்வார்
மைவனங்கள் மெத்தவுண்டு சீனத்தார்க்கு மகாவிஷ்ணு கிருஷ்ணாவ தாரமென்பார்
வெய்தவம் பூண்டாலும் சீனத்தார்கள் விருப்பமுடன் சைவமது யில்லைதானே
5253.
தானான புலிப்பாணி மைந்தாகேளு தகமையுட னின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலே
தேனான தேசமெலாம் குளிகைகொண்டு தெளிவுடனே எழுகடலுஞ் சுற்றிவந்தேன்
மானான மாண்பரிட சைகைகண்டேன் மகத்தான சாஸ்திரங்கள் மெத்தவுண்டே
5254.
உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே
5255.
பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே
5256.
உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே
5257.
பதமான பதமதுவும் சாஸ்திரங்கள் பாங்குடனே மேதினியில் கண்டேன்யானும்
மிதமுடனே தர்க்கங்கள் யாகமங்கள் மேதினியில் வெகுபேர்கள் சொல்வாரப்பா
நிதமுடனே சாஸ்திரத்தின் தொகுப்பையெல்லாம் நீதியுடன் மெய்போலே பேசுவார்பார்
சதகோடி சாஸ்திரங்கள் கூறிட்டாலும் சட்டமுடன் சீனபதிக் கீடாகாரே
5258.
இணையான தென்காசி பதியிலப்பா யெழிலான தேசமது வனேகமுண்டு
சணமதிலே குளிகையது பூண்டுகொண்டு தாரிணியில் சதகோடி தூரமட்டும்
கணமதுவும் நில்லாமல் அடியேன்தானும் காசிபதி மாண்பரெல்லாங் கண்டுவந்தேன்
பிணமதுவும் மடிந்தாக்கால் சாஸ்திரங்கள் பேரான சாங்கியங்கள் மெத்தவுண்டே
5259.
உண்டான சமுசாரி கோடிமாண்பர் வுத்தமர்கள் வேதாந்தங் கடந்தஞானி
செண்டான முறைமைகெட்டு மையல்கொண்டு ஜெகந்தனிலே மடிந்தவர்கள் கோடாகோடி
அண்டமுடன் ஆகாயந் தன்னளவாய் அகிலமெல்லாங் கொடிகட்டி வாழ்ந்தார்கோடி
புண்டரீக கிருஷ்ணாவ தாரனைப்போல் புகழான கீர்த்தியுடன் மடிந்தோர்தாமே
5260.
மடிந்ததோர் மாணாக்கள் மானிலத்தில் மகதேவர் பாதமது வடைந்தோர்கோடி
கடினமுடன் வையகத்தில் வாழ்வுபெற்று காசினியில் சாஸ்திரங்கள் மிகவுங்கற்று
அடியளவு வேதமுதல் ஆகமங்கள் அறுபத்து நாலுகலை சாத்திரங்கள்
முடியோடு முனிவர்பதந் தாள்பணிந்து மூதுலகில் கற்றென்ன ஒன்றுங்காணே