பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5381-5390

5381.
ஆச்சப்பா பூநீறு றங்கினாலே வப்பனே பச்சையென்ற மணியுமாச்சு
மூச்சடங்கி யிருந்ததொரு கருவைத்தானும் முக்கியமாய் உடைத்துப்பார் யென்னசொல்வேன்
பாச்சலுடன் பச்சையென்ற மணிதானங்கே பாங்குடனே சதகோடி யென்னலாகும்
மாச்சலுடன் சீனபதி பெண்களுக்கு மார்க்கமுடன் ஓதிவைத்தேன் உண்மைபாரே
5382.
உண்மையாய் யின்னமொரு மார்க்கம்பாரு வுத்தமனே புலிப்பாணி மைந்தாபாரு
வண்மையாஞ் சீனபதி பெண்களுக்கு வளமான நீலமணி செய்வேனப்பா
தண்மையாம் பூநீராம் பலகைதன்னில் தகமையுள்ள நீலத்தி னுட்படுத்து
பண்மைபெற மூசையிட்டு வுருக்கியல்லோ பட்சமுடன் நீலமணி செய்தேன்தானே
5383.
செய்யவென்றால் சிறுகம்பி மயிர்பாலந்தன்னில் சிறப்புடனே ஸ்தம்பமது நிறுத்தியல்லோ
பையவே கருக்கட்டி துவாரமிட்டு பாங்குபெற மூசையிட்டு வுருக்கியல்லோ
வெய்யவே மூசையது வுருக்கியேதான் மேன்மையுடன் கருவதனில் பாயும்போது
துய்யதொரு நீலமணி யென்னசொல்வேன் துப்புரவாய் சதகோடி யென்னலாமோ
5384.
என்னவே காலாங்கி நாதர்வாக்கு யெழிலான வேதைமுகம் பொய்யாதப்பா
பன்னவே சீனபதி பெண்களுக்கு பாலித்த வேதையது கோடாகோடி
மின்னவே பவளமணி சொல்வேன்பாரு வித்தகனே சித்தர்முனி சொன்னதில்லை
நன்னவே நாதாக்கள் தாள்பணிந்து நவிலுகிறேன் பவளமணி நவிலத்தானே
5385.
நவிலவே மண்பவள மென்னசொல்வேன் நாதாக்கள் சித்துமுனி வந்ததில்லை
சவிலமுள்ள பூநீரு பலகைதன்னை சட்டமுடன் ஈயமென்ற செந்தூரத்தை
குவிலவே மூசையிட்டுத் தானுருக்கி கொற்றவனே மயிர்பாலந் தூணித்து
பவிலவே கருக்கட்டி வாய்தான்விட்டு பக்குவமாய் யுருக்கியதை யெடுத்துவாரே
5386.
வார்க்கவே கருவதுதான் பாய்ந்துமல்லோ வளமான சதகோடி மணியுமாக
ஏர்க்கவே மூசைதனை யுடைக்கப்பாரு யென்னசொல்வேன் பவளமென்ற மணிதானப்பா
தீர்க்கமுடன் நாதாக்கள் சொன்னதில்லை திறமான வேதைமுகங் கண்டுமல்லோ
ஆர்க்கவே சீனபதி மாண்பருக்கு வன்புடனே போதித்த மணியுமாமே
5387.
மணியான மணியதுவும் என்னசொல்வேன் மார்க்கமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு
அணியான பூநீராம் பலகைதன்னில் அப்பனே இரும்பினிட சத்துவாங்கி
துணிவுடனே மூசையிட்டு வுருக்கிக்கொண்டு துப்புரவாய் துவாரமது விட்டுமேதான்
கணிதமுடன் மயிர்ப்பாலங் கால்நிறுத்தி கணக்குடனே சிறுகம்பி ஸ்தம்பமாட்டே
5388.
நாட்டியே முசைதனை யெடுத்துமைந்தா நலமுடனே கருவதனில் பாச்சியேதான்
வாட்டமுடன் கருவதனை யுடைத்துப்பாரு வளமான கறுப்புமணி சதகோடியப்பா
நீட்டமுடன் சீனபதி மாண்பருக்கு நியமித்த கருப்புமணி பூநீர்தானும்
ஆட்டமது என்னசொல்வேன் பூநீராட்டம் அப்பனே சித்துமுனி சொல்லாரன்றே
5389.
அன்றான யின்னமொரு மார்க்கம்பாரு வருமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
குன்றான குளிகைகொண்டு சீனஞ்சென்று கொற்றவனே யான்செய்த வேதையப்பா
நன்றான பூநீறு பலகைதன்னை நலமான நவநீத சத்துசேர்த்து
வென்றிடவே தானுருக்கி மூசைகட்டி வேகமுடன் காச்சுதற்கு வகையைக்கேளே
5390.
வகையான மயிர்பாலந் தன்னிலப்பா வளமாக சிறுகம்பி ஸ்தம்பம்நாட்டி
மிகையான கருவதும் அமைத்துமேதான் மேன்மையுடன் தானுருக்கி மூசைதன்னை
நகையெனவே கருவதனில் உருக்கிவாரு நலமான கருவதுவும் பாய்ந்துமேதான்
பகையிலா முத்துமணி யென்னசொல்வேன் பாலகனே சதகோடி யெண்ணலாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக