5721.
பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே
5722.
பாவில்லை புலிப்பாணி யின்னங்கேளு பாங்குடனே வாரிதியாம் சாதிபேதம்
ஆவியுடன் பூமிதனி லிருந்தசித்து வப்பனே வரத்தினால் பிறந்தசித்து
காவிலயங் கண்டதொரு கள்ளர்ஜாதி கருவான ஜாதியென்றே செப்பலாகும்
நாவிலே சொல்வதற்கு யாராலாகும் நலமான தலைமுறைகள் நாற்பத்தெட்டே
5723.
எட்டான வால்மீகர் மரபேதென்றால் யெழிலான வேடருட ஜாதியாகும்
திட்டான தலைமுறைகள் சொல்வேன்பாரீர் தீர்க்கமுடன் முப்பத்தி ரெண்டேயாகும்
சட்டமுடன் வால்மீகர் காவியத்தில் சாங்கமுடன் எழுதிவைத்த படிநிதானம்
வட்டமுடன் வால்மீகர் நூலறிந்து வளமுடனே கண்டறிந்து சொன்னதாமே
5724.
சொன்னேனே யின்னமொரு மார்க்கம்பாரு தூய்தான புலிப்பாணி மைந்தாகேளு
நன்னயமாய் வூர்வசியார் சாத்திரத்தில் நலமாகத் தானுரைத்த ஜாதிபேதம்
உன்னிதமாய் தேவதா மடந்தையென்று வுத்தமர்கள் சித்தர்முனி கூறும்வண்ணம்
பன்னியே தலைமுறைகள் பகுக்கொண்ணாது பாலகனே அடுமையென்ற ஜாதியாமே
5725.
ஜாதியா மின்னமொரு மார்க்கங்கேளு சாங்கமுடன் யானுரைப்பேன் மைந்தாபாரு
ஆதியாங் கமலமுனி யென்ற சித்து வன்பான குரவரிட ஜாதியாகும்
நீதியாந் தலைமுறைகள் ஆறெட்டாகும் நிஷ்களங்க மாகவல்லோ சாத்திரத்தில்
பாதிமதி சடையணிந்த தம்பிரானும் பாடிவைத்த நூல்தனிலே காணலாமே
5726.
காணவே மகாசித்து அறிவானந்தர் கைலாசநாத ரென்றே செப்பலாகும்
தோணவே வள்ளுவனார் ஜாதியாகும் தோறாமல் அவர்செய்த நூலிற்காண்பீர்
வேணவே தலைமுறைகள் எண்பதாகும் வெகுநாளாய் மலைதனிலே இருந்தசித்து
ஆணவங்கள் தானொடுங்கி யிருந்தசித்து வப்பனே அறிவான சித்துதாமே
5727.
சித்தான சித்துமுனி சொல்வேன்கேளிர் சிறப்பான அகப்பேயர் சித்தேயாகும்
முத்தான ஜாதியது யாதென்றாக்கால் முனையான நாயனார் ஜாதியாகும்
சத்தமுள்ள தலைமுறைகள் ஈரெட்டாகும் சார்பாக வவர்நூலிற் காணலாகும்
நித்தமுமே வாணிபங்கள் விர்த்திசெய்து நிலையாக பூமிதனில் இருந்தசித்தே
5728.
சித்தென்றால் சித்துயிது என்னசொல்வேன் சீர்பாலா புலிப்பாணி மைந்தாகேளு
புத்தியுள்ள பூபாலா புனிதவானே பூவுலகில் இருந்ததொரு குதம்பைசித்து
பத்தியுடன் பெண்ரூபங் கொண்டசித்து பாருலகில் வெகுநாளாய் இருந்தார்தாமும்
சுத்தியுடன் தேவதா பூசையோடும் சுந்தரனே வெகுகால மிருந்தார்தானே
5729.
தானான வவர்மரபு யாதென்றாக்கால் தாக்கான கோனாரின் ஜாதியாகும்
கோனான யிடையரென்றே சொல்லலாகும் கொற்றவனே யவர்நூலில் சொன்னநீதி
மானான தலைமுறைகள் ஏதென்றாக்கால் பத்துரெண் டொன்றுமூன்று
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவாகக் கண்டறிந்தேன் பலநூல்தானே
5730.
நூலான பலநூலுங் கண்டாராய்ந்து நுட்பமுடன் தானுரைத்த வண்மைநீதி
பாலான பாம்பாட்டி மரபேதென்றால் பாலகனே ஜோதியென்ற ஜாதியாகும்
கோலான மாதவத்தார் குலத்தினாலே கொற்றவனே சமாதியது பிரவேசமாகி
சேலான வையகத்தில் சிலதுகாலம் சிறப்புடனே சமாதிவிட்டு வந்தசித்தே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக