5451.
திண்ணமாம் வெகுகோடி போக்குசொல்வேன் திகழான குளிகையது கொண்டபோது
வண்ணமாஞ் சுரமதுவு மதிகமாகி வளமுடனே தீராத ரோகமாகும்
நண்ணவே பண்டிதரை மிகவேதேடி நயமுடனே ரோகமது தீர்ப்பதற்கு
குண்ணியே மனதுவந்து மருந்துகொள்வார் கூறான ரோகமது ஜெனிக்குந்தானே
5452.
தானான குளிகையது கொண்டபேர்க்கு தகமையுடன் மருந்தறிந்தி னோர்கட்கெல்லாம்
கோனான சுரமதுவு மதிகமாகி கொப்பெனவே தீராத நோயுமாகும்
தேனான மருந்ததனை யருந்தாமற்றான் தெளிவான புத்தியுடன் மனதுவந்து
மானான மகதேவர் தன்னைநோக்கி மகத்தான வேண்டுதலும் கேட்கநன்றே
5453.
நன்றான வேண்டுதலின் கோளேதென்றால் நலமான காமத்தால் வந்தரோகம்
குன்றான வாய்மதத்தால் வந்தரோகம் கூறான சாபத்தால் வந்தரோகம்
வென்றிடவே மாந்தரிட கைமசக்கால் வினையினால் வந்ததொரு ரோகந்தானும்
சென்றுமே யாராய்ந்து மிகநினைத்து செம்மலுடன் பரிகாரஞ் செய்யநன்றே
5454.
செய்யவே சிலகாலஞ் சென்றபின்பு சீருடனே நீர்சென்று அவர்கள்வாசல்
பையவே பரிகாரம் மிகவும்பார்த்து பட்சமுடன் கடவுளுக்கு பொதுவதாக
மெய்யான ரோகமதை தீர்ப்பேனென்று மேன்மையுடன் வழிபாடு மிகவுரைத்து
துய்யதொரு பதாம்புயத்தை மிகவேநண்ணி துப்புரவாய்க் கியாழமதைக் கொடுத்திடாயே
5455.
கொடுக்கவே பட்சமது மிகவேவைத்து கொப்பெனவே கியாழமது சொல்வேன்கேளிர்
அடுத்ததொரு வெண்குன்றி வேரைதானும் அடவான மூலியொடு சமூலங்கூட்டி
தொடுத்துமே கூகைநீர் தானுஞ்சேர்த்து துப்புரவாய்க் கியாழமது கொடுத்தபோது
படுத்ததொரு சுரமதுவும் நான்குநாளாம் பாங்குடனே தீருமெனப் பகருவீரே
5456.
பகரவென்றால் நோய்தீர்ந்த மாண்பருக்கு பட்சமுடன் மனதுவந்து வுரைக்கக்கேளிர்
நிகரமுடன் நல்லோர்கள் தம்மையப்பா நிகட்சியுடன் உதாசினங்கள் கூறவேண்டாம்
சிகரமுடன் வுத்தமரைப் பகடிசெய்து சீறலுடன் அவர்தனையே கெடுக்கவேண்டாம்
சகரமுடன் வுபதேச வார்த்தைகூறி சட்டமுடன் அவர்பாதம் பணிகுவீரே
5457.
பனியவே யுந்தமக்கு காட்சிசெய்தும் பாருலகில் வினைதமக்கு ஆளுமாகா
அணிகடவுள் செய்கையினால் உந்தமக்கு வப்பனே நினைத்தவண்ணம் லபிக்கும்பாரு
துணிவுடனே காயாதி கற்பங்கொண்டு புதிதான திரேகம் போலாகும்பாரு
மணியான வுபதேசஞ் செய்துமல்லோ மார்க்கமுடன் வாழ்கவென்று வரமீவாயே
5458.
வரமான வரமதுவும் என்னசொல்வேன் வலையான மார்க்கமது சொல்வேனப்பா
உரமுடைய புலிப்பாணி மைந்தாகேளு வுத்தமனே யுந்தமக்கு சொல்வேனப்பா
சிரமான வசியமென்ற பொடிதானப்பா சிற்பரனே காலாங்கி சொன்னவாக்கு
வரமதுவும் பொய்யாது மகிமைமெத்த வண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
5459.
பண்பான பொடியதுவும் என்னவென்றால் பாங்கான மசானமதில் இறந்துபோன
நண்பான தந்தமது முன்னிரண்டு நலமான தந்தமதைக் கொண்டுவந்து
திண்பான பிரேதமது மேலேசாற்றும் திறமான மாலையது பூவின்வாடை
நண்பான சுட்டதொரு எலும்புதன்னில் கலங்காமல் சாம்பல்தன்னை எடுத்திடாயே
5460.
எடுப்பாயே காடாற்று முன்னதாக எழிலான சாம்பல்தனை எடுத்துமைந்தா
கொடுத்துதே மசானமதில் பறக்குகின்ற துப்புரவாய்த் தும்பிதனை கொண்டுவந்து
படுத்ததொரு வாத்மஜலந் தானுங்கூட்டி பாங்கான வாடையென்ற காற்றுதன்னில்
அடுத்துமே பறக்குமா விலைதானப்பா வப்பனே தான்சேர்த்து எடுக்கநன்றே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக