பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5441-5450

5441.
மாந்தராம் அன்னமிட்ட புண்ணியோரை மார்க்கமுடன் கண்ணமிட்ட பாவியோர்க்கும்
சாந்தகுணம் உள்ளதொரு சீஷந்தம்மை சாங்கமுடன் நிபந்தனைகள் செய்தபேர்க்கும்
போந்தமுடன் பிணியாளம் தம்மையல்லோ பொங்கமுடன் நிதிகெட்டு பிணிதீரார்க்கும்
பாந்தளெனும் பாணமது கையிலேந்தி பாராமல் விட்டதொரு பாவியோர்க்கே
5442.
பாவியாஞ் சண்டாள மூடருக்கும் பாரினிலே வெகுகுடியைக் கெடுத்தபேர்க்கும்
காதினில் யபலோசை கேட்டுமல்லோ கண்களித்து பாராமல் கொன்றபேர்க்கும்
தீவினையாள் எந்நாளும் மடிந்தபேயர் திறமான நிதிகொடுத்துத் தீராதுரோகி
பாவியெனும் பண்டிதர்கள் நிதியைவாங்கும் பண்பான கர்மிகட்கும் வேண்டும்பாரே
5443.
பாரேதான் கோயில்தனை யிடித்தபேர்க்கும் பாங்கான வாலயத்தில் தீபந்தன்னை
நேரேதான் விற்றல்லோ சிலைகள்தன்னை நேர்மையுடன் கொள்ளைகொண்ட துரோகிமார்க்கும்
சீரான மடுக்கள்குள மடைத்தபேர்க்கும் சிறப்பான பண்டிதரைப் பழித்தபேர்க்கும்
ஆரோதான் நடுச்சாம வழியிலப்பா அபகரித்து கொள்ளை கொண்டகருமிகட்கே
5444.
கருமியாந் தேவபூசை கெடுத்தபேர்க்கும் கலியான மணமுகூர்த்த மழித்தபேர்க்கும்
மருமமாய் வஞ்சனைகள் அதிகங்கொண்டு வையகத்தில் வியாபார மோசங்கூறி
தருமமாய் நியாயமது மிகவேபேசி தகமையுடன் வியாபார முடக்கல்செய்து
குரூரமது தன்மனதில் உள்ளடக்கி குடிகெடுக்கும் சண்டாளர்க் காகுந்தானே
5445.
தானான சகோதரரைத் துரோகஞ்செய்து தண்மையுடன் வீடுமனை பறித்தபேர்க்கும்
கோனான குருமாது பத்தினியைத்தானும் குணம்பேசி வலகழித்த கள்வனுக்கும்
மானான மகதேவர் தன்னைத்தானும் மண்டலத்தில் குறைபேசி வைத்தபேர்க்கும்
பானான வகதிபர தேசிதன்னை பறக்கடித்த பாவிகட்கும் வேண்டும்பாரே
5446.
வேண்டியே நம்பியதோர் நிதிகள்தன்னை வேட்கமுடன் மோசமது செய்தபேர்க்கும்
கூண்டதனில் பட்சிகளைத் தானடைத்து குறைகேடாய் கானகத்திற் சேராமற்றான்
ஆண்டியைத் தானடித்து வகடுபேசி வனியாயஞ் செய்ததொரு கர்மிகட்கும்
தூண்டிதனில் மச்சமதை பிடித்தபேர்க்கும் துர்மார்க்க பாவியர்க்கு வேண்டுங்காணே
5447.
காணவே கணவனைத் துரோகஞ்செய்து காணாமல் சோரமது செய்தபேர்க்கும்
பூணவே புருஷர்க்கு மருந்துசெய்து பொங்கமுடன் அன்னமதி லிட்டபேர்க்கும்
கோணவே சாராயந் தன்னிற்றானும் துப்புரவாய் மருந்திட்ட பாவியோர்க்கும்
வேணபடி வுபசார மிகவுங்கூறி விருந்ததனில் மருந்திட்ட பாவியோர்க்கே
5448.
மருந்திட்ட பாவிகட்கும் சண்டாளர்கட்கும் மகத்தான கணவனுக்கு நயங்கள்பேசி
விருந்திட்டு சோரநாய கனுக்காக விருப்பமுடன் மருந்துவைத்து கொன்றபேர்க்கும்
திருந்தவே பொன்னதனைப் புதைத்துவைத்து தீர்க்கமுடன் பிறருக்கு பொய்சொன்னோர்க்கும்
அருந்தவே முகம்பார்த்து வன்னந்தாரார் வவனிதனில் கண்டார்க் கிதுதான்பாரே
5449.
பார்க்கவே பச்சைமரம் வெட்டினோர்க்கு பாங்கான ஜீவவதை செய்தபேர்க்கும்
ஏர்க்கவே யதாசினங்கள் மிகவுங்கூறி வெளிதாக போர்தனிலே சண்டையிட்டு
மார்க்கமுடன் அனியாயம் மிகவுஞ்செய்து மடிபிடித்து சண்டையிட்ட பாவியோர்க்கும்
ஆர்க்கவே குளிகைதனை யெடுத்துமைந்தா வப்பனே யனுபானந் தன்னில்தாக்கே
5450.
தாக்கவே நெய்தனில் வெண்ணையப்பா தண்மையுடன் மூன்றுநாள் கொடுப்பாயப்பா
நாக்கமலம் வுந்தியெனும் படிகந்தன்னில் நலமான குளிகையது வூறியல்லோ 
தேக்கமது கண்டல்லோ நான்காம்நாளில் திறளான காத்தனது வதிகமாகி
நோக்கமுடன் கண்சிவந்து சுரமுண்டாகி நோயதுவும் பிறக்குமது திண்ணம்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக