5431.
காணவே கேட்டதெல்லாம் உந்தனுக்கு கனமுடனே தான்கொடுத்து வினோதஞ்செய்வார்
பூணவே கிருஷ்ணாவ தாரனைப்போல் பொங்கமுடன் மதனகனையைத் திறவாயப்பா
ஆணவே ராஜாதி ராஜர்போலும் வப்பனே சிற்றின்ப வாசைதன்னை
காணவே வையகத்தில் அனுபவித்து காட்சியுடன் எந்நாளும் பதங்கொள்வாயே
5432.
கொள்ளவே யின்னமொரு பாகஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
விள்ளவே சித்துமுனி ரிஷியார்தாமும் வெகுவாய்ப் பாடிவைத்தார் ஈடுமார்க்கம்
மெள்ளவே யவர்களுட சாத்திரங்கள் மேதினியில் வெகுபலவாய்க் கண்டேன்யானும்
கள்ளமில்லா முரையனைத்துங் கோடாகோடி காசினியில் விருப்பமுடன் பாடினாரே
5433.
பாடினார் அனேகவிதை யீடுதானும் பண்பான மாணாக்கள் பிழைக்கவென்று
தேடியே புலிப்பாணி மைந்தாகேளு தெளிவான ஈடொன்று சொல்வேன்பாரு
நீடியே லடைக்கலமாங் குருவிதானும் நீண்மையுடன் கொண்டுவந்து செப்பக்கேளிர்
ஆடியே மயிர்போக்கி குடல்கள்போக்கி வப்பனே சூதமுடன் காந்தந்தானே
5434.
தானான பாஷாணங் கவுரிதானும் தாக்கான தாளகமு மொன்றாய்க்கூட்டி
மானான கெஞ்சாவின் வித்தும்சேர்த்து மகத்தான எலிப்பகையுங் கூடச்சேர்த்து
தேனான குடோரியது சமனதாக்கு தேட்டமுடன் அடைக்கலத்தின் வாயிலூட்டி
பானான கலசமென்ற குடுவைதன்னில் பாங்குபெற தானமைத்து வஸ்துவூட்டே
5435.
ஊட்டியே சாராயமென்ற வஸ்து வுத்தமனே தான்சேர்த்து தீயில்வைத்து
தாட்டிகமாய் வூமத்தின் விறகினாலே தகமையுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
நாட்டமுடன் சாராய சுண்டமட்டும் நலம்பெறவே தானெரித்து யெடுத்துமைந்தா
கூட்டியே குழிக்கல்லில் தன்னிலிட்டு கொற்றவனே நாற்சாமம் அரைத்திடாயே
5436.
அரைத்துமே பயிரளவாய்க் குளிகைசெய்து வன்பான சிமிழ்தனிலே பதனம்பண்ணு
திரைகடலில் உள்ளதொரு மாண்பர்தம்மில் திறளான கர்மிகளும் மர்மிகளுமுண்டு
வரையான கர்மிகட்கு சொல்வேன்பாரு மகத்தான குளிகைதனை மீவாயப்பா
கரையான குளிகைதனை மீய்ந்தபோது கனமான ரோகமது பலிக்குந்தானே
5437.
தானான பரியாசஞ் செய்தபோக்கு தாக்கான தருமத்தைக் கெடுத்தபோக்கு
மானான சமுசார வாழ்க்கைதன்னை மார்க்கமுடன் தான்கெடுத்த பாவிகட்கும்
கோனான குருதனையே துரோகஞ்செய்து குடிகெடுத்த சண்டாளர் துரோகிகட்கு
தேனான ஸ்திரிசங்கஞ் செய்துமல்லோ தெருதனிலே வளையவிட்ட பாலிக்காமே
5438.
பாவியாஞ் சிசுவதைகள் செய்தபேர்க்கு பாருலகில் கருதனையே யழித்தபேர்க்கு`
ஆவியுடன் காயமதை யழிக்கவல்லோ வழும்புமிக செய்ததொரு பாவியோர்க்கு
நாவிதனைப் பால்தனிலே கலந்தபேர்க்கும் நட்பான நேசமதைக் கெடுத்தபேர்க்கும்
காவிக ஷாயமது பூண்டஞானி கருவான சித்தர்தமைக் கெடுத்தோர்க்கே
5439.
கெடுத்துமே நயம்பேசி கரங்கள்பேசி கெடுவழிக்கு யேதுவகைத் துரைகள்பேசி
அடுத்ததொரு கதாபாத்திரம் உள்ளபேரை அகடான வார்த்தைகளும் மிகவுங்கூறி
கொடுத்ததொரு பொருள்தனையே மோசஞ்செய்து கொற்றவர்க்குத் துரோகமது செய்தபேர்க்கும்
தடுக்காமல் கொடுக்குமொரு புண்ணியோரை தவிர்க்கவே செய்வதற்கு மொழிதான்கேளே
5440.
கேளேதான் நம்பியே துரோகஞ்செய்த நெடுங்கால சண்டாள மாண்பருக்கும்
நாளேதான் போகாமல் கூலிவாங்கி நலம்பெறவே தொழில்தனையே கெடுத்தபேர்க்கும்
பாலேதான் பார்த்தவுடன் நயங்கள்பேசி பண்பாகக் காணாட்டல் முறைகள்பேசி
ஆளேதான் கண்டவுடன் சூதுபேசி அவனிதனி லிருந்ததொரு மாந்தருக்கே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக