பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5511-5520

5511.
கொள்ளவே சீனபதி பெண்களுக்கு கொட்டினேன் ஈடுவகை யனேகமுண்டு
மெள்ளவே குளிகைகொண்டு யானுமல்லோ மேதினியில் எழுகடலுஞ் சுத்திவந்தேன்
தெள்ளவே புலிப்பாணி மைந்தாகேளு தேர்வேந்த ராஜரிடம் சென்றுயானும்
வள்ளலாம் வித்தையது சிமிட்டுவித்தை வரைகோடி திறைகோடி கறைகண்டேனே
5512.
கண்டதொரு வேதைதன்னில் சிடிகைவேதை கண்ணுக்குத் தோற்றாது கடினவேதை
விண்டதொரு வேதையிலே கருவுவேதை வித்தகனாய் இருந்தாக்கால் கண்டுகொள்வாய்
கொண்டதொரு வுருப்பதனில் குறையிலானால் கூரறிய புத்திதனில் மிகுந்தவானாய்
கண்டறிந்து ஒருவனைநீ தோழனாக காசினியில் சீஷபதி யமைத்துக்கொள்ளே
5513.
கொள்ளவே சீஷனாய்த் தேடிக்கொள்ளு கொற்றவனே யுந்தமக்கு உரியவாராய்
உள்ளபடி கபடுபொய் சூதுதந்திரம் வுற்றுருமை யில்லாத புத்திவானாய்
எள்ளளவும் மனந்தனிலே களங்கமில்லா யெழிலான கற்றறிவு பாலனாக
தெள்ளுதமிழ் பண்டிதத்தில் அதிகவானாய் தேற்றமுடன் சீஷன்தனைநாடுவாயே
5514.
நாடியே சீஷனைக்கொண்டுமல்லோ நற்பாலா யுந்தனுக்குத் தேவையான
நீடியதோர் கருவிகரணாதியெல்லாம் நீட்சியுடன் உந்தனுக்குத் தருகவென்று 
தேடியே கண்டுமிக வாராய்ந்தல்லோ தெளிவான தோழமைத்தான் கண்டுமல்லோ
வாடியே திரியாமல் மனமேங்காமல் மார்க்கமுடன் கருதொழிலைச் செய்திடாயே
5515.
செய்யவே கருமான மேதென்றாக்கால் சிறப்புள்ள யெரிகாலன் வித்துதானும்
பையவே மருளினூ மத்தைவித்தும் பாங்கான பொன்னினா வாரைவித்தும்
வையகங்கள் புகழும் கோரக்கர்வித்தும் வானான சூரியனார் காந்திவித்தும்
துய்யதொரு குடைக்காளான் பூவுஞ்சேர்த்து துப்புரவாய் ஆத்மஜலந் தன்னிலாட்டே
5516.
ஆட்டவே நாற்சாம மானபின்பு வப்பனே குளிகையது செய்வாயப்பா
தேட்டமுடன் பயரளவாய்க் குளிகைசெய்து செம்மலுடன் நிழல்தனில் தானுலர்த்தி
நீட்டமுடன் பஞ்சாட்சர வுருவுதானும் நீதியுடன் லட்சமது போட்டபின்பு
வாட்டமுடன் பரணிதனில் அடைத்துக்கொண்டு வளம்பெறவே தானெடுத்து வளமைகேளே
5517.
கேளப்பா மங்கையரைக் கண்டபோது கெவனமுடன் அவர்மனதும் உன்மனதுமானால்
பாளப்பா போகாமல் எந்தநாளும் பட்சமுடன் உன்மீதில் மனம்லயித்து
ஆளப்பா சொல்லுகிறேன் குளிகைதன்னை வப்பனே யறுசுவையாம் பதார்த்தந்தன்னில்
மீளப்பா போகாமல் தாம்பூலத்தில் மிகபடவே பாலதனில் கொடுத்திடாயே
5518.
கொடுக்கவே மங்கையரும் மனதுவந்து குவலயத்தில் எந்நாளும் உந்தன்மீது
அடுக்கவே மற்றொருவர் தன்னைக்கண்டால் வப்பனே சத்தருவாய் மனதிலெண்ணி
ஒக்கமுடன் உன்பக்கல் சதாகாலந்தான் உத்தமனே பட்சமது கருணைகூர்ந்து
நடுக்கமுடன் ஏவலுக்கு முன்னேநின்று நாள்தோறும் கருணையது புரிவான்தானே
5519.
தானான யின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
கோனான சித்தர்களும் முனிவர்தேவர் குவலயத்தில் கோடிவித்தை வினோதஞ்செய்தார்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவான வித்தையெல்லாம் மறைத்துப்போட்டார் 
மானான வித்தையிது மாந்திரீகவித்தை மன்னவனே கண்மணியே சொல்வேன்பாரே
5520.
சொல்லவே காலாங்கி தாள்பணிந்து சுத்தமுள்ள எந்தனுக்கு உகந்தசீஷா
வெல்லவே வையகத்தில் மாண்பர்தாமும் விருப்பமுடன் இதிகாச வித்தையெல்லாம்
புல்லவே யுந்தனிட மறிந்துகொண்டு புகழான குருவென்று மனதிலெண்ணார்
அல்லல்படும் துயரமது மிகவாய்ச்செய்து வப்பனே துரோகமது செய்வார்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக