5371.
நில்லவே காலாங்கி தாள்பணிந்தேன் நிலையான குளிகையது பூண்டுகொண்டு
பல்லவே சீனபதி சென்றேயானும் புகழான காண்பர்களைக் கண்டுமல்லோ
வெல்லவே வாதமென்ற கடலையப்பா வேதாந்தத் தாயினது கிருபையாலே
செல்லவே ஞானோப தேசங்கேட்டு துப்புரவாய் வாதமதை போதித்தேனே
5372.
போதித்தேன் சீனபதிப் பெண்களுக்கு புகழான வாதமென்ற கடலையப்பா
ஆதித்தன் சந்திரன்போல் அதிதவித்தை யவர்களிடம் யானதென்று போதித்தல்லோ
சோதித்து மனந்தேறி புத்திகொண்டு சொற்பெரிய வேதையெல்லாம் துடர்ந்துபற்றி
நீதியாய் பூநீரின் மார்க்கங்கண்டு நிலையான வுப்புமணி செய்தேன்பாரே
5373.
பாரேதான் யின்னமொரு மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் சீனபதி வடபாகத்தின் நெடியான கடலோரந் தன்னிலப்பா
வேரேதான் பூநீரு விளையும்மார்க்கம் விடங்கண்டு தலங்கண்டு விதியுங்கண்டு
சீரேதான் வளர்பூமி வளமுங்கண்டு சிறப்பான பூநீரை யெடுத்தேன்தானே
5374.
தானான பூநீரை யெடுத்துமைந்தா தண்மையுடன் மூசையென்ற பாண்டமிட்டு
கோனான நவவாசல் துவாரமிட்டு கொற்றவனே பூநீரை யதிற்பொதிந்து
தேனான மனோன்மணியாள் பாதம்போற்றி தெளிவுபெற சீனபதி மாண்பருக்கு
பானான பூநீரை யுருக்குதற்கு பட்சமுடன் தீமூட்டி வழிகண்டேனே
5375.
கொண்டேனே பூநீரை யுருக்கியல்லோ கொற்றவனே மாண்பர்களும் பிழைக்கவென்று
கண்டேனே பூநீரின் மார்க்கமெல்லாம் கனம்பெறவே தானுருக்கி பலகையாக்கி
அண்டர்முனி தேவாதி ரிஷிகளெல்லாம் அன்பாகக் கண்ணாடிக் காச்சுதற்கு
விண்டதொரு வழிதுரையும் அறியாமற்றான் விட்டாரே தேவசித்து முதலானோரே
5376.
முதலான முப்புவென்ற பலகைதன்னை முயற்சியுடன் பிரதியென்ற மூசையிட்டு
பதமுடனே தானுருக்கி யெடுத்துமைந்தா பாலகனே மயிர்கம்பி இரும்பாலப்பா
கதமுடைய ரசமதுபோல் நூணிருத்தி கசகாமல் பலகைதனை வுருக்கிக்காய்த்து
இதமுடனே மண்கவசந் தன்னைநீக்கி யெழிலான மணியதனைக் கொட்டுவீரே
5377.
கொட்டவென்றால் மணியதுவும் சதகோடிகாணும் கொற்றவனே பூநீராம் பலகைதன்னை
திட்டமுடன் தானுடைத்து மூசையிட்டு திறமுடனே பாலமணி யமைக்கவில்லை
குட்டமுள்ள தொங்கலது நூறுகம்பம் குறிப்பாக மயிர்கோதி தொங்கவிட்டு
பட்டதொரு பூநீரின் பலகைதன்னை பாங்குபெற கடல்நுறையால் சுத்திசெய்யே
5378.
செய்துமே தானுருக்கி யெடுத்துமைந்தா செம்மலுடன் கருக்கட்டி வார்க்கும்போது
பையவே யிரும்பினது மயிர்ப்பாய்ச்சலப்பா பாங்கிபெற பூநீறு வுருக்கிச்சென்று
மெய்யான கருவதனில் பாய்ந்துமல்லோ மேன்மையுடன் சதகோடி மணிகளாகும்
பொய்யாது காலாங்கி நாதர்வாக்கு பொங்கமுடன் செய்துவர வரிசைகேளே
5379.
கேளேதான் கவசமது வுடைத்துப்பாரு கெடியான பாலமணி யென்னசொல்வேன்
பாளேதான் போகாமல் மணியுமாகி பாங்கான பூநீரு மணியுமாச்சு
நாளேதான் விட்டகுறை யின்னமொன்று நலமான பச்சைமணி புகலுவேன்பார்
சூளேதான் பூநீரு பலகைதன்னை சுத்தமுடன் தானெடுக்க வரிசைகேளே
5380.
வரிசையாம் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
பரிசையுள்ள பூநீரு பலகைதன்னை பாங்குபெற ரங்கென்ற பூநீர்தன்னை
விரிவுடனே தான்சேர்த்து வுருக்கியல்லோ விருப்பமுடன் கருக்கட்டி வார்க்கும்போது
சரியான கருவதனில் பாய்ந்துமல்லோ சட்டமுடன் மயிர்பாச்சல் நிறையலாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக