பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5731-5740

5731.
வந்ததொரு சித்துக்கு முறைமைசொல்வேன் வளமுடனே சோடசமா மொன்றுமூன்று
சிந்தனையாய் யவர்நூலில் கண்டாராய்ந்து சீருடனே யானுரைத்தேன் முறைதப்பாது
சுந்தரனே காலகண்டர் முனிவர்தாமும் சுத்தமுடன் யவர்மரபு யேதென்றாக்கால்
தந்திரமாங் கள்ளருட ஜாதியாகும் தாரணியில் அவர்நூலிற் கண்டவாறே
5732.
வாறான தலைமுறைகள் ஒன்றுபத்து வளமையுடன் அவர்நூலில் சொல்லலாகும்
நூறாண்டு வெகுகால மிருந்தசித்து நுட்பமுடன் சீஷவர்க்கங் கொண்டசித்து
காறான யின்னமொரு மார்க்கங்கேளு கருவான புலிப்பாணி மைந்தாபாரு
ஆறான சுப்பிரமணியர் மரபேதென்றால் வப்பனே சைவமென்ற பீடமாமே
5733.
பீடமாந் தலைமுறைகள் ஏதென்றாக்கால் பேரான நூற்றிரண்டு பத்துமூன்று
கீடாதி நூல்களிலே கண்டவாறு கிருபையுடன் நானறிந்த மட்டுஞ்சொன்னேன்
நீடான யூகிமுனி மரபேதென்றால் நிசமான குரும்பருட ஜாதியாகும்
தாடான தலைமுறைகள் என்னசொல்வேன் தாக்கான பதினெட்டு ஒன்றுமூன்றே
5734.
ஒன்றான சாதியப்பா இன்னஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி வுகந்துகேளு
நன்றான ஜெமதக்னி ஜாதிபேதம் நலமான சைவமென்ற ஜாதியாகும்
குன்றான மலையேறி கிரணந்தன்னை கிருபையுடன் கண்டல்லோ சாதமுண்போர்
வென்றிடவே தலைமுறைகள் நான்குபத்து வேகமுடன் வந்நூலில் கண்டோம்பாரே
5735.
பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பாங்கான திரணாக்கிய முனிவர்தானும் 
தேரேதான் சைனகருட ஜாதியாகும் தேரான பிரபுலிங்க லீலைநூலார்
நேரேதான் அவர்நூலில் ஜாதிபேதம் நேர்மையுடன் கண்டறிந்த ஜாதிமார்க்கம்
வேரேதான் தலைமுறைகள் ஈரெட்டொன்று வித்தகனே நூல்தனிலே கண்டோம்பாரே
5736.
பாரேதான் சண்டேசர் ஜாதிமார்க்கம் பாங்கான வள்ளுவனார் என்றேயாகும்
நேரேதான் தலைமுறைகள் ஒன்றுபத்து நேர்மையுடன் அவர்நூலில் சொன்னநீதி
சீரேதான் சித்தர்முனி ரிஷிகள்தேவர் சிறப்புடனே பாடிவைத்த நூலைக்கண்டு
பேரேதான் வேர்பிரித்து பகுத்துயானும் பேரின்ப நிலைநின்று பாடினேனே
5737.
பாடினேன் இன்னமொரு மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நாடியே திருமூல வர்க்கத்தார்கள் நலமான ஜாதியது மரபேதென்றாக்கால்
தேடியே வேளாள ஜாதியாகும் திருக்கூட்ட மெத்தவுண்டு சொல்லொண்ணாது
ஆடியதோர் தலைமுறைகள் ஏதென்றாக்கால் வப்பனே ரெண்டுபத்து வொன்றுதானே
5738.
ஒன்றான சாத்திரத்தின் உளவாராய்ந்து வுத்தமனே பலநூலுங் கண்டுதேர்ந்து
சென்றுமே ரிஷிமுனிவர் கூறுநூலும் சிறப்பான சாத்திரத்தின் தொகுப்பைக்கண்டு
வென்றிடவே காலாங்கி தாள்பணிந்து வேகமுடன் குளிகையது பூண்டுகொண்டு
குன்றான மலைகுகைகள் யானுங்கண்டு கொற்றவனே காவியந்தான் கூறினேனே
5739.
கூறினேன் காவியந்தான் ஏழாயிரமாகும் கூறான சத்தகாண்டம் போலநூல்கள்
மீறியதோர் நூலுண்டோ வையகத்தில் மிக்கான நூலிதுபோல் ஆர்தான்சொன்னார்
மாறுபா டாகவல்லோ சாத்திரநூல்கள் மகத்தான சித்துமுனி சொன்னாரப்பா
ஆறுதலம் போலாக யிந்தநூல்தான் வப்பனே யுந்தனுக்கு வரைந்திட்டேனே
5740.
அறைந்ததொரு யின்னமொரு மார்க்கங்கேளு வப்பனே புலிப்பாணி மைந்தாபாரு
நிறைந்ததொரு சித்தர்முனி ரிஷிகளானோர் நீடாழி யுலகுதனி இருந்தவாறும்
குறைந்ததொரு வவரவர்கள் வயதுமார்க்கம் கூறுகிறேன் வையகத்தில் கண்டாராய்ந்து
மறைந்ததொரு சமாதியின்தன் மார்க்கமெல்லாம் மன்னவனே யுந்தனுக்கு நிகழ்த்துவேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக