பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5491-5500

5491.
கொள்ளாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கூறான வித்தையிது சொல்லொண்ணாது
விள்ளவே யிருபிறப் பாளரப்பா விருப்பமுடன் இறந்ததோர் சடத்தைக்கண்டு
மெள்ளவே மயானமதில் சென்றுபாலா மேன்மையுடன் கருமுடிக்க சொல்வேன்கேளு
தெள்ளியதோர் கோல்ரெண்டு முழந்தான்ரெண்டு தேற்றமுடன் கைதனிலே பிடித்திடாயே
5492.
பிடித்திடவே மசானகரை சுத்திவந்து பேரான வுருவதும் லட்சம்போடு
நடித்திடவே வுருவதுவும் யேதென்றாக்கால் நாதாந்தத் தாயினது பீஜாச்சரந்தான்
கொடுத்திடவே வங்சிங்மங் கென்றேயோது கொற்றவனே லட்சமுரு குறையாதைய்யா
விடுத்ததொரு கழிதனக்கு வுருவுமேற்றி விருப்பமுடன் சொல்லுகிறேன் தண்மைபாரே
5493.
வண்மையாம் புனுகுடனே பூரந்தானும் வளமான ரோஜனையுங் கஸ்தூரிசேர்த்து
நண்மையாம் ஆத்மஜலந் தன்னிலாட்டி நலம்பெறவே கழிதனக்கும் பூசியல்லோ
திண்மையுடன் சவந்தனையே சுத்திவந்து தீர்கமுடன் சடம்மேகும் சமையந்தன்னில்
உண்மையாம் தலைமாடு கால்மாடாக வுத்தமனே நெல்லதனை யுருட்டிடாயே
5494.
உருட்டவே கைபிடித்த கழிதானப்பா வுத்தமனே தானெடுத்து செப்பக்கேளு
பொருப்புடனே சவந்தானும் வேகும்போது பொங்கமுடன் வலதுபக்கம் தடியால்குத்து
கருவுடைய நிணமதுவும் கழியில்தாக்கு கருத்துடனே இடதுபுறம் இப்படியேதாக்கு
மருப்பணைய நிணமதுவும் கழியில்தாங்கி மகத்தான மாத்திரைக்கோல் பிணமுமாச்சே
5495.
ஆச்சப்பா கருவென்ற கோலுமாச்சு வப்பனே கோலதனைப் பதனம்பன்னு
பாச்சலுடன் வையகத்தி லிருந்துகொண்டு பாங்குடனே கிருஷ்ணாவ தாரனைப்போல்
மாச்சலுடன் கலவிதனி லிருந்துகொண்டு மகத்தான மாதுகளை யனுபவித்து
ஏச்சலது வாராமல் எந்தநாளும் எழிலான சித்துதனை யாடுவீரே
5496.
ஆடவென்றால் சித்ததுவும் ஏதென்றாக்கால் வப்பனே நீபிடித்த கழிதானப்பா
போடவே மாதர்தனைக் கண்டபோது பொங்கமுடன் கழிதன்னால் தொட்டுப்பேச
நீடவே வலதுகை கழிதான்தொட்டால் நீதியுடன் புருஷனவன் வசியமாவான்
சாடவே இடதுகை கழிதான்தொட்டால் சாங்கமுடன் மங்கையரும் வசியந்தானே
5497.
தானான வசியமது யேதென்றாக்கால் தகமையுடன் கழிக்கொம்பே வசியமாச்சு
கோனான வித்தையிது கருதான்வித்தை கூறுகின்றேன் பிரம்மகுல கிருதானவித்தை
வேனான வித்தையிது வினோதவித்தை வேடிக்கை கருவிதனை யாருங்காணார்
மானான வித்தையிது வையகத்தில் மார்க்கமுடன் சென்றல்லோ செய்துபாரே
5498.
செய்யவே ஜெகதலத்தி லுன்னையப்பா தோற்றமுடன் சித்தனென்ற புருஷனென்பார்
பையவே யந்தனிடம் கிட்டிவந்து பாங்குடனே கருவினுட வழியுங்கேட்பான்
மெய்யான கருவினுட வழியுஞ்சொன்னால் மேன்மைபெற வுந்தனுக்கு நிதியுமீவார்
உய்யவே சதாகாலம் வூழியனாக வுத்தமனே காத்திருப்பார் வுண்மைபாரே
5499.
உண்மையாம் லோகமதில் சித்தனாக ஓகோகோ நாதனைப்போல் வாழ்வாயப்பா
வண்மையுள்ள சித்தனென்று வையகத்தோர் யுலகுதனில் எந்நாளும் வாழ்த்துவார்கள்
திண்மையுடன் ராஜாதி ராஜர்பக்கல் தீரமுடன் இக்கருவை கொண்டுசென்று
கண்மைபெற கருவாட்டம் ஆடினாக்கால் கனகமென்ற நிதியனைத்தும் கொடுப்பார்தாமே
5500.
கொடுத்துமே யுந்தனுக்கு சோடசாரம் கொற்றவனே மதிமந்திரி யாகக்கொள்வார்
அடுத்ததொரு வேந்தர்களும் உன்னைக்கண்டால் வப்பனே சற்பாத்ர சித்தனென்பார்
நடுக்கமுடன் வையகத்தோர் எல்லாருந்தான் நாடியே யுன்பாதம் பணிவாரப்பா
ஒடுக்கமுள்ள கருவிகர ணாதிவித்தை ஓகோகோ போகரிட வித்தைதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக