பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5281-5290

5281.
தீட்டென்று சொல்லுவது தருமமாமோ திகழான லோகபதி மாண்பருக்கு
வாட்டமுடன் லோகாதி வையகங்கள் மானிலத்தில் எல்லவரும் மதியேகெட்டு
தேட்டமுடன் சாஸ்திரத்தில் தீட்டேசொல்லி தெளிவான மதபேதங் கூறியல்லோ
நீட்டமுடன் மாண்பரெல்லாம் இந்தபாகம் நிதி கெட்டு மதிகெட்டாரே
5282.
கெட்டாரே மானிலத்தில் மாண்பரெல்லாம் கீர்த்தியுடன் இந்தவண்ண பாகத்தாலே
சட்டமுடன் சீனபதிப் பெண்களுக்கு சாஸ்திரங்கள் ஜாதியில்லை தீட்டுமில்லை
இட்டமது போலிருந்து போகஞ்செய்து யெழிலான பிறவிமக்க ளனேகமுண்டு
அட்டதிசை தான்புகழுஞ் சீனத்தார்க்கு வன்பான மதியநிலை யதிகந்தானே
5283.
தானான இன்னமொரு மார்க்கம்பாரு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
பானான கடலேழுஞ் சுற்றும்போது பாலகனே கருமிகளும் தர்மியுண்டு
மானான நல்லவர்போல் சிநேகிப்பார்கள் மர்மமதை மனதில்வைத்து கொல்வார்பாரே
5284.
கொல்லவந்த மித்துருவாஞ் சத்துருவுமார்க்கு குறிப்புடனே சொல்லிவைத்த சிங்கியப்பா
வெல்லவே யவரெனக்குக் கொடுத்தபாகம் விருப்பமுடன் உந்தனுக்குச் சொன்னநீதி
புல்லவே ஜெகஜாலம் சிங்கிஜாலம் புகழான சத்துருவைக் கொல்லுஞ்ஜாலம்
மெல்லவே மித்துரு போலிருந்துகொண்டு மேதினியில் ஜாலமதை செய்வார்தாமே
5285.
தாமான ஜாலமது யென்னவென்றால் தண்மையுடன் சொல்லுகிறேன் கண்ணேபாராய்
நாமேதான் கௌரியென்ற பாஷாணந்தான் நலமான எலிப்பகையுந் தன்னோடொக்க
போமேதான் வீரமென்ற காடிதானும் பொங்கமுடன் வேந்தோன்றி கணையுங்கூட்டி
தீமேதான் செய்யுகின்ற முறுவல்தானும் சிறப்பாக கணைவண்டு தானுங்கூட்டே
5286.
கூட்டியே கருஞ்சோரா செஞ்சோராதானும் குடிகெடுக்கும் குமுணாவின் கணையுங்கூட்டி
தாட்டிகமாய்ச் செங்கொட்டைப் பூரந்தானும் சட்டமுடன் சரியெடையாய் நிறுத்திக்கொண்டு
வாட்டமுடன் பாம்பினது விஷத்தாலாட்டி வளம்பெறவே சிமிளிதனில் பதனஞ்செய்து
ஆட்டமது வாடுதற்கு வயணஞ்சொல்வேன் வப்பனே எந்தனது முறைமைபாரே
5287.
முறையான முறையதும் என்னவென்றால் மூர்க்கராங் கருமிகட்கும் சண்டாளர்க்கும்
கறையான நேத்திரத்தில் கண்டபோது கரம்பேசி நயம்பேசி குடிகெடுக்கும்
திறையான பாவிகட்கு யிந்தபாகம் திகழுடனே வுள்ளங்கால் தாக்குவாய்நீ
சிறைகொண்டு மாநிலத்தில் நோயுங்கண்டு சீரழிந்து குழிவிழுந்து போவான்பாரே
5288.
போவானே திரேகமெல்லாம் புண்ணுமாகி பொங்கமுடன் வையகத்தி னாசைவிட்டு
சாவானே அறு திங்கள் சட்டமுடன் காலில்வந்து பணிவானானால் 
நோவான பிணியதுவுந் தீருதற்கு நுட்முடன் வெள்ளையென்ற குன்றிதானும்
தேவான தழையதுவும் பிடுங்கிவந்து தேற்றமுடன் பாதாள மூலிசேரே
5289.
மூலியென்ற சிறுகீரை வேருஞ்சேரு முனையாகச் சரியெடையாய் யெடுத்துக்கொண்டு
நீலியென்ற மூலியப்பா சரிநேரொக்க நீமகனே நினைவாகப் பாண்டமிட்டு
சாலியனார் பாண்டமதிற் ஜலமேவிட்டு சாங்கமுடன் கியாழமது செய்துகொண்டு
நாலிலொரு கியாழமது காய்ந்துதானால் நலமான கியாழமதை யிறக்கிடாயே
5290.
இறக்கியே கியாழமது நாளொன்றுக்கு யென்மகனே நீநினைவாய் நாழியாக
உறக்கமது வாராமல் அந்திசந்தி யுத்தமனே இருவேளைக் கொள்வாரானால்
திறமுடைய கியாழமது வேகத்தாலே தீருமே குழுவிழுந்த புண்ணுமாறும்
நிறமான முன்சொன்ன மூலியப்பா நித்தமுமே மேலரைத்துப் பூசிடாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக