5791.
தவசியென்றால் மாண்பருக்கு உகந்தசித்து தாரணியில் சமுசார வாழ்க்கையோடும்
பவக்கடலைத் தானொழித்துப் பாரின்மீது பட்சமுடன் தானிருந்த கொடியசித்து
தவப்பெருமை கொண்டல்லோ ரிஷிகளோடும் தயங்காமல் அரசர்முதல் வணங்குஞ்சித்து
நவகண்ட வையகமும் அறிந்தசித்து நலமான வியாசமுனி யென்றசித்தே
5792.
முனியான சித்துமுனி வியாசர்தாமும் மூதுலகில் பெருமைதனை யறிந்தசித்து
கனிவோடும் பாலோடும் ரிஷிகள்தம்மை கண்ணினால் கண்டறிந்த சித்துவாகும்
பனிபோன்ற மலைநாடு பார்த்தறிந்து பட்சமுடன் சென்றல்லோ வுபதேசங்கள்
தனியாகத் தானிருந்து பிரணவத்தை தண்மையுடன் தானறிந்த சித்துதானே
5793.
தானான சித்துக்குச் சமாதியில்லை தாரணியில் வெகுகால மிருந்தசித்து
கோனான குருக்கள் மகாரிஷிகள்தேவர் கொற்றவனார் சீஷவர்க்க மாண்பர்தன்னை
மானான வையகத்தி அறிந்தசித்து மகத்தான வியாசமுனி சித்துபோல
தேனான வேதமதை யறிந்தசித்து திறைகடலிற் கண்டதுண்டோ வுண்மைதானே
5794.
உண்மையிது இன்னமொரு மார்க்கங்கேளு வுத்தமனே புலிப்பாணி மைந்தாபாரு
வண்மைபெறுந் தேரையர் என்னுஞ்சித்து வளமான ரோகமதைத் தீர்க்குஞ்சித்து
நன்மைபெற வயததுவும் ஏதென்றாக்கால் நாதாந்த சித்துமுனி கும்பயோனி
உண்மையுடன் எழுதிவைத்த சாத்திரத்தில் தீர்க்கமுடன் வயதுமுந்நூ றென்னலாமே
5795.
என்னவே வயததுவும் முந்நூறாண்டு யெழிலான தேறையர் முனிவருக்கு
பன்னவே சாத்திரத்தின் வகுப்பைப்போல பட்சமுடன் கண்டறிந்து சொல்லலாச்சு
துண்ணவே யிவர்தமக்கு சமாதியில்லை துப்புரவாய் ஜெகத்தாசை விட்டோர்தாமும்
முன்னவே யகஸ்தியனார் உபதேசங்கள் முறைப்படியே கண்டறிந்த சித்துமாச்சே
5796.
முறையான கருவிகர ணாதியெல்லாம் முயற்சியுடன் தாமறிந்த மாயாசித்து
கறைபோன்ற பதினென்பேர் சாத்திரத்தை கருத்தினிலே எந்நாளும் மனதுவந்து
மறைவான பொருளெல்லாம் மாண்பருக்கு மகத்தான முறைப்பாடு யாவுங்கண்டு
குறையாமல் உபதேசஞ் செய்தசித்து கொற்றவனார் தேறைய முனிவர்தாமே
5797.
முனியான தேரைய முனிவரப்பா மூர்க்கமுடன் சங்கமென்ற சபையிற்சென்று
தனியாக வகஸ்தியரின் பின்தொடர்ந்து சட்டமுடன் பிணிதீர்க்க சித்துவாகும்
பனிபோன்ற வனாந்திரத்தில் இருக்கும்மூலி பாங்கான சஞ்சீவி மூலிதன்னை
மனிதர்களை தானெழுப்பு மமுர்தமூலி மார்க்கமுடன் கண்டறிந்த சித்துபாரே
5798.
பாரப்பா யேமமென்ற வித்தைதன்னை பண்புடனே மனதுவந்து கண்டசித்து
ஆரப்பா யிவர்போலுஞ் சித்துமுண்டோ வவனிதனில் ஆரேனுங் கண்டதில்லை
நேரப்பா யேமமென்ற சித்தேயாகும் நெடிதான மலையனைத்தும் பழுக்குஞ்சித்து
சீரப்பா வையகத்தில் நெடுநாளாக சிறப்புடனே தானிருந்த சித்துமாமே
5799.
தாமேகேள் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தயவான பாலகனே மைந்தாபாரு
போமேதான் பக்கிரி யாக்கோபுவென்றும் பொங்கமுடன் சாத்திரத்தின் உரைத்தவார்போல்
நேமமுடன் வயததுவு மேதென்றாக்கால் நிலையான வாண்டதுவும் இருநூற்றுச்சொச்சம்
நாமமுடன் நபிநாயன் தன்னைக்காண நன்னயமாய் மக்கபுரி போனார்தாமே
5800.
போனாரே மலைநாடு குகைகடந்து பொங்கமுடன் நபிதனையே காணவென்று
கானாறு பாதவழி செல்லும்போது கடுங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க்கண்டு
மானான மகதேவர் பதியிலப்பா மார்க்கமுடன் வந்ததினால் உந்தமக்கு
தீனான தீன்பதியில் உந்தனைத்தான் திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக