பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5341-5350

5341.
கூட்டியே காரமது வொன்றுசேர்த்து கொற்றவனே நிம்பழத்தின் சாற்றாலாட்டி
மாட்டியே நாற்சாம மரைத்தபோது மன்னவனே மெழுகது போலாகும்பாரு
தாட்டிகமாய் மாத்திரைகள் செய்துமேதான் சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் செய்யும்வகை வரிசைகேளு நீதியுடன் கைபாகங் கண்டிடாயே
5342.
கண்டதொரு செய்பாகஞ் சொல்வேன்கேளு கருத்துடனே செம்புதனை யெடுத்துமைந்தா
விண்டபடி துலமதுவும் இரண்டேயாகும் விருப்பமுடன் தானெடுத்துக் குகையிலிட்டு
அண்டமுடன் தானுருக்கி மருந்தையப்பா வப்பனே செம்புக்குப் பாதியாக
வண்டலது போவதற்கு கிராசமீவாய் வரிசையுடன் தானெடுத்து வண்மைபாரே
5343.
வண்மையாஞ் செம்பதனைத் தகடடித்து வளமைபெற பூங்காவி தன்னிலப்பா
சண்டமா ருதம்போல லவணஞ்சேர்த்து சட்டமுடன் நிம்பழத்தின் சாற்றாலாட்டி
கொண்டபடி மேல்தனில் தகட்டிற்பூசி கொற்றவனே புடம்போட்டு யெடுத்துப்பாரு
பண்டிடுவ கிருஷ்ணாவ தாரனைப்போல் பட்சமுடன் துலங்கியது மின்னும்பாரே
5344.
மின்னவே செம்பதுவும் என்னசொல்வேன் மேதினியில் நாதாக்கள் ஆடும்கூத்து
பன்னவே செம்புதனை யெடுத்துமைந்தா பட்சமுடன் அதிதனிலே நாலுக்கொன்று
துன்னவே தானுருக்கி யெடுத்துப்பாரு துப்புரவாய் மதியதுவும் செம்புமாச்சு
கன்னபுரி வேந்தனிடஞ் சென்றுமல்லோ கருவான வித்தைதனை காட்டிடாயே
5345.
காட்டவென்றால் உந்தனுக்கு சோடசாரம் கனமுடனே செய்துமல்லோ மணந்தான்கொள்வர்
ஆட்டவொண்ணா வாட்டமது செம்பினாட்டம் வப்பனே கூர்வதற்கு நாவுமில்லை
கேட்டமுடன் செம்புதனை யெடுத்துமைந்தா தெளிவான தங்கமது பத்துக்கொன்று
தாட்டிகமாய்த் தானுருக்கி யெடுத்துப்பாரு தங்கமென்ற செம்பதுவும் சொல்லொணாதே
5346.
வொண்ணாது தங்கச்செம்பு இதுவேயாகும் ஓகோகோ நாதாக்கள் கூர்ந்ததில்லை
அண்ணாந்து பார்த்தாலும் கண்ணேகூசும் வப்பனே நடராஜா விக்கிரந்தான்
மண்ணாலே கருவதுவுங் கட்டியல்லோ மார்க்கமுடன் செய்துவைத்தார் கருவூரார்தான்
திண்ணமுடன் பரிசனமாஞ் செம்புவேதை செப்பினேன் லோகமதி மாண்பருக்கே
5347.
மாண்பான மாண்பருக்கு இந்தவேதை மார்க்கமுடன் யார்சொல்லப் போராரப்பா
வீண்போன்ற கருமிகட்கு பாவிகட்கும் விள்ளாது சொன்னாலும் விள்ளாதப்பா
சாண்கொண்ட சிறுபாலர் புத்திமானோர் சட்டமுடன் சொன்னாலுங் கண்டுகொள்வார்
ஆண்பான வித்தை யதிவதித வித்தை யப்பனே சிவயோகிக் காகுந்தானே
5348.
தானான யின்னமொரு பாகஞ்சொல்வேன் தகமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு வுரைத்தநீதி
மானான மனோன்மணியாள் பாதம்போற்றி மகத்தான செம்புதனைக் கூறுவேன்பார்
தேனான செம்பென்ற தோட்டிதன்னை தேற்றமுடன் தானெடுத்து செப்பக்கேளே
5349.
செப்பவென்றால் முறைதனை சொல்வேன்பாரு தெளிவான புலிப்பாணி மைந்தாகேளு
ஒப்பமுடன் அபினியே ஒன்றேயாகும் ஒளிவான தொட்டியது ஒன்றேயாகும்
செப்பமுடன் காரமது ஒன்றேயாகும் நெடிதான சாரமது ஒன்றேயாகும்
செப்பவே குழிக்கல்லில் தன்னிலிட்டு ஜெயம்பெறவே தானரைத்து வரிசைகேளே
5350.
வரிசையுடன் முறையோடுங் குறைவில்லாமல் வளம்பெரிய மூசைதனில் அடைத்துமைந்தா
பரிசையது புகைகொண்டு மேலிடாமல் பட்சமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
கரிசலது வாராமல் உருக்கிமைந்தா கனமான மூசைதனை யுடைத்துப்பாரு
துரிசான களிம்பதுவும் நீங்கியல்லோ துப்பற்ற செம்பதுவும் ஆகும்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக