பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5741-5750

5741.
நிகழ்த்துவேன் காலாங்கி நாதர்தம்மை நெடுங்கால செய்தியெலாம் நிகழ்த்துவேன்யான்
புகழான காலாங்கி நாதர்தாமும் விண்ணியனார் வெகுகால மிருந்தசித்து
அகந்தனிலே மூன்றுயுகஞ் சமாதிசென்று வப்பனே முயற்சியுடன் வந்தசித்து
ஜெகந்தனிலே சீனபதி தேசந்தன்னில் சிறப்புடனே குளிகைகொண்டு போனசித்தே
5742.
சித்தான காலாங்கி நாதர்தானும் சிறப்புடனே சீனபதி தன்னிற்சென்று
முத்தான காலனது வருளும்பெற்று முனையான சமாதிதனில் இறங்கியல்லோ
சத்தமுடன் அசரீரி வாக்கினோடும் தாரணியில் சமாதிமுகம் இருந்துகொண்டு
பத்தியுடன் சீனபதி மாண்பருக்கு பலகாலுந் தரிசனைகள் புரிகுவாரே
5743.
புரிகுவார் வயதினுட மார்க்கந்தன்னை புகலுவேன் காலாங்கி நாதருக்கு
சரியுடனே மூவாயிரஞ் சொச்சமப்பா சங்கமுடன் வயதுதான் என்னலாகும்
குறியான வருடமது மூவாயிரந்தான் குறிப்புடனே மகாநூலிற் சொன்னநீதி
நெறியுடனே வையகத்தி லிருந்துமல்லோ நேர்மையுடன் சமாதிமுகம் சென்றார்தானே
5744.
தானான போகரிஷி மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வயததுவும் முந்நூரென்று பான்மையுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
தேனான குளிகையது பூண்டுகொண்டு தேசமெலாஞ் சுற்றிவந்தேன் காலந்தானே
5745.
காலமாம் வெகுகால மடியேன்தானும் காலாங்கி நாதருட கிருபையாலும்
கோலமுடன் திருக்கமலம் வீற்றிருக்கும் கொம்பனையாள் மனோன்மணியாள் கிருபையாலே
ஆலகால முடையதொரு வரன்பாகத்தில் வப்பனே வையகத்தில் யானுமல்லோ
காலமெலாஞ் சுத்திவந்து யடியேன்தானும் தாரணியில் சித்துமுனி ரிஷிகண்டேனே
5746.
கண்டேனே வெகுகோடி சித்துதம்மை காலாங்கி நாதருட கிருபையாலே
கொண்டதொரு வையகத்து வதிசயங்கள் கொற்றவனே யடியேனுந் தானறிந்து
உண்டான வுளவுபதி மார்க்கமெல்லாம் வுத்தமனே கண்டல்லோ மிகவாராய்ந்து
பண்டிதங்கள் மிகப்பார்த்து பலநூல்சேதி பாங்குடனே சீனபதிக் குரைத்திட்டேனே
5747.
உரைத்தேனே சீனபதி மாண்பருக்கு வுத்தமனே லோகவதி சயங்களெல்லாம்
வுரைத்தேனே சீனபதிப் பெண்களுக்கு வகுப்பான சித்துமுனி ரிஷிகள்மார்க்கம்
திரைகடல்சூழ் அஷ்டாங்க யோகமெல்லாம் திரட்டினேன் போகரே ழாயிரந்தான்
புரையொன்றும் நேராமல் புகழ்ந்தநூலாய் புகட்டினேன் சீனபதி மாண்பருக்கே
5748.
மாண்பான புலிப்பாணி மைந்தாகேளு மகத்தான வையகத்தில் முந்நூறாண்டு
ஆண்மையுடன் நானிருந்தேன் அதிசயங்கள் வப்பனே யான்கண்ட வாறுமட்டும்
வீண்போகாக் காலமது சாத்திரத்தின் வீரான வுளவுநி தானங்கள்கண்டு
தாண்மையுடன் யானுரைப்பேன் இதிகாசங்கள் சட்டமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
5749.
கேளேதான் ரோமரிஷி வயதுமார்க்கம் கெவனமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நாளேதான் போகாமல் ரோமர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் சென்றுமல்லோ
ஆளேதான் வருஷமது வையகத்தில் வப்பனே தானிருந்து வெளியுமாகி
பாளேதான் போகாமல் வருஷமறுநூறு பாங்குடனே வீற்றிருந்த சித்துமாமே
5750.
சித்தான மச்சமுனி வாறேதென்றால் சிறப்பான வையகத்தி லிருந்தசேதி
பக்தியுடன் முந்நூறு வாண்டுமட்டும் பகவானைத் துதிசெய்து காயங்கொண்டு
முத்தியுடன் சமாதிக்குச் சென்றுமல்லோ மூர்க்கமுடன் மூவாண்டு சமாதிபூண்டு
கத்தனையே தானினைத்து கைலைதன்னில் காசினியை விட்டுமல்லோ யேகினாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக